TAMIL
- ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் 1 முதல் 7 ஆம் தேதி வரை தொடர்ந்து 7 நாட்கள் ஒரு வாரம் வரை உலகம் முழுக்க தாய்ப்பால் வாரம் கொண்டாடப்படுகிறது.
- அதே போல இந்த வருடமும் தாய்ப்பாலின் மகிமைகளை, அவசியத்தை மக்களுக்கு எடுத்து சொல்ல ஒரு விழிப்புணர்வு நாளாக கொண்டாப்படுகிறது.
- தாய்ப்பால் கொடுப்பதை ஆதரிப்பதற்காகவும் ஊக்குவிப்பதற்காகவும், உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் நல அமைப்பு (UNICEF) 1990 இல் ஒரு ஆணையை உருவாக்கியது.
- அதன்படி 1992ஆம் ஆண்டு ’வேர்ல்டு அலையன்ஸ் பிரஸ்ட் ஃபீடிங் ஆக்ஷன்’ (வாபா) அமைப்பால் முதல் முறையாக தாய்ப்பால் வாரம் கொண்டாடப்பட்டது.
- தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிக்கவே இந்த வாரம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது. ஆரம்பத்தில், சுமார் 70 நாடுகள் வாரத்தை நினைவுகூர்ந்து வந்த நிலையில், தற்போது 170 நாடுகளால் கொண்டாடப்படுகிறது.
- உலக தாய்ப்பால் வாரத்திற்கான இந்த ஆண்டு கருப்பொருள் "தாய்ப்பால் கொடுப்போம் வாருங்கள்: அறிவூட்டல் மற்றும் ஆதரவளித்தல்" என்ற பெயரில் நடைபெறுகிறது.
- தாய்ப்பால் கொடுப்பதற்கான பாதுகாப்புகளை உருவாக்க நிறுவனங்களையும் நாடுகளையும் வலியுறுத்துவதன் மூலம், இந்த தலைப்பில் இந்த வாரத்தை சிறப்பிப்பதன் மூலம் தாய்ப்பால் விழிப்புணர்வை அதிகரிக்கும் என்று நம்புகிறது.
- Every year from 1st to 7th August for 7 consecutive days for a week, Breastfeeding Week is celebrated all over the world.
- Similarly, this year also an awareness day is celebrated to tell the people about the glories and necessity of breast milk.
- The World Health Organization (WHO) and the United Nations International Child Health Organization (UNICEF) created a mandate in 1990 to support and promote breastfeeding.
- Accordingly, in 1992, World Alliance for Breastfeeding Action (WABA) organized Breastfeeding Week for the first time. This week is celebrated annually to promote breastfeeding. Initially, about 70 countries commemorated the week, and now it is celebrated by 170 countries.
- This year's theme for World Breastfeeding Week is "Let's Breastfeed: Educate and Support". It hopes to increase breastfeeding awareness by highlighting this week on the topic, urging organizations and countries to develop breastfeeding safeguards.