சபாநாயகர்களுக்கான 65வது காமன்வெல்த் மாநாடு
- கனடாவில் உள்ள ஹாலிஃபாக்ஸ் நகரத்தில் சபாநாயகர்களுக்கான 65வது காமன்வெல்த் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளின் சபாநாயகர்கள் பங்கு பெற்றுள்ளனர்.
- இந்தியாவில் இருந்து லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா மற்றும் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சபாநாயகர்களும் இந்த மாநாட்டில் கலந்துகொண்டுள்ளனர். தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் அப்பாவு இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.
- காமன்வெல்த் மாநாடு நடைபெற்ற வளாகத்திற்கு லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா தலைமையில் சபாநாயகர்கள் கையில் தேசியக் கொடி ஏந்திய வண்ணம் பேரணியாக வந்தனர்.
சுவிட்சர்லாந்தின் டயமண்ட் லீக் மீட் தொடர் - சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா
- சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார்.
- இந்நிலையில், நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டயமண்ட் லீக் மீட் தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் மீதான தடை நீங்கியது
- AIFF செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை நிறுத்தப்பட்டது என்பதையும், இதனால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகம், AIFF இன் தினசரி விவகாரங்களை வழக்கம்போல மேற்கொள்ளலாம் என்றும் ஃபீபா உறுதி செய்தது.
- சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் இடைநீக்கத்தின் இடைநீக்கம் ரத்தானதால், FIFA U-17 மகளிர் உலகக் கோப்பை, ஏற்கனவே திட்டமிட்டபடி, அக்டோபர் 11ம் தேதி முதல் 30ம் தேதி வரை நடைபெறும்.
- AIFF செயற்குழுவின் அதிகாரங்களை ஏற்க அமைக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் ஆணை நிறுத்தப்பட்டது மற்றும் AIFF நிர்வாகம் AIFF இன் தினசரி விவகாரங்களில் முழுக் கட்டுப்பாட்டை மீண்டும் பெற்றுள்ளது என்பதை FIFA உறுதிப்படுத்தியதை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டது.
தேசிய தொழிலாளர் நல மாநாடு
- திருப்பதியில் 2 நாள் தேசிய தொழிலாளர் நல மாநாடு, மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடந்தது.
- இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இந்த மாநாட்டின் முதல் நாளான வியாழக்கிழமையன்று, காணொலி முலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.
- இந்நிலையில், 2-ம் நாள் மாநாடு தொடங்கியது. இதில், ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, காணொலி மூலம் இந்த மாநாட்டில் கலந்துகொண்ட அனைவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, திருப்பதி நகரில் தொழிலாளர் நல தேசிய மாநாட்டை நடத்தியதற்கு நன்றியை தெரிவித்துக்கொண்டார்.
- இஎஸ்ஐ மருத்துவமனைகள் இனி நாட்டில் உள்ள மொத்தம் 744 மாவட்டங்களிலும் விரிவாக்கம் செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
- இக்கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் ராமேஷ்வர் டெலி, சுனில் பரத்வால், மற்றும் 25 மாநில தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர்.
பாரத சாரண சாரணியர் இயக்க தலைவராக அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தேர்வு
- சாரண சாரணியர் இயக்கம் என்பது எப்போதும் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் செயல்படும். அதன்படி தலைவர், துணைத்தலைவர், மாநில ஆணையர் பதவிகளுக்கு ஆகஸ்ட் 17ம் தேதி முதல் 22ம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
- இறுதி வேட்பாளர் பட்டியல் 26ம் தேதி வெளியானது. இந்த தேர்தலில் மாநில தலைவர் பதவிக்கு யாரும் போட்டியிடாததால், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- பள்ளி கல்வி துறை ஆணையர் பாரத சாரணர் சாரணியர் இயக்க மாநில ஆணையராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- துணைத் தலைவர்களாக பள்ளிக் கல்வி துறை இயக்குனர் கண்ணப்பன், பெரியண்ணன், விவேகானந்தன், மகேந்திரன், எத்திராஜூலு, நாராயணசாமி, லட்சுமி, சுகன்யா, அமுதவள்ளி, கஸ்தூரி சுதாகர், பாக்கியலட்சுமி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
எம்எல்ஏ பதவியில் இருந்து ஹேமந்த் சோரன் தகுதி நீக்கம் அறிவித்தது தேர்தல் ஆணையம்
- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், நிலக்கரித் துறையைத் தன்வசம் வைத்திருக்கிறார். இந்த நிலையில், தனது அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தி, நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில், தன் பெயரிலேயே சுரங்கங்களை ஒதுக்கிக் கொண்டார் என்று ஹேமந்த் சோரன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
- இந்த விவகாரத்தைத் தேர்தல் ஆணையத்தின் பார்வைக்குக் கொண்டு சென்ற பாஜக, ஹேமந்த் சோரன் மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், 1951ன் கீழ்வரும் பிரிவு 9A யை மீறிவிட்டார்.
