TAMIL
- காற்று மாசுபாடு பூமியின் மென்மையான சுற்றுச்சூழல் அமைப்புகள், பல்லுயிர் மற்றும் காலநிலை ஆகியவற்றை மோசமாக பாதிக்கிறது.
- இந்த நிலையில், காற்றுமாறுபாடு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 7ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் தோன்றியதற்கான வரலாறு குறித்து பின்வருமாறு காணலாம்.
- 2019ம் ஆண்டு டிசம்பர் 19ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் பொதுச் சபை (UNGA), அதன் நிலையான வளர்ச்சி குறித்த தனது எழுபத்து நான்காவது அமர்வின் 52 வது நிறைவு கூட்டத்தில், ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொண்டது.
- இதன் மூலம் செப்டம்பர் 7ம் தேதி நீல வானத்திற்கான சர்வதேச சுத்தமான காற்று தினம் அனுசரிக்கப்படும் என முடிவு செய்யப்பட்டது. "அனைவருக்கும் சுத்தமான காற்று" என்ற கருப்பொருளுடன் 2020 ஆம் ஆண்டின் முதல் சர்வதேச தினம் அனுசரிக்கப்பட்டது.
- மேலும் கடந்த ஆண்டு ஐநா உறுப்பு நாடுகள், ஐநா அமைப்புகள், உலகெங்கிலும் உள்ள அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்களால் இந்த தினம் அனுசரிக்கப்படுகிறது.
- 2030 ஆம் ஆண்டுக்குள் காற்று, நீர் மற்றும் மண்ணில் உள்ள இரசாயனங்கள் போன்ற மாசுக்களால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் வியாதிகளின் எண்ணிக்கையை குறைக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்து, அதன் மூலம் " அனைவருக்கும் சுத்தமான காற்று" என்ற தீர்மானத்தை ஐ.நா. ஏற்றுக்கொண்டது.
- எனவே, காற்றின் தரம் மற்றும் கழிவு மேலாண்மை மூலம் சுற்றுசூழலுக்கு தீங்கு விளைவிக்கும் விளைவுகளை குறைக்க நாமும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- ஐநா-வின் தீர்மான அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, காற்றின் தரம் பற்றிய ஆராய்ச்சி மற்றும் தரவுகளை சேகரிப்பதற்கும், காற்று மாசுபாட்டை குறைப்பதற்கான தீர்வுகளைக் கண்டறிவதற்கும் வலுவான சர்வதேச ஒத்துழைப்பை ஐநா கோரியுள்ளது.
- காற்றின் தரப் பிரச்சனைகள் பற்றிய பொது விழிப்புணர்வின் முக்கியத்துவத்தை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. காலநிலை மாற்றத்தின் தீவிரத்தை குறைக்க சுத்தமான காற்று உதவும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
- நீல வானத்துக்கான மூன்றாவது சர்வதேச தூய்மையான காற்று தினம் 7 செப்டம்பர் 2022 அன்று ‘நாம் பகிர்ந்து கொள்ளும் காற்று’ என்ற கருப்பொருளின் கீழ் நடத்தப்படும்.
- கூட்டுப் பொறுப்புக்கூறல் மற்றும் கூட்டு நடவடிக்கையின் அவசியத்தை எடுத்துக்காட்டும் காற்று மாசுபாட்டின் எல்லைக்கு அப்பாற்பட்ட தன்மையில் இது கவனம் செலுத்துகிறது.
- காற்று மாசுபாட்டிற்கு தேசிய எல்லைகள் எதுவும் தெரியாது மற்றும் எல்லா இடங்களிலும் பரவுகிறது. மேலும், இது காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு, பிற வகையான மாசுபாடு, சமூக மற்றும் பாலின சமத்துவம் மற்றும் பொருளாதார வளர்ச்சி போன்ற பிற உலகளாவிய நெருக்கடிகளுடன் வலுவாக தொடர்புடையது.
- Air pollution adversely affects Earth's delicate ecosystems, biodiversity and climate.
- In this context, International Clean Air Day for Blue Skies is celebrated every year on 7th September to raise awareness about climate change. The history of the origin of this day can be seen as follows.
- On 19 December 2019, the United Nations General Assembly (UNGA), at the 52nd closing meeting of its seventy-fourth session, adopted a resolution on sustainable development. With this it was decided to observe International Clean Air Day for Blue Sky on 7th September.
- The first International Day of 2020 was observed with the theme “Clean Air for All”. And last year the day was observed by UN member states, UN organizations, governmental and non-governmental organizations and individuals around the world.
- By 2030, the UN has adopted a resolution on "Clean Air for All" recognizing the need to reduce the number of deaths and illnesses caused by pollutants such as chemicals in air, water and soil. Accepted. Therefore, we must also take steps to reduce the harmful effects on the environment through air quality and waste management.
- The UN Resolution stated in its statement that the UN called for stronger international cooperation to collect research and data on air quality and find solutions to reduce air pollution. This underscores the importance of public awareness of air quality issues. The report also stated that clean air will help reduce the severity of climate change.
- The third International Day of Clean Air for blue skies will be held on 7 September 2022, under the theme of ‘The Air We Share’. It focuses on the transboundary nature of air pollution highlighting the need for collective accountability and collective action.
- Air pollution knows no national borders and is all pervasive. Moreover, it is strongly correlated to other global crisis such as climate change, biodiversity loss, other forms of pollution, social and gender parity as well as economic development.