Type Here to Get Search Results !

TNPSC 25th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மாறி வரும் சூழலுக்கேற்ப மாற்றிக்கொள்ள வேண்டும் - தொழிலாளர் மாநாட்டில் பிரதமர் அறிவுரை

 • திருப்பதியில் உள்ள தாஜ் நட்சத்திர ஓட்டலில் 2 நாட்கள் நடைபெற உள்ள தேசிய தொழிலாளர் நல மாநாட்டை நேற்று மத்திய சுற்றுச்சூழல், வனம், தொழிலாளர் நலம், மற்றும் ஊரக வேலை வாய்ப்புத்துறை அமைச்சர் புபேந்தர் யாதவ் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
 • இதில், 25 மாநில மற்றும் யூனியன் பிரதேச தொழிலாளர் நலத்துறை அமைச்சர்கள் பங்கேற்றனர். இதில், காணொலி மூலம் பிரதமர் மோடி பேசியதாவது: உலகில் வளர்ச்சி பெற்ற, வலிமை பெற்ற நாடாக நம் நாடு உருவாவதில் தொழிலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. 
 • ஆதலால்தான் இவர்களுக்காக பிரதமர் ஸ்ரம-யோகி மந்தன் யோஜனா, சுரக் ஷ பீமா யோஜனா, ஜீவனஜோதி பீமா யோஜனா போன்ற பல்வேறு மத்திய அரசு நலத்திட்டங்கள் அமலில் உள்ளன.
 • இதில், ஒரே ஆண்டில் மட்டும் 400 பிராந்தியங்களில் இருந்து 28 கோடி தொழிலாளர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்துள்ளனர். இது முக்கியமாக, கட்டிட கூலி தொழிலாளர்கள், ஊர் விட்டு ஊர் செல்லும் தொழிலாளர்கள் அதிகம் பயனடைகின்றனர். 
 • இதில், மாநில தொழிலாளர் இணையத்தையும் இணைக்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். கடந்த 8 ஆண்டுகளாக தொழிலாளர் சட்டத்தில் உள்ள அடிமைத் தனத்தை ஒழிக்க மத்திய அரசு பணியாற்றி வருகிறது. இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

46 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது

 • இந்திய முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ராதாகிருஷ்ணன் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்த நாளில் தேசிய அளவில் மற்றும் மாநில அளவில் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்கள் நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்படுகின்றனர். 
 • தேசிய நல்லாசிரியர் விருதுகளை ஒவ்வொரு ஆண்டும் டெல்லியில் ஜனாதிபதி வழங்குவார். இந்நிலையில் 2022ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது வழங்கப்படும் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில் 46 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
 • தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி ஆசிரியர் ராமச்சந்திரன், புதுச்சேரி முதலியார்பேட்டை அரசு மேனிலைப் பள்ளி ஆசிரியர் அரவிந்த் ராஜா, ஆகியோரும் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். 
 • தேசிய நல்லாசிரியர் பட்டியலில் இடம்பெற்றுள்ளவர்களுக்கு செப்டம்பர் 5ம் தேதி டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நடக்கும் விழாவில், ஜனாதிபதி விருதுகளை வழங்குவார். இந்த விருது பெறுவோருக்கு பாராட்டு சான்றும், ரொக்கத் தொகை ரூ.50 ஆயிரம், வெள்ளி பதக்கம் ஒன்றும் வழங்கப்படும்.

