செப்டம்பர் 11-ம் தேதி இனி 'மகாகவி நாள் - தமிழக அரசு அறிவிப்பு
- 'மகாகவி பாரதியார் தமிழ்ப்பற்று, தெய்வப் பற்று, தேசப்பற்று, மானுடப்பற்று ஆகிய நான்கும் கலந்தவர். இந்திய நாட்டின் விடுதலைக்காக போராடியது மட்டும் அல்லாமல். சமூக, பொருளாதார உரிமைகளுக்காக எழுதிய, தனது கவிதை வரிகளால் மக்கள் மனதில் என்றும் நிலைத்து உள்ளார்.
- மகாகவி பாரதியார் மறைந்து நூறு ஆண்டுகள் ஆகியும், தமிழ் சமுதாயத்திற்காக அவர் விட்டுச் சென்ற கவிதைகள், கட்டுரைகள், பாடல்கள் ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் உயிரோட்டமாக இருக்கும்.
- பாரதியாரின் நினைவை போற்றுகின்ற வகையில், அவர் மறைந்த நூற்றாண்டின் நினைவாக 14 முக்கிய அறிவிப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டிருந்தார்.
- அவற்றில், பாரதியார் நினைவு நாளான செப்டம்பர் 11-ம் தேதி (நாளை), 'மகாகவி நாள்' ஆக கடைப்பிடிக்கப்படும் என்பதும் ஒன்றாகும்.
- இந்தியாவின் முதல் முப்படை தளபதியாக இருந்தவர் பிபின் ராவத், கடந்த டிசம்பர் மாதம் 8ம் தேதி குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு சென்றபோது ஹெலிகாப்டரில் விபத்தில் சிக்கியதால் பரிதாபமாக உயிரிழந்தார்.
- இந்நிலையில், அருணாச்சல பிரதேச மாநிலம் கிபிது ராணுவ முகாமில் நடந்த விழாவில், சீனா உடனான உண்மையான கட்டுப்பாட்டுக் கோடு அருகே உள்ள லோஹித் பள்ளாத்தாக்கில் வாலோங்கில் இருந்து உள்ள கிபிது ராணுவ முகாம் வரை உள்ள 22 கி.மீ தூரம் சாலைக்கு 'பிபின் ராவத் மார்க்' என பெயர் சூடப்பட்டுள்ளது. மேலும், கிபிது ராணுவ முகாம் 'ஜெனரல் பிபின் ராவத் மிலிட்டரி கேரிசன்' என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.
- ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணியாக இருந்த இரண்டாம் எலிசபெத், 96, முதுமை காரணமாக சமீபத்தில் மரணமடைந்தார்.
- இதையடுத்து, பிரிட்டன் அரச குடும்பத்து வழக்கப்படி, லண்டனில் உள்ள செயின்ட் ஜேம்ஸ் அரண்மனையில், வாரிசுரிமை கவுன்சில் எனப்படும் சம்பிரதாய அமைப்பின் கூட்டத்தில், நாட்டின் மன்னராக மூன்றாம் சார்லஸ் அறிவிக்கப்பட்டார்.
- இதன் மூலம் அதிகாரப் பூர்வமாக பிரிட்டனின் மன்னராக சார்லஸ் இருப்பார். அவருக்கு மணிமுடி சூட்டும் விழா, ராணியின் இறுதிச் சடங்குக்குப் பின் நடைபெறும்.
- மறைந்த ராணி இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச் சடங்கு, 19ம் தேதி நடக்கிறது. பிரிட்டன் மன்னரை அறிவிக்கும் நிகழ்ச்சி, முதல் முறையாக 'டிவி'க்களில் நேரடியாக ஒளிபரப்பாகியுள்ளது.
நாட்டின் முதல் மத்திய - மாநில அறிவியல் மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி இன்று காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
- நாட்டில் புதிய கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவோருக்கு வசதி செய்து கொடுக்கும் பிரதமரின் இடைவிடாத முயற்சியில் முதல் முறையாக இத்தகைய மாநாடு நடைபெறுகிறது.
- நாடு முழுவதும் வலுவான அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பு (எஸ்டிஐ) சூழலைக் கட்டமைக்க கூட்டாட்சி ஒத்துழைப்பு உணர்வுடன் மத்திய- மாநில ஒத்துழைப்பு நடைமுறையை இது வலுப்படுத்தும்.
- மாநாட்டை தொடங்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது, "21ஆம் நூற்றாண்டில் இந்தியாவின் அனைத்து மூளை முடுக்குகளிலும் விஞ்ஞான வளர்ச்சி சென்றடைய வேண்டும்.
- புதுமையான செயல்பாடுகளை ஊக்குவிப்பதில் மாநில அரசு உரிய கவனம் செலுத்த வேண்டும். சர்வதேச புதுமை கண்டுபிடிப்பு பட்டியலில் 2015ஆம் ஆண்டு இந்தியா 81ஆவது இடத்தில் இருந்தது. மத்திய அரசின் தொடர் முயற்சியால் தற்போது 45ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
- இந்த தொடக்க விழாவில் குஜராத் முதலமைச்சர் பூபேந்தர படேல், மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.