TAMIL
- இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளை, தேசிய குற்ற பதிவேடு அமைப்பு பதிவு செய்து ஆவணப்படுத்தி வருகிறது. இந்த அமைப்பின் 2021ம் ஆண்டின் சாலை விபத்து தரவுகளை கொண்டு, இரவில் 12:00 மணி முதல், அதிகாலை 6:00 மணி வரை, அதிக விபத்து நடக்கும் மாநிலங்கள் அடங்கிய பட்டியலை ஸ்டேட்ஸ் ஆப் இந்தியா நிறுவனம் டுவிட்டரில் வெளியிட்டது.
- இரவில் அதிகம் விபத்துகள் நடக்கும் தேசிய அளவிலான பட்டியலில் புதுச்சேரி மாநிலம் முதலிடத்தில் உள்ளது.அதாவது, இந்த பட்டியலில் 23.5 சதவீதத்துடன் புதுச்சேரி மாநிலம் முதலிடம் பெற்றுள்ளது.
- அடுத்தாக, உத்தரபிரதேசம் 20.2 சதவீதத்துடன் இரண்டாம் இடத்திலும், டில்லி 20.1 சதவீதத்துடன் மூன்றாம் இடத்திலும், ஜார்கண்ட் 17.3 சதவீதத்துடன் நான்காம் இடத்திலும், பீகார் 16.7 சதவீதத்துடன் ஐந்தாம் இடத்திலும் உள்ளன.
- தமிழகத்தில் இரவில் 6.1 சதவீத சாலை விபத்துகள் நடந்துள்ளதாக பதிவாகியுள்ளது. குறைந்த விபத்து நடந்த மாநிலமாக லட்சத்தீவு உள்ளது. இங்கு இரவில் ஒரு விபத்தும் நடக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- இந்தியாவில் 60 சதவீத சாலை விபத்துகள் அதிகாலை 6:00 மணி முதல், மாலை 6:00 மணிக்குள் தான் நடந்துள்ளன. 'ரஷ் ஹவர்' எனப்படும் மாலை 6:00 மணி முதல், இரவு 9:00 மணி வரை 20.2 சதவீத சாலை விபத்துகள் நடந்துள்ளன. புதுச்சேரியில் 'ரஷ் ஹவர்' நேரங்களில் 13.2 சதவீத சாலை விபத்துகள் நடந்துள்ளதாக அந்த நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
- Road accidents in India are recorded and documented by the National Crime Registry. States of India has released a list of the states with the highest number of accidents from 12:00 pm to 6:00 am on Twitter with the 2021 road accident data of this organization.
- Puducherry state is at the top in the national list of most accidents at night. That is, Puducherry state has topped the list with 23.5 percent.
- Next, Uttar Pradesh is second with 20.2 percent, Delhi third with 20.1 percent, Jharkhand fourth with 17.3 percent and Bihar fifth with 16.7 percent.
- It has been reported that 6.1 percent road accidents have occurred in Tamil Nadu at night. Lakshadweep is the least accident prone state. It is noteworthy that not a single accident took place here at night.
- 60 percent of road accidents in India occur between 6:00 am and 6:00 pm. 20.2 percent of road accidents took place between 6:00 pm and 9:00 pm, known as 'rush hour'. The agency listed 13.2 percent of road accidents in Puducherry during 'rush hour'.