குஜராத் மாநிலத்தில் ரூ.8,600 கோடி மதிப்பிலான திட்டங்களை மோடி தொடங்கிவைத்தார் - சூரத் நகரில் வைர ஆராய்ச்சி மற்றும் வணிக திட்டம்
- பிரதமர் நரேந்திர மோடி தனது சொந்த மாநிலமான குஜராத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டுள்ளார். வைர நகரம் என அழைக்கப்படும் சூரத் நகருக்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- அதன்பின், அங்கு ரூ.3,400 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி அடிக்கல்நாட்டி தொடங்கி வைத்தார். வைர வியாபாரத்தில் உலகின் சிறந்த இடமாக சூரத் நகரை மாற்றும் வகையில் பாதுகாப்பு உட்பட பல சிறப்பு அம்சங்களுடன் ட்ரீம் சிட்டி திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.
- இந்நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் புபேந்திர படேல், ரயில்வே மற்றும் ஜவுளித்துறை இணையமைச்சர் தர்ஷனா ஜோர்தோஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சூரத் பயணத்தை முடித்துக் கொண்டு, பாவ்நகர் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கும் காரில் பயணம் செய்தபடி மக்களை சந்தித்தார். அதன்பின், அங்கு ரூ.5,200 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை தொடங்கி வைத்தார். பாவ்நகர் துறைமுகம் அருகே உலகின் முதல் இயற்கை எரிவாயு முனையத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- இது அரசு மற்றும் தனியார் துறை மூலம் ரூ.4,000 கோடி மதிப்பில் தொடங்கப்படுகிறது. குஜராத் பாவ்நகர் துறைமுகம் ஆண்டுக்கு 15 லட்சம் டன் சரக்குகளை கையாள்கிறது என் பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பரிந்துரை
- சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்து முனீஸ்வர் நாத் பண்டாரி கடந்த 12ம் தேதி ஓய்வுபெற்றார். இதையடுத்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி பதவியேற்றார். அவர் கடந்த 21ம் தேதி ஓய்வுபெற்றார். இதைத்தொடர்ந்து, பொறுப்பு தலைமை நீதிபதியாக டி.ராஜா பதவியேற்றார்.
- இந்நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யு.யு.லலித், நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட் மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கொலீஜியம், உயர் நீதிமன்ற நீதிபதிகள் இடமாற்றம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்க கூடியது.
- இக்கூட்டத்தில் ஒடிசா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள எஸ்.முரளிதரை, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக மாற்ற ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்தவுடன் சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக முரளிதர் பதவியேற்பார்.
வெம்பக்கோட்டை அகழாய்வில் டெரகோட்டா மனித முகம் பறவை தலை கண்டெடுப்பு
- விருதுநகர் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே, தொல்லியல் மேட்டில் ஏற்கனவே 10 குழிகள் தோண்டப்பட்டு, நடந்த அகழாய்வில் டெரகோட்டா எனப்படும் சுடுமண்ணாலான குவளை உள்ளிட்ட பல வகையான கலைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டன.
- தற்போது சுடுமண்ணாலான பறவை தலை, மனித முகம் ஆகியவை கண்டெடுக்கப்பட்டுள்ளன.
தேசிய விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்த பிரதமர் மோடி
- நாட்டின் 36 வது தேசிய விளையாட்டுப் போட்டி குஜராத்தில் உள்ள அகமதாபாத், காந்தி நகர், உள்ளிட்ட 6 நகரகளில் நடத்தப்படுகிறது.
- அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இதன் தொடக்க விழாவை பிரதமர் மோடி தொடங்கிவைத்து உரையாற்றினார்.
- 35 வது தேசிய போட்டிகள் கடந்த 2015 ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த நிலையில், 2020 ஆம் ஆண்டு கோவாயில் தேசிய விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரொனா தொற்றுப் பாதிப்பால், நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இப்போட்டியில், 36 விளையாட்டுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் பங்கேற்றுள்ளனர். மேலும், 28 மாநிலங்கள், 8 யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த சுமார் 7 ஆயிரத்திற்கும் அதிகமான வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொண்டுள்ளனர்.
கொந்தகை அகழாய்வில் வாள் கண்டெடுப்பு
- கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் பல பழங்கால பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. முன்னோர்கள் பயன்படுத்திய அரிய வகை பொருட்கள் நாளுக்கு நாள் கண்டெடுக்கப்பட்டு வருகிறது.
- அந்த வகையில், தற்போது கொந்தகையில் நடைபெற்று வரும் அகழாய்வில் 40 செ.மீ நீளம் கொண்ட வாள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
- இரும்பினால் செய்யப்பட்ட வாள் தாலியினுள் புதைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுவரை, கொந்தகையில் 1500-க்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.