Type Here to Get Search Results !

TNPSC 23rd AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

மிகச் சிறப்பான பணிகளுக்காக உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றது மிசோரம் போலீஸ்

  • வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரமில், காவல் துறையினர் கடந்த மே மாதத்தில் வெளிநாட்டு கடத்தல் விலங்குகள் 468-ஐ பறிமுதல் செய்தனர். 
  • கடந்த ஜூன் மாதத்தில் 930 கிலோ 229 கிராம் போதைப் பொருட்களை கைப்பற்றி அழித்தனர். மிசோரம் காவல் துறையினரின் இந்த கடமை மற்றும் அர்ப்பணிப்பு பிரிட்டனில் இயங்கும் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
  • இதற்காக மிகவும் கவுரவமிக்க தங்க பதிப்பு 2022 சான்றிதழ்கள் மிசோரம் காவல் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த சான்றிதழ்களை மிசோரம் காவல் துறை சார்பில் சிஐடி டிஐஜி பூ லால் ஹூலியானா ஃபனாய் பெற்றுக் கொண்டார்.
  • உலகத் தரத்திலான நடவடிக்கைகளை பதிவு செய்து, அவற்றை கவுரவிப்பதே உலக சாதனை புத்தகம் அமைப்பின் முக்கிய நோக்கம் ஆகும்.

கடற்படைக்கான ஏவுகணை சோதனை வெற்றி

  • நம் கடற்படைக்காக, வி.எல்.எஸ்.ஆர்.எஸ்.ஏ.எம்., எனப்படும் செங்குத்தாக செலுத்தப்படும் குறுகிய தொலைவு ஏவுகணையை, டி.ஆர்.டி.ஓ., எனப்படும் ராணுவ ஆராய்ச்சி மற்றும்மேம்பாட்டு அமைப்பு வடிவமைத்துள்ளது.
  • இது, முழுதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை சோதனை, ஒடிசா மாநிலம் சந்திரபுர் அருகே நேற்று நடந்தது. 
  • இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்ததாக டி.ஆர்.டி.ஓ., தெரிவித்துள்ளது. இதற்கு, ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு துறை செயலரும், டி.ஆர்.டி.ஓ., தலைவருமான ஜி.சதீஷ் ரெட்டி உள்ளிட்டோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

காலணி, தோல் பொருட்களுக்கு புதிய கொள்கை வெளியீடு - ரூ.2,250 கோடி முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்பந்தம்

  • தமிழக தொழில் துறை சார்பில் காலணிகள் மற்றும் தோல் துறை மாநாடு சென்னையில் நடைபெற்றது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,250 கோடி முதலீட்டில் 5 முதலீட்டுத் திட்டங்களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • தொடர்ந்து, காலணி மற்றும் தோல் பொருட்கள் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட, அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, தா.மோ.அன்பரசன் பெற்றுக் கொண்டனர். 
  • கோத்தாரி- பீனிக்ஸ் அக்கார்டு நிறுவனம் சார்பில் காலணி உற்பத்திக்காக ரூ.1,200 கோடி முதலீடு, ஆயத்த நிலை மாதிரி சூழலமைப்புக்காக ரூ.500 கோடி முதலீடு, கோத்தாரி- எஸ்இஎம்எஸ் குழுமம் சார்பில் தோல் அல்லாத காலணி உற்பத்திக்காக ரூ.300 கோடி முதலீடு ஆகியவற்றுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • இதுதவிர, வேகன் குழுமம் சார்பில் தோல் அணிகலன் மற்றும் பரிசு அணிகலன்களின் உபகரணங்கள் உற்பத்திக்கு ரூ.150 கோடி முதலீடு, வாக்கரூ நிறுவனம் சார்பில் தோல் அல்லாத காலணி உற்பத்தியில் ரூ.100 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தமும் மேற்கொள்ளப்பட்டது.

