நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு காவல் பதக்கம் அறிவிப்பு
- நாட்டின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 15 காவலர்களுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பதக்கம் வழங்கி கௌரவிக்க உள்ளார். இவர்களுக்கு ஆகஸ்ட் 15ஆம் தேதி திங்கள்கிழமை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காவல் பதக்கங்களை வழங்குகிறார்.
- அந்த வகையில் தன்னலமற்ற சேவை மற்றும் சிறந்த அர்ப்பணிப்பு பதக்கத்தை 5 பேர் பெறுகின்றனர். அவர்கள்,
- பிரேம் ஆனந்த் சின்ஹா (சென்னை தெற்கு கூடுதல் ஆணையர்
- கே. அம்பேத்கர் (கடலூர் சிஐடி சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர்)
- எஸ். சிவராமன் (சென்னை சிட்டி போக்குவரத்து சிறப்பு காவல் உதவி ஆய்வாளர்)
- வி. பழனியாண்டி (சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மதுரை)
- எம். குமார் (போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் தாம்பரம்)
- இதேபோல் குற்ற விசாரணையில் சிறப்பாக ஈடுபட்ட 10 பேருக்கு முதலமைச்சர் காவல் பதக்கங்கள் வழங்குகிறார். அவர்கள்,
- ஜி. ஸ்டாலின் (மதுரை துணை ஆணையர்)
- எஸ். கிருஷ்ணன் (சேலம் சிட்டி குற்ற பிரிவு சிஐடி)
- எம். பிருந்தா (விழுப்புரம் போலீஸ் மாவட்ட காவல் ஆய்வாளர்)
- ஏ. பிரபா (நாமக்கல் சிபிசