Type Here to Get Search Results !

TNPSC 19th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வங்கதேச பயிற்சியாளராக ஸ்ரீராம் நியமனம்

  • ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ள ஆசிய கோப்பை மற்றும் ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ள டி 20 உலகக் கோப்பைக்கு ஸ்ரீதரன் ஸ்ரீராம் பயிற்சியாளராக செயல்படுவார் என வங்கதேச கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது. 
  • 46 வயதான ஸ்ரீதரன் ஸ்ரீராம் இந்திய அணிக்காக 2000 முதல் 2004 வரையிலான காலக்கட்டத்தில் 8 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி உள்ளார். 
  • ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளார். ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியில் துணை பயிற்சியாளராக இருந்துள்ளார்.

தமிழக மின் வாரியத்திற்கு பெஸ்ட் எக்ஸ்போர்ட்டர் விருது 2022

  • ஒடிசா மாநிலத்தில் உள்ள மத்திய அரசின், 'கோல் இந்தியா' நிறுவனத்திற்கு சொந்தமான, 'தால்சர், ஐ.பி.,வேலி' ஆகிய சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படுகிறது. 
  • பின், அம்மாநிலத்தில் உள்ள பாரதீப் துறைமுகத்திற்கு அனுப்பப்படுகிறது. அங்கிருந்து, கப்பல்களில் நிலக்கரி ஏற்றி, தமிழகத்திற்கு எடுத்து வரப்படுகிறது.
  • பாரதீப் துறைமுக ஆணையம், 2021 - 22ம் நிதியாண்டில், 'பெஸ்ட் எக்ஸ்போர்ட்டர்' என்ற பிரிவின் கீழ் அதிக நிலக்கரியை கையாண்டதற்காக, தமிழக மின் வாரியத்திற்கு விருது வழங்கி உள்ளது. 
தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாடு
  • டெல்லியில் நடந்த தேசிய பாதுகாப்பு உத்திகள் (என்எஸ்எஸ்) தொடர்பான மாநாட்டில் பங்கேற்ற உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசுகையில், 'அனைத்து மாநிலங்களும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்; நாட்டு இளைஞர்களின் எதிர்காலத்திற்கான திட்டங்களை வகுத்து ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்.
  • எல்லைப் பகுதிகளில் நடைபெறும் மக்கள்தொகை மாற்றங்களை எல்லை மாநிலங்களின் டிஜிபிகள் கண்காணிக்க வேண்டும். மாநில, மாவட்ட எல்லைகளில் அனைத்து தொழில்நுட்ப வசதிகளையும் உள்ளடக்கிய தகவல் தொழில்நுட்பங்களை மேம்படுத்த வேண்டும். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாத எதிர்ப்பு, வடகிழக்கில் தீவிரவாதக் குழுக்கள் மற்றும் இடதுசாரி தீவிரவாதம் உள்ளிட்டவை கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.
  • தேசிய தானியங்கி கைரேகை அடையாள அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. போதை பொருளை கண்டுபிடிப்பது மட்டுமின்றி, அதன் வலையமைப்பை முற்றிலுமாக அகற்ற வேண்டும். 
  • மாநில காவல்துறையின் பாதுகாப்பு அமைப்பை வலுப்படுத்த 5ஜி தொழில்நுட்பத்தை நன்றாகப் பயன்படுத்த வேண்டும். உளவுத்துறையில் நவீன முறைகளை கையாள வேண்டும். தொழில்நுட்பத்துடன், மனித நுண்ணறிவைப் பயன்படுத்தவும் வேண்டும்' என்றார். இரண்டு நாள் நடந்த இந்த மாநாட்டில், சுமார் 600 அதிகாரிகள் பங்கேற்றனர்.
  • தீவிரவாத எதிர்ப்பு, மாவோயிஸ்டுகள் எதிர்ப்பு படை, கிரிப்டோகரன்சி, ட்ரோன் தொழில்நுட்பம், இணையம் மற்றும் சமூக ஊடக கண்காணிப்பு, தீவுகள், துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. 
  • மேலும் 5ஜி தொழில்நுட்பம், மக்கள்தொகை மாற்றங்கள், எல்லைப் பகுதிகளில் வளர்ந்து வரும் தீவிரமயமாக்கல் மற்றும் போதைப்பொருள் கடத்தல் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஆஸ்திரேலியாவின் டார்வினில் நடைபெறும் பிட்ச் பிளாக் 2022 ராணுவ பயிற்சி
  • டார்வினில் ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 8 வரை நடைபெறும் பிட்ச் பிளாக் 2022 ராணுவ பயிற்சியில் பங்கேற்பதற்காக இந்திய விமானப்படைப்பிரிவு ஆஸ்திரேலியா சென்றுள்ளது. 
  • ஆஸ்திரேலிய விமானப்படையால் பல நாடுகளின் பங்கேற்புடன் இந்தப் பயிற்சி இரண்டு ஆண்டுக்கு ஒரு முறை நடத்தப்படுகிறது. கடந்த முறை இந்தப் பயிற்சி 2018ல் நடைபெற்றது. 
  • கொவிட்-19 பெருந்தொற்று காரணமாக, 2020க்கான பயிற்சி ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டின் பயிற்சியில் பல்வேறு விமானப்படைகளைச் சேர்ந்த 100 போர் விமானங்களும், 2500 ராணுவ வீரர்களும் பங்கேற்கிறார்கள்.
  • அணித்தலைவர் ஒய்பிஎஸ் நேகி  தலைமையிலான இந்திய விமானப்படையின் அணியில் 100 விமாப்படை வீரர்கள் பங்கேற்கின்றனர். சூ-30 எம்கேஐ விமானப்படை விமானங்கள் நான்கும், சி -17 போர் விமானம் இரண்டும் இடம்பெற்றுள்ளன.
ஜூலை 2022 மாதத்திற்கான விவசாயம் மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் - அதிக புள்ளிகளுடன் தமிழகம் முதலிடம்
  • 2022,  ஜூலை மாதத்திற்கான விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (அடிப்படை 1986-87=100) 6 புள்ளிகள் அதிகரித்து முறையே 1131 மற்றும் 1143 ஆக உள்ளது. 
  • அரிசி, கோதுமை- ஆட்டா, கம்பு, தானியங்கள், பால், மீன் வெங்காயம், பச்சை/ காய்ந்த மிளகாய், இஞ்சி, காய்கறிகள், பழங்கள் போன்றவற்றின் விலை உயர்வே, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான பொது குறியீட்டு உயர்வுக்கு முக்கிய காரணமாக உள்ளது.
  • இந்தக் குறியீட்டு உயர்வு, மாநிலத்திற்கு மாநிலம் வேறுபட்டது.  விவசாயத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை,  20 மாநிலங்களில் 1 புள்ளி முதல் 13 புள்ளிகள் வரை உயர்ந்துள்ள வேளையில், 1301 புள்ளிகளுடன் தமிழகம் பட்டியலில் முதலிடத்திலும், 890 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
  • கிராமப்புறத் தொழிலாளர்களைப் பொறுத்தவரை, 20 மாநிலங்களில் 1 முதல் 13 புள்ளிகள் அதிகரித்துள்ள நிலையில், தமிழகம் 1290 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், இமாச்சலப் பிரதேசம் 942 புள்ளிகளுடன் கடைசி இடத்திலும் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel