விண்வெளியில் அரிசியை விளைய செய்து சீன விண்வெளி வீரர்கள் சாதனை
- சீனாவால் விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில், நெல்(rice) மற்றும் தாலே கிரெஸ்( Thale cress) போன்ற தாவரங்களை செயற்கை முறை கட்டமைப்பில் வைத்து வளர்த்து சாதனை படைத்துள்ளனர்.
- சைனீஸ் அகாடமி ஆஃப் சயின்ஸ் (CAS) இந்த ஆண்டு ஜூலை முதல் ஆய்வகத்தில் வளர்க்கப்படும் நெல்(rice) மற்றும் தாலே கிரெஸ்( Thale cress) போன்ற தாவரங்கள் தொடர்பான ஆராய்ச்சி தகவல்களை வெளியிட்டு வருகிறது.
- அவற்றில் சீனாவின் வென்டியன் ஆய்வகத் தொகுதியில்(Wentian lab module) தாலே கிரெஸ் மற்றும் நெல் நடவு சோதனைகள் சீராக நடந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
- இந்த ஆராய்ச்சியின் போது தாலே கிரேஸ் விதை நான்கு இலைகளை உற்பத்தி செய்து இருப்பதாகவும், நெல் விதைகள் 30 சென்டிமீட்டர்கள் வரை வளர்ந்து இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த தாவரங்கள் சீனாவால் விண்வெளியில் கட்டமைக்கப்பட்டு வரும் விண்வெளி நிலையத்தில், மிக குறைந்த அளவிலான ஈர்ப்பு விசையில், செயற்கை முறை ஆய்வகத்தில் வைத்து வளர்க்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- மேலும் இந்த சோதனையில் கதிர்வீச்சு அளவுகள் அதிகமாக இருக்கும் விண்வெளியில், தாவரங்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதை புரிந்து கொள்ளும் முயற்சியில் சீன விண்வெளி ஆராய்ச்சியாளர்களால் சோதனை நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சீனா விண்வெளியில் தாவர விதைகளை பரிசோதிப்பது இது முதல் முறை அல்ல. கடந்த ஆண்டு ஜூலை மாதம், விண்வெளியில் இருந்து திரும்பிய விதைகளில் இருந்து பயிரிடப்பட்ட முதல் தொகுதி அரிசியை சீனா பூமிக்கு கொண்டு வந்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் ஜிடிபி 13.5% உயர்வு
- தேசிய புள்ளியியல் அலுவலகம் (NSO) வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 32.46 லட்சம் கோடி ரூபாயில் இருந்து 36.85 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 2021-22 நிதியாண்டின் ஏப்ரல்-ஜூன் இடையிலான முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் 20.1 சதவீதமாக இருந்தது. அது தற்போது 6.6 சதவீதம் குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- இருப்பினும், 2022-23 நிதியாண்டின் ஏப்ரல் - ஜூன் இடையிலான முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி மத்திய ரிசர்வ் வங்கி கணிப்பை விட குறைவாகவே பதிவாகியுள்ளது.
- இந்த மாத தொடக்கத்தில் நடந்த நிதிக் கொள்கை கூட்டத்தில், ஏப்ரல்-ஜூன் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி விகிதம் 16.2 சதவீதமாக இருக்கும் என ரிசர்வ் வங்கி கணித்திருந்தது. ஆனால் எதிர்பார்த்ததைவிட 2,7 சதவீதம் குறைவாகவே ஜிடிபி வளர்ச்சி பதிவாகியுள்ளது.
கிராம உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசு நிதி விடுவிப்பு - தமிழகத்திற்கு ரூ.1380 கோடி
- மாநிலங்களுக்கு கிராமப்புற ஊராட்சி அமைப்புகளுக்கான நிதியை மத்திய அரசு ரூ.15075 கோடியை விடுவித்துள்ளது. தமிழகத்திற்கான பங்காக ரூ.1380 கோடி வரையில் மத்தியஅரசு ஒதுக்கி உள்ளது.
- மேலும் பல்வேறு மாநிலங்களுக்கும் இது போன்று நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. இதன்படி உ.பி.,க்கு ரூ. 3,733கோடி, ம.பி., ரூ.1,472 கோடி, ரூ. குஜராத்திற்கு 1,1181 கோடி என மத்திய அரசு நிதி ஒதுக்கி உள்ளது.
- வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தி விரிவுபடுத்துவது, இரு நாடுகளுக்கிடையே அறிவு மற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வது என்ற கண்ணோட்டத்துடன் நேபாள அரசுடன் பல்லுயிர் பாதுகாப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கான சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தின் முன்மொழிவுக்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- வனங்கள், வனவிலங்குகள், சுற்றுச்சூழல், பல்லுயிர் பாதுகாப்பு, வழித்தடங்கள் மற்றும் ஒன்றோடொன்று இணைக்கும் பகுதிகளை மீட்டெடுப்பது உள்ளிட்ட பருவநிலை மாற்றம் ஆகிய துறைகளில் இரு தரப்பினரிடையே ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் உதவும்.