- இந்த விவகாரத்தில் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி நடந்திருக்கிறது. எனவே, அவரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தது.
- அதன் அடிப்படையில், ஹேமந்த் சோரனுக்கு நெருங்கிய வட்டாரங்களில் விசாரணையும், சோதனைகளையும் நடத்திய தேர்தல் ஆணையம், ஹேமந்த் சோரனை எம்.எல்.ஏ பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்யலாம் என்ற பரிந்துரையை ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.
- இந்த நிலையில் ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் எம்எல்ஏ பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஓய்வு - வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு
- உச்சநீதிமன்றத்தின் 48-வது தலைமை நீதிபதியான என்.வி.ரமணா பணி ஓய்வு பெறுகிறார். உச்சநீதிமன்றத்தில் இதுவரை இல்லாத வகையில் தலைமை நீதிபதி என்.வி.ரமணாவை சிறப்பிக்கும் வகையில் முதல் முறையாக அவரது தலைமையிலான பெஞ்ச் விசாரிக்கும் வழக்குகள் இன்று நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
- உச்சநீதிமன்றத்தின் 71 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக வழக்கு விசாரணைகள் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகின்றன.
உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.752 கோடி நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு
- தமிழ்நாட்டில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்காக அடிப்படை மானியமாக மாநில நிதி ஆணையத்தின் பரிந்துரையின் படி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.
- பட்ஜெட்டில் நடப்பு ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள 5,080 கோடி ரூபாயில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கு மட்டும் 752 கோடி ரூபாய் தற்போது விடுவிக்கப்பட்டுள்ளது.
- கிராம ஊராட்சிகளுக்கு 424 கோடி ரூபாயும், ஊராட்சி ஒன்றியங்களுக்கு 270 கோடி ரூபாயும், மாவட்ட ஊராட்சிகளுக்கு 50 கோடி ரூபாயும் ஒதுக்கி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
- உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேவையான நிதி, தடையற்ற குடிநீர், மழைநீர் சேகரிப்பு திட்டங்கள் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- புதுதில்லியில் உள்ள இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், ஸ்வீடன் நாட்டின் வான் போக்குவரத்து சேவை அமைப்பான எல்.எஃப்.வி. நிறுவனத்துடன், புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
- அதிநவீன விமானப் போக்குவரத்துக்கான தீர்வுகளை கண்டறிய ஏதுவாக, அடுத்த தலைமுறை நீடித்த விமானப் போக்குவரத்து தொழில்நுட்பத்தை உருவாக்கி, அதனை செயல்படுத்துவதற்காக, இந்தியா மற்றும் ஸ்வீடன் நாட்டின் விமானப் போக்குவரத்து சேவை வழங்கும் நிறுவனங்களை இந்த உடன்படிக்கை ஒன்றிணைத்துள்ளது.
- இரு நாடுகளிடையே விமானப் போக்குவரத்து சார்ந்த நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பத்தை இருதரப்பும் பகிர்ந்துகொள்ள இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வழிவகை செய்யும்.
- ஸ்விடனின் புதுமை கண்டுபிடிப்புகள் மற்றும் நிபுணத்துவத்தை இந்திய நிறுவனங்கள் பயன்படுத்தி வளர்ச்சியை விரைவுபடுத்தவும் இது உதவும்.
- இந்த ஒப்பந்தத்தின்படி, பரஸ்பர நலன்சார்ந்த துறைகளில் தொழில் நிறுவனங்கள் ஒத்துழைப்பை மேற்கொள்ளவும் வகை செய்யப்பட்டுள்ளது.
- இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் உறுப்பினர் (விமானப் போக்குவரத்து சேவைகள்) திரு. எம். சுரேஷ் மற்றும் ஸ்வீடன் நாட்டின் எல்.எஃப்.வி. நிறுவனத்தின் துணை தலைமை இயக்குனர் திரு. மேக்னஸ் கோரல் ஆகியோர் கையெழுத்திட்டனர்.