மத்திய தரவரிசை பட்டியல் 46வது இடத்தில் தமிழகம்
- தமிழக மின் வாரியம், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் ஆகிய நிறுவனங்களாக செயல்படுகிறது. அதில் மின் உற்பத்தி மற்றும் பகிர்மானம், 3.20 கோடி மின் இணைப்புகளுக்கும் வினியோகம் செய்யும் பணியை மேற்கொள்கிறது.
- ஆந்திரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டு, மூன்று மின் பகிர்மான நிறுவனங்கள் செயல்படுகின்றன. மத்திய மின் துறை, நாடு முழுதும் செயல்படும், 52 அரசு துறை மின் வினியோக நிறுவனங்களின் நிதி நிலைமை, மின் வினியோக செயல்பாடு போன்றவற்றை ஆராய்ந்து, ஆண்டுதோறும் தரவரிசை பட்டியல் வெளியிடுகிறது.
- கடந்த, 2019 - 20ல் வெளியிட்ட பட்டியலில், தமிழக மின் வாரியம், 40வது இடத்தை பிடித்திருந்தது. தற்போது, 2020 - 21ம் நிதியாண்டிற்கான பட்டியலில் 'சி மைனஸ் கிரேடு' உடன், 46வது இடத்தை பிடித்துள்ளது.
- அந்த ஆண்டில் மின் வாரியம், 49 ஆயிரத்து, 785 கோடி ரூபாய் வருவாய் ஈட்டியுள்ள நிலையில், 13 ஆயிரத்து, 407 கோடி ரூபாய் இழப்பை சந்தித்துள்ளது.
- ஒரு யூனிட் மின்சார விற்பனைக்கும், அதனால் கிடைக்கும் வருவாய்க்கும் உள்ள இடைவெளி, 2 ரூபாய் என்ற அளவில் உள்ளது. மின் கொள்முதல் போன்றவற்றுக்கு அதிக செலவு செய்வதே தரவரிசை பட்டியலில் மிகவும் மோசமான நிலையில் இருப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.
- தரவரிசை பட்டியலில், குஜராத்தை சேர்ந்த நான்கு மின் வினியோக நிறுவனங்கள் முதலாவது, இரண்டாவது, நான்காவது, ஐந்தாவது இடத்தில் உள்ளன.
ஆசியாவில் யாரும் படைக்காத சாதனை; உலக பணக்காரர்களில் 3-ம் இடத்தில் அதானி
- உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் 3வது இடத்திற்கு முன்னேறினார் கவுதம் அதானி. அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீடு தினசரி அடிப்படையில் புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
- அந்த வகையில், புதுப்பித்தலில், உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இந்தியாவின் கவுதம் அதானி 4வது இடத்தில் இருந்து 3வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.
- இவர் பிரான்சின் பெர்னார்ட் அர்னால்டை முந்தி உள்ளார். அதானியின் சொத்து மதிப்பு ரூ.10.85 லட்சம் கோடியாக உள்ளது. கடந்த ஜூலை மாதம் இப்பட்டியலில் பில் கேட்சை (சொத்து மதிப்பு ரூ.9.24 லட்சம் கோடி) முந்தி 4வது இடத்தை பிடித்தார் அதானி.
- ஏற்கனவே ஆசியாவின் முன்னணி பணக்காரர்கள் பட்டியலில், சீனாவின் ஜாக் மா, இந்தியாவின் முகேஷ் அம்பானி ஆகியோரை முந்தி அதானி முதல் இடத்தை பிடித்தவர். தற்போது எந்த ஆசிய தொழிலதிபர்களும் செய்யாத சாதனை அதானி செய்துள்ளார்.
- இப்பட்டியலில் அமெரிக்காவின் எலான் மஸ்க் ரூ.19.82 லட்சம் கோடியுடன் முதல் இடத்திலும், ஜெப் பெசோஸ் ரூ.12.08 லட்சம் கோடியுடன் 2வது இடத்திலும் உள்ளனர். முகேஷ் அம்பானி ரூ.7.26 லட்சம் கோடியுடன் 11வது இடத்தில் உள்ளார்.
தற்கொலையில் மகாராஷ்டிரா முதலிடம், தமிழ்நாடு இரண்டாவது இடம்
- என்.சி.ஆர்.பி அறிக்கையின்படி, தொழில் சார்ந்த பிரச்சனைகள், தனிமை உணர்வு, துஷ்பிரயோகம், வன்முறை, குடும்ப பிரச்சனைகள், மனநல கோளாறுகள், மதுவுக்கு அடிமையாதல், நிதி இழப்பு மற்றும் நாள்பட்ட வலி ஆகியவை நாட்டில் தற்கொலை சம்பவங்களுக்கு முக்கிய காரணங்களாகும்.