எல்.ஜி.பி.டி. பிரிவினரை இனி இப்படித்தான் அழைக்கவேண்டும் - தமிழக அரசு வெளியிட்ட சொல்லகராதி

  • LGBTQIA+ (எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ்) சமுதாயத்தினரின் உரிமைகள் பாதுகாப்பு, ஊடகங்களில் இப்பிரிவினரை குறிப்பிடுவது தொடர்பான சொல்லகராதியை தயாரிப்பது தொடர்பான வழக்கு, நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணையில் உள்ளது. 
  • எல்.ஜி.பி.டி.க்யூ.ஐ.ஏ ப்ளஸ் சமுதாயத்தினரை குறிப்பிடும் சொல்லகராதியை நான்கு வாரங்களில் வெளியிட வேண்டும் என தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம், கடந்த ஜூலை 25ல் உத்தரவு பிறப்பித்திருந்தது.
  • தன் பாலீர்ப்பு ஆண் (gay), தன்பாலீர்ப்பு பெண் (lesbian) என்றும், இரு பாலீர்ப்புடைய நபர் (bisexual) என்றோ அழைக்கலாம் எனவும், பால்புதுமையர் (queer) என அழைக்க வேண்டும் என அரசு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.
  • இதை பதிவு செய்த நீதிபதி, எல்.ஜி.பி.டி. பிரிவினரை குறிப்பிட, இந்த சொற்களையே பயன்படுத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.

இங்கிலாந்துக்கான இந்தியாவின் தூதராக விக்ரம் துரைசாமி நியமனம்

  • இங்கிலாந்துக்கான இந்திய தூதரான காயத்ரி இஸ்ஸார் குமார், ஜூன் 30ம் தேதியுடன் பணி ஓய்வு பெற்றார். இதனைத் தொடர்ந்து இங்கிலாந்துக்கான புதிய தூதராக விக்ரம் துரைசாமி நியமிக்கப்பட்டுள்ளார்.
  • 1992-ம் ஆண்டு பேட்ச் ஐ.எப்.எஸ். அதிகாரியான விக்ரம் துரைசாமியின் தந்தை, 1971-ம் ஆண்டு வங்கதேச விடுதலைக்கான இந்தியாவின் போரில் விமானப் படை விமானியாக பணியாற்றியவர். டெல்லி பல்கலைக் கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர் விக்ரம் துரைசாமி.
வணிக நீதிமன்றங்கள், மாற்று தகராறு தீர்வு வழிமுறைகள் போன்ற நடுவர் மன்றம், நடுநிலைக் குழுவில் பணிபுரிபவர்களின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பகிர்ந்து கொள்ள இந்தியா - இங்கிலாந்து ஒப்புதல்
  • இந்தியா - இங்கிலாந்து கூட்டு ஆலோசனைக் குழுவின் அண்மைய கூட்டத்தில், வணிக நீதிமன்றங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய தகராறுகளை தீர்த்து வைக்கும் நடுநிலைக் குழுவில் பணியாற்றுபவர்களின் அனுபவங்கள் மற்றும் சிறந்த நடைமுறைகளை பரிமாறிக் கொள்ளுதல், வழக்கு நிர்வாகம், நீதி வழங்குதல் மற்றும் ஒப்பந்தங்களை செயல்படுத்துதல் மற்றும் எளிமையான சட்டவரைவு ஆகியவற்றில் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது ஆகியவை தொடர்பாக இந்தியா - இங்கிலாந்து இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. 
  • சட்ட ஆலோசகர்கள், வரைவாளர்கள், நீதித்துறை அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்ட வல்லுநர்கள் ஆகியோருக்கு, புகழ் பெற்ற நிறுவனங்களில் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை நடத்தவும் ஒப்புக் கொள்ளப்பட்டது.
  • சட்டம் மற்றும் நீதித்துறையில், இருநாடுகளிடையே ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தத்தில், 2018 ஜூலை 18-ம் தேதி இந்தியாவும், இங்கிலாந்தும் கையெழுத்திட்டன. 
  • ஒத்துழைப்புத் துறைகளில் முன்னேறி செல்லும் வழியை உறுதிப்படுத்துவதன் மூலம், அதன் நோக்கங்களை நிறைவேற்ற புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில், கூட்டு ஆலோசனைக் குழு தொடங்கப்பட்டது. இந்தக் குழுவின் மூன்றாவது கூட்டம், 18 ஆகஸ்ட் 2022 புதுதில்லியில் நடைபெற்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel