பெயா் மாற்றம் பெற்றது குரங்கு அம்மையின் ரகம்
- குரங்கு அம்மை தீநுண்மியின் துணை ரகங்களுக்கு 'காங்கோ படுகை, தென் ஆப்பிரிக்க கிளேட்' என்றிருந்த பெயா்களை 'கிளேட் 1, கிளேட் 2' என உலக சுகாதார அமைப்பு மாற்றியுள்ளது.
- இந்த பெயா் மாற்றத்தை வரவேற்றுள்ள ஆப்பிரிக்க நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு மைய இடைக்கால இயக்குநா் அகமது ஆக்வெல் (படம்), 'தீநுண்மிகளுக்கு காங்கோ, தென் ஆப்பிரிக்கா என்ற பெயா் பயன்படுத்தப்பட்டது அந்த நாடுகளை அவமதிப்பதாக இருந்தது' என்றாா்.
65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்கிறார்
- வருகிற 22ம் தேதி முதல் 26ம் தேதி வரை கனடா நாட்டின் ஹாலிபேக்ஸ் நகரில் நடைபெறவிருக்கும் 65வது காமன்வெல்த் நாடாளுமன்ற மாநாட்டில் தமிழக கிளையின் பிரதிநிதியாக பேரவை தலைவர் மு.அப்பாவு கலந்து கொள்கிறார். சட்டமன்ற செயலாளர் சீனிவாசனும் இந்த மாநாட்டில் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொள்கிறார்.
- வியட்நாம் - இந்தியா இடையேயான இருதரப்பு ராணுவ பயிற்சி (வின்பேக்ஸ்) கடந்த ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் ஹரியானாவின் சந்திமந்திரில் தொடங்கி நடைபெற்று வந்தது.
- இந்த பயிற்சியில், பேரிடர் காலங்களில் மனிதர்களை மீட்க உதவும் மேக் இன் இந்தியா மற்றும் தற்சார்பு இந்தியாவின் கீழ் உருவாக்கப்பட கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டன.
- ஐநா அமைதி குழு நடவடிக்கைகளில் ராணுவ பொறியாளர் மற்றும் மருத்துவக் குழுக்களின் செயல்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த பயிற்சி நடைபெற்றது.
- வியட்நாமின் ராணுவம் முதன்முதலாக வெளிநாட்டுடன் மேற்கொண்ட முதல் ராணுவ பயிற்சி இதுவாகும். இரு நாட்டு வீரர்களுக்கும் கருத்தியல் மற்றும் செய்முறை வகுப்புகள் கற்பிக்கப்பட்டன.
- பயிற்சியின் நிறைவு விழாவில், இந்தியாவுக்கான வியட்நாம் தூதர் திரு பாம் சான்ஹ் சாவோ, மேற்கு பிராந்திய ராணுவ தலைமை அதிகாரி லெப்டினண்ட் ஜெனரல் நாவ் குமார் காந்துரி உள்பட பல அதிகாரிகள் கலந்துக் கொண்டனர். அடுத்த வின்பேக்ஸ் பயிற்சி வியட்நாமில் 2023 ஆண்டு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
- மலேசியாவின் குவான்டன் விமானத் தளத்தில் நடைபெற்ற இந்திய விமானப்படை மற்றும் ராயல் மலேசியன் விமானப்படை இடையேயான இருதரப்பு விமானப் பயிற்சி உத்ரா சக்தி கடந்த ஆகஸ்ட் 16 அன்று நிறைவு பெற்றது.
- நான்கு நாட்கள் நடைபெற்ற இந்த பயிற்சியில் இரண்டு விமானப்படைகளும் இணைந்து சிக்கலான வான்வெளி தாக்குதல் பயிற்சியில் ஈடுபட்டன. இரு தரப்பினரிடமிருந்தும் அதிக அளவிலான போர் யுக்திகள் வெளிப்படுத்தப்பட்டன.
- இரு விமானப்படைகளும் தங்களது சிறப்பான போர் நடவடிக்கைகளை பகிர்ந்துகொள்ள உத்ரா சக்தி பயிற்சி உதவியது. பயிற்சியின் நிறைவு விழாவில், 7 சுகோய்-30எம் கேஐ & சுகோய் -30 எம்கேஎம் போர் விமானங்கள் வானில் பறந்து சாகத்தை நிகழ்த்தின.
- தொடர்ந்து இந்திய விமானப்படை குழுவினர் ஆஸ்திரேலியாவின் டார்வின் பகுதியில் நடக்கவுள்ள பிட்ச் பிளாக் -22 விமான பயிற்சியில் கலந்து கொள்ள உள்ளனர்.