இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்து வரலாறு படைத்த இந்திய மகளிர் அணி
- இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய மகளிர் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் இங்கிலாந்து மகளிர் அணியை எதிர்கொண்டது.
- முதல் இரண்டு ஒருநாள் போட்டிகளிலும் வெற்றி பெற்ற இந்திய அணி மூன்றாவது போட்டியிலும் வெற்றி பெறும் முனைப்பில் களமிறங்கியது.
- இங்கிலாந்து லார்ட்ஸ் மைதாத்தில் நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய இந்தியா, 45.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் மட்டுமே குவித்தது.
- 170 ரன்கள் இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து மகளிர் அணி, தொடக்கம் முதலே நிலையான ஆட்டமின்றி தடுமாறியது. இறுதியில் 43.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 153 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.
- இதன்மூலம் இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியை 16 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி கைப்பற்றியது.
- ஹர்மன் பிரீத் கவுர் தலைமையிலான இந்திய மகளிர் அணி, இங்கிலாந்தில் முதல்முறையாக ஒருநாள் தொடரைக் கைப்பற்றி வரலாறு படைத்தது. இந்திய மகளிர் அணியின் மூத்த பந்துவீச்சாளர் ஜூலன் கோஸ்வாமியின் கடைசி போட்டி இது என்பது குறிப்பிடத்தக்கது.
- அமெரிக்காவில் நடைபெற்று வரும் ஐ.நா. பொதுச்சபை-யின் 77-வது கூட்டத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையிலான இந்திய உயர்நிலைக்குழுவினர் கலந்து கொண்டுள்ளனர்.
- இந்நிலையில், நடைபெற்ற சிறப்புக்கூட்டத்தில் உரையாற்றிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், கடன், உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.
- உக்ரைன் போர் உலகின் அனைத்து நாடுகளக்கும் கவலையை ஏற்படுத்தி வருவதகாவும், உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் அவர் வலியுறுத்தினார்.
- உணவுப்பொருள், எரிபொருள், எரிவாயு உள்ளிட்டவைகள் தொலைதூர நாடுகளிலும் ஏற்பட்டு இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அணு ஆயுத மிரட்டல்கள் தவிர்க்கப்பட வேண்டும் என்றார்.
- மேலும் காலநிலை நடவடிக்கை, உணவுப்பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கான தரவு உள்ளிட்ட பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு தீர்வு காண ஜி20 நாடுகளுடன் இணைந்து இந்தியா செயல்படும் என்றார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழ் பரப்புரைக் கழகம் திட்டத்தை தொடங்கி வைத்தார்
- செம்மொழியான தமிழை உலகம் முழுவதும் வளர்க்கும் நோக்கத்தில், தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் சார்பில் தமிழ் பரப்புரைக் கழகம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் விவேகானந்தர் அரங்கில் நடைபெற்றது.
- இதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு 'தமிழ் பரப்புரைக் கழகம்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அதனுடன் தமிழ் கற்றல், கற்பித்தலுக்கான பாடநூல்கள், கற்றல் மேலாண்மை செயலி மற்றும் துணைக் கருவிகளையும் அவர் வெளியிட்டார்.
- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை வண்டலூரில் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் தமிழகத்தின் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் நடப்பாண்டில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை பள்ளி மாணவர்களுடன் 500 உள்ளூர் நாட்டு மரக்கன்றுகளை நட்டு, பசுமை தமிழ்நாடு இயக்கத்தை தொடங்கி வைத்தார்.
- முன்னதாக பசுமை தமிழ்நாடு இயக்க தொடக்க விழாவில், வனத்துறை சார்பில் அமைக்கப்பட்ட கண்காட்சி அரங்குகளில் பொதுமக்கள் மரக்கன்றுகள் நடுதலைப்பற்றி தேவையான விவரங்களை அறிந்து கொள்ளும் வகையில் வைக்கப்பட்டுள்ள எண்ம சுவர் , எண்ம நூல்கள் போன்றவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும், இந்நிகழ்ச்சியின் போது, முதல்வர் மு.க.ஸ்டாலின் பசுமை தமிழ்நாடு இயக்கம் குறித்த ஆவண சிறப்பு மலரை வெளியிட்டார்.
- குடியரசு தலைவர் திருமதி திரௌபதி முர்மு இன்று குடியரசு தலைவர் மாளிகையில், 2020-21-ம் ஆண்டுக்கான நாட்டு நலப்பணி திட்ட விருதுகளை வழங்கினார்.
- 5 பிரிவுகளில் இந்த விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஆர். ரமேசுக்கு, பல்கலைக்கழகம்/பிளஸ்டூ கவுன்சில் பிரிவில் விருது வழங்கப்பட்டுள்ளது.
- யூனிட் திட்ட அலுவலர்கள் பிரிவில் மதுரை ஶ்ரீமீனாட்சி கலைக்கல்லூரிக்கு விருது அளிக்கப்பட்டுள்ளது.
- தன்னார்வலர்கள் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த திரு ஜெயசீலன், மதுரை மெப்கோ சிலீக் பொறியியல் கல்லூரியின் வரதராஜன் ஆகியோர் விருது பெற்றுள்ளனர்.
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றம் அமைச்சர்களின் இரண்டு நாள் தேசிய மாநாடு 2022 செப்டம்பர் 23-24 தேதிகளில் குஜராத்தின் ஏக்தா நகரில் நடைபெற்றது. இந்த மாநாட்டை காணொலி காட்சி மூலம் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- மாசுபாட்டைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தடுப்பது தொடர்பாக நடைபெற்ற ஒரு அமர்வின் போது, ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ - தேசிய மாசற்ற காற்றுத் திட்டத்தின் (NCAP) கீழ் நகரங்களின் தரவரிசை மற்றும் வழிகாட்டுதல்கள் குறித்து மாநிலங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது.
- மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்திற்கான அமைச்சரின் வழிகாட்டுதலின் கீழ், ‘ஸ்வச் வாயு சர்வேக்ஷன்’ தொடங்கப்பட்டு, தேசிய மாசற்ற காற்று திட்டத்தின் (NCAP) கீழ் நகர செயல் திட்டங்களை செயல்படுத்துவதற்காக நாட்டின் 131 நகரங்களுக்கு தரவரிசை வழங்கப்படும்.
- அந்த 131 நகரங்கள் மக்கள்தொகை அடிப்படையில் மூன்று குழுக்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள்தொகை கொண்ட முதல் குழுவில் 47 நகரங்கள் உள்ளன.
- 3 முதல் 10 லட்சம் மக்கள்தொகை கொண்ட இரண்டாவது குழுவில் 44 நகரங்கள் உள்ளன. மூன்றாவது குழுவில் 3 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட 40 நகரங்கள் உள்ளன.
- பிராணா ஆன்லைன் போர்ட்டல் மூலம் நகரங்கள் சுய மதிப்பீட்டைச் செய்ய வேண்டும். இந்த மதிப்பீடு ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படுகிறது.
- திடக்கழிவு மேலாண்மை, சாலை தூசு மேலாண்மை, கட்டுமானம் மற்றும் தகர்ப்பு கழிவு மேலாண்மை, வாகன உமிழ்வைக் கட்டுப்படுத்துதல் மற்றும் தொழில்துறை மாசுபாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் செயல்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நகரங்கள் தெரிவிக்க வேண்டும்.
- அமெரிக்காவின் பென்சில்வேனியாவில் உள்ள பிட்ஸ்பர்க்கில் "உலகளாவிய தூய்மையான எரிசக்தி நடவடிக்கை அமைப்பு -2022" இல், மின்சாரம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் உயர்மட்ட இந்திய குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் உரையாற்றினார்.
- போக்குவரத்துத் துறையில் இருந்து பசுமை இல்ல வாயு வெளியேற்றத்தைக் குறைப்பதில் நிலையான உயிரி எரிபொருள்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. நிகர பூஜ்ஜிய முயற்சிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து ஊக்குவித்து கண்காணித்து வருகிறார் என்றார் அவர்.