- 2021 ஆம் ஆண்டில், இந்தியா முழுவதும் இதுபோன்ற 1,64,033 வழக்குகளைக் கண்ட மகாராஷ்டிரா அனைத்து இந்திய மாநிலங்களிலும் அதிக எண்ணிக்கையிலான தற்கொலைகளைப் பதிவு செய்துள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் மத்தியப் பிரதேசம்.
- பெரும்பாலான தற்கொலைகள் மகாராஷ்டிராவில் (22,207) பதிவாகியுள்ளன, அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் 18,925 தற்கொலைகள், மத்தியப் பிரதேசத்தில் 14,965 தற்கொலைகள், மேற்கு வங்கத்தில் 13,500 மற்றும் கர்நாடகாவில் 13,056 என்று அறிக்கை கூறுகிறது.
பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
- சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் துணை வேந்தர்கள் மாநாடு நடைபெற்றது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
- மாநாட்டில் மாநில அரசின் கட்டுப்பாட்டில் வரும் 22 பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், அமைச்சர்கள் பொன்முடி, மா.சுப்பிரமணியன், அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, ரகுபதி, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், மெய்யநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
- நான் முதல்வன் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், உயர்கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் சிறந்த இடத்தைப் பிடிப்பது, பாடத்திட்ட மாற்றம், மாநில கல்விக்கொள்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள், புதுமைப் பெண் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புகளில் கவனம் செலுத்துதல், பேராசிரியர்கள் - மாணவர்கள் விகிதத்தை சரியாக கடைபிடித்தல் உள்ளிட்டவை குறித்து மாநாட்டில் விவாதிக்கப்படுகிறது.
- நம்முடைய மாணவர்களின் ஆராய்ச்சி திறமையை மேம்படுத்தவும், புதிய கண்டுபிடிப்புகளை தமிழ்நாட்டில் ஊக்கப்படுத்தவும் "CM Research Fellowship" "முதலமைச்சரின் ஆராய்ச்சி ஊக்கத்தொகை" திட்டம் தொடங்கப்படும். இதற்கான மாநில அளவில் தகுதித் தேர்வு நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
- தொழில்துறையில் ஏற்பட்டு வரும் நவீன மாற்றங்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள், மாணவர்களுக்கு உரிய திறன் சார்ந்த பயிற்சி வழங்க ஏதுவாக தொழில் நிறுவனங்களுடன் இணைந்து "ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சி" (Faculty Development Programme) வழங்கப்படும்.
பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லி முதலிடம் - தேசிய குற்ற ஆவண காப்பகம் தகவல்
- குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவலில்ன் படி, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நகரங்களின் பட்டியலில் டெல்லியை அடுத்து மும்பையும், பெங்களூருவும் இடம் பெற்றுள்ளது.
- டெல்லியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 40 சதவிகிதம் அதிகரித்து 13,890 குற்ற வழக்குகள் பதிவாகியுள்ளன. நாட்டில் அனைத்து பெருநகரங்களிலும் நடக்கும் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் டெல்லியின் பங்கு மட்டும் 32.2 சதவிகிதம் ஆகும்.
- கடந்த ஆண்டு டெல்லியில் தினசரி 2 சிறுமிகள் வீதம் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகி இருகின்றனர். தலைநகரில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் கடத்தல், கணவரின் கொடுமை, சிறுமி பாலியல் வன்கொடுமை ஆகியவை அதிக இடம் பிடித்துள்ளன.
- இதேபோல் சிறுவர்களால் குற்றச்செயல்கள் நடக்கும் அதிகம் நடக்கும் இடங்களில் டெல்லியை தொடர்ந்து சென்னையும் அகமதாபாத்தும் உள்ளன.
ஆசிய வாலிபால் - இந்தியா 'வெள்ளி'
- இந்தியா, 'நடப்பு சாம்பியன்' ஈரான், வங்கதேசம், சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 17 அணிகள் மோதின. இதன் பைனலில் இந்தியா, ஈரான் அணிகள் மோதின.
- முதல் செட்டை இந்தியா 12-25 என இழந்தது.பின் அடுத்த செட்டையும் 19-25 என கோட்டை விட்டது. அடுத்த செட்டில் அசத்திய இந்திய அணி 25-22 என கைப்பற்றியது.
- கடந்த 2008க்குப் பின் ஈரான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா கைப்பற்றிய முதல் செட் இது. நான்காவது செட்டில் மீண்டும் ஏமாற்றிய இந்தியா 15-25 என்ற கணக்கில் கோட்டை விட்டது.முடிவில் இந்திய அணி 1-3 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து இரண்டாவது இடம் பிடித்தது.
- இத்தொடரில் இந்தியா வென்ற மூன்றாவது வெள்ளி இது (1994, 2002, 2022). தவிர மூன்று வெண்கலம் (1980, 2006, 2010) வென்றுள்ளது. 2023ல் நடக்கவுள்ள 21 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடருக்கு 8வது முறையாக தகுதி பெற்றது.
யு20 மகளிா் கால்பந்து - ஸ்பெயின் உலக சாம்பியன்
- ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஸ்பெயின் 3-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தியது. இதன் மூலம், கடந்த 2018 உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜப்பானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்துள்ளது ஸ்பெயின்.
- இந்த ஆட்டத்தில் ஸ்பெயினுக்காக இன்மா கப்பாரோ (12'), சல்மா செலஸ்டே (22', 27') ஆகியோரும், ஜப்பானுக்காக சுஸு அமானோவும் (47') கோலடித்தனா். நடப்பு உலகக் கோப்பை போட்டியில் தொடா்ந்து 9 ஆட்டங்களில் தோல்வி காணாத ஜப்பானுக்கு, ஸ்பெயின் தோல்வியை பரிசளித்திருக்கிறது.
- 3-ஆவது இடத்துக்கான ஆட்டத்தில் பிரேஸில் 4-1 என்ற கோல் கணக்கில் நெதா்லாந்தை வீழ்த்தியது. ஆட்டத்தில் பிரேஸிலுக்காக அனா கிளாரா (9'), டாா்சியேன் காரென் (59', 79'), கி ஃபொனாண்டஸ் (89') ஆகியோரும், நெதா்லாந்துக்காக ரோசா வான் கூலும் (21') கோலடித்தனா்.
- இப்போட்டியில் சிறப்பாக கோல்கள் அடித்ததற்காக 'தங்கப் பந்து' விருது ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கும், 'வெள்ளிப் பந்து' விருது ஸ்பெயினின் இன்மா கபாரோவுக்கும், 'வெண்கலப் பந்து' விருது பிரேஸிலின் பிரேஸிலின் டாா்சியேனுக்கும் வழங்கப்பட்டன.
- அதிக கோல்கள் அடித்தோரில் ஸ்பெயினின் இன்மா கபாரோவுக்கு (8 கோல்கள்) 'தங்க பூட்' விருதும், ஜப்பானின் மாய்கா ஹமானோவுக்கு (4 கோல்கள்) 'வெள்ளி பூட்' விருதும், யுஸுகி யமாமோடோவுக்கு (3 கோல்கள்) 'வெண்கல பூட்' விருதும் வழங்கப்பட்டன. சிறந்த கோல்கீப்பா் விருது ஸ்பெயினின் மெரிட்ஸெல் ஃபான்டுக்கு கிடைத்தது.
- ஒரு மருத்துவம், ஒரு தரநிலை என்பதை அடைய, ஆயுஷ் அமைச்சகம் குறிப்பிடத்தக்க முயற்சிகளை எடுத்து வருகிறது. அதன்படி, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையம் (ஆயுஷ் அமைச்சகம்) மற்றும் இந்திய மருந்தியல் ஆணையம் (சுகாதாரம் மற்றும் குடும்பநலத்துறை அமைச்சகம்) ஆகியவற்றுக்கிடையே ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் புதுதில்லியில் கையெழுத்தானது.
- இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதிக்கான ஃபார்மகோபயா ஆணையத்தின் இயக்குநர் (பொறுப்பு) பேராசிரியர் பி.கே.பிரஜாபதி, செயலாளர் மற்றும் அறிவியல்துறை இயக்குநர் திரு.ராஜீவ்சிங் ரகுவன்ஷி ஆகியோர், ஆயுஷ் அமைச்சகத்தின் செயலாளர் வைத்ய ராஜேஷ் கொட்டச்சா முன்னிலையில், ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
- மின்சார வாகன உற்பத்தித் துறையில் ஆராய்ச்சி மற்றும் குறுகிய மற்றும் இடைக்கால பயிற்சி வகுப்புகளை இணைந்து நடத்துவதற்காக தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையம், குருகிராமில் உள்ள நார்த்கேப் பல்கலைக்கழகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- இதற்கான ஒப்பந்தத்தில் வாகனத் தொழில்நுட்பத்திற்கான சர்வதேச மையத்தின் அலுவல் இயக்குநர் திருமதி பமீலா டிக்குவும், நார்த்கேப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், பேராசிரியர் நுபுர் பிரகாஷும் கையெழுத்திட்டனர்.