இந்தியாவின் அவுட்லுக் டிராவலர் 2022 விருதை தட்டிச் சென்ற தமிழ்நாடு

 • தமிழ்நாட்டிற்கான வெள்ளி விருதினை, மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி வழங்கினார். இந்த விருது வழங்கும் விழா டெல்லியில் நடைபெற்ற நிலையில், தமிழ்நாடு அரசு சார்பில் சுற்றுலாத்துறை முதன்மை செயலாளர் சந்திரமோகன், சுற்றுலாத்துறை இயக்குனர் சந்தீப் நந்தூரி ஆகியோர் பங்கேற்றனர்.
 • அவுட்லுக் விருதுகள் பயண மற்றும் சுற்றுலாத் துறையில் தரத்தின் அளவுகோலை குறிக்கின்றன மற்றும் தொழில்துறையின் 360 டிகிரி பார்வையை நோக்கமாகக் கொண்டுள்ளன. 
 • பல ஆண்டுகளாக, இந்த விருதுகள் சுற்றுலாத் தொழில் முனைவோர்களை பல்வேறு கோணங்களில் ஈர்த்துள்ளது. சர்வதேச நோய் பரவலுக்குப்பின் சுற்றலாத்துறை சார்ந்த தொழில்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை முன்னிலைப்படுத்துவதில் இந்த ஆண்டு முக்கிய கவனம் செலுத்தப்பட்டது.
 • சிறந்த சுற்றுச்சூழல் சுற்றுலாத் தலம், சிறந்த வனவிலங்குத் தலம், சிறந்த சாகச தலம் மற்றும் சிறந்த விழாத் தலம் உள்ளிட்ட 11 வெவ்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. இந்திய சுற்றுலாத்துறையை சேர்ந்த முக்கிய நபர்களைக் கொண்டு விருதுகள் மதிப்பீடு செய்யப்பட்டன.
 • இந்த நிகழ்வில் சுற்றுலத்துறையில் ஸ்டார்ட் அப்கள் மற்றும் இலக்குகளைச் சந்தைப்படுத்துதல் ஆகியவற்றில் கவனம் செலுத்துதல் தொடர்பான குழு விவாதங்களும் நடைபெற்றன.

டி.ஆர்.டி.ஒ. தலைவராக சமீர் வி. காமத் நியமனம்

 • டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்திய ராணுவ ஆராய்ச்சி மற்றும், மேம்பாட்டு நிறுவனம் முப்படைகளுக்கு தேவையான ஆயுதங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் தொடர்பாக மத்திய அரசுக்கு ஆலோசனைகளை வழங்கி செயல்படுத்தி வருகிறது. 
 • அதிநவீன ஆயுதங்களை உள்நாட்டில் உருவாக்குவது தொடர்பான திட்டங்கள் குறித்தும் ஆராய்ந்து வருகிறது. இந்நிலையில் இந்நிறுவனத்தின் செயலர் மற்றும் தலைவராக இருந்த சத்தீஷ் ரெட்டி, மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அறிவியல் ஆலோசகாரக நியமிக்கப்பட்டார்.
 • இதையடுத்து டி.ஆர்.டி.ஓ. புதிய தலைவராக மூத்த விஞ்ஞானியான சமீர் வி.காமத் நியமிக்கப்பட்டார். இவர் டி.ஆர்.டி.ஓ. நிறுவனத்தின் செயலராகவும் இப்பதவியில் இருப்பார்.

உக்ரைன் விவகாரம் - முதல்முறையாக ஐநா சபையில் ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிப்பு

 • ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் பிப்ரவரி 24 உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். ரஷ்யாவின் இந்த திடீர் போர் தாக்குதல் ஆறு மாதங்கள் கடந்தும் ஓயாமல் நீடித்து வருகிறது. 
 • இந்த போர் அந்த பிராந்தியத்தில் மட்டுமல்லாது ஒட்டுமொத்த ஐரோப்பிய கண்டத்தையே சலசலக்க வைத்துள்ளது. இந்த விவகாரத்தில் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளது.
 • சீனா ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு எடுத்துள்ள நிலையில், இந்தியா இவ்விகாரத்தில் இரு நாடுகளுக்கும் தனிப்பட்ட ஆதரவு எதிர்ப்பு என்று இல்லாமல், நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
 • இந்த போருக்குப் பின்னர் ரஷ்யாவுக்கு எதிராக பல்வேறு தீர்மானங்கள் ஐநா சபையில் கொண்டுவரப்பட்ட நிலையில், இந்த தீர்மானங்களில் ரஷ்யாவை எதிர்த்து வாக்களிக்காமல் இந்தியா தொடர்ந்து புறக்கணித்து வந்தது. 
 • இந்நிலையில், ஐநா சபை பாதுகாப்பு கவுன்சிலில் முதல் முறையாக உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யாவை எதிர்த்து இந்தியா வாக்களித்துள்ளது. 
 • ஐநா சபை பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் உக்ரைன் அதிபர் விளாதிமோர் செலன்ஸ்கியை வீடியோ டெலி கான்பரென்ஸ் மூலம் உரையாற்ற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
 • உக்ரைன் அதிபரை உரையாற்ற அழைப்பதை ஏற்க முடியாது என்று அழைப்பை எதிர்த்து ரஷ்யா ஐநா சபையில் தீர்மானம் கொண்டு வந்தது. 
 • ரஷ்யாவின் இந்த தீர்மானத்திற்கு எதிராக இந்தியா வாக்களித்தது. அதேவேளை, சீனா இந்த தீர்மானத்தில் வாக்களிக்காமல் புறக்கணித்தது. 
 • போர் விவகாரத்தை பொறுத்த வரை ரஷ்யாவை இந்தியா இதுவரை விமர்சித்து கருத்து தெரிவிக்கவில்லை. அதேவேளை, இரு தரப்பும் பேச்சு வார்த்தை மூலம் அமைதி காண வேண்டும் இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடைகளின் சுமையைக் குறைக்கவும் சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011-இல் மத்திய அரசு திருத்தம்
 • உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடைகளுக்கு சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) விதிகள் 2011-லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்புகளிலிருந்து மத்திய நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின் கீழ் இயங்கும் நுகர்வோர் விவகாரங்கள் துறைக்கு கோரிக்கைகள் அளிக்கப்பட்டன. 
 • அதன் அடிப்படையில், எளிதான வர்த்தகத்தை மேற்கொள்ளவும், உதிரியாக விற்பனை செய்யப்படும் ஆடை அல்லது பின்னப்பட்ட ஆடைகளின் சுமையைக் குறைக்கவும், சட்ட ரீதியான அளவியல் (அடைக்கப்பட்ட பொருட்கள்) (மூன்றாவது திருத்தம்) விதிகள் 2022- இன் வாயிலாக கீழ்காணும் தகவல்களை வெளியிடுவதிலிருந்து இந்தப் பொருட்களுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது:
 • பொருளின் பொதுவான/ பொதுப் பெயர்
 • எடை அல்லது மீட்டரின் அலகு அல்லது தொகுப்பில் உள்ள பொருட்களின் எண்ணிக்கையின் நிகர அளவு
 • அலகின் விற்பனை விலை
 • தயாரிக்கப்பட்ட அல்லது முன்கூட்டியே அட்டையில் அடைக்கப்பட்ட அல்லது இறக்குமதி செய்யப்பட்ட மாதம் மற்றும் வருடம்
 • காலப்போக்கில் மனிதர்களின் பயன்பாட்டிற்கு தகுதியற்றதாக மாறும் பொருட்களுக்கு, பயன்படுத்துவதற்கு உகந்த தேதி, மாதம் மற்றும் ஆண்டு
 • நுகர்வோர் தொடர்புகொள்ள வேண்டிய பெயர் மற்றும் முகவரி
 • தயாரிப்பாளர்/ விற்பனையாளர்/ நிறுவன உரிமையாளர்/ இறக்குமதி செய்யப்பட்ட நாட்டின் பெயருடன் இறக்குமதியாளர்/ தயாரிப்பாளரின் பெயர், நுகர்வோர் தொடர்புக்கான மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி எண், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளின் அளவுகள், அதிகபட்ச சில்லறை விலை ஆகிய நுகர்வோருக்கு சம்பந்தமான தகவல்கள் மட்டுமே இனி இடம்பெற்றிருந்தால் போதுமானது
கோதுமை அல்லது மெஸ்லின் மாவுக்கான ஏற்றுமதிக் கொள்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது
 • கோதுமை அல்லது மெஸ்லின் மாவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள்/ தடையிலிருந்து விலக்கு அளிக்கும் கொள்கை திருத்த முன்மொழிவுக்கு  பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்த ஒப்புதல் கோதுமை மாவு ஏற்றுமதிக்கான கட்டுப்பாட்டை அனுமதிக்கும். இது கோதுமை மாவின் அதிகரிக்கும் விலை உயர்வை கட்டுப்படுத்தும். மேலும், சமூகத்தில் மிகவும் நலிந்த பிரிவினரின் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும்.
 • இது சம்பந்தமாக வெளிநாட்டு வர்த்தக தலைமை இயக்குநரகம் அறிவிக்கை வெளியிடும்.
 • முன்னதாக  கோதுமை மாவு ஏற்றுமதி மீது எந்தவித தடையோ, கட்டுப்பாடோ விதிக்கக் கூடாது என்ற கொள்கை இருந்தது. நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யவும், கோதுமை மாவின் விலையேற்றத்தை கட்டுக்குள் வைத்திருக்கவும், கோதுமை மாவு ஏற்றுமதி மீதான தடை மற்றும் கட்டுப்பாடுகளிலிருந்து விதி விலக்கை திரும்பப் பெறவேண்டிய தேவை ஏற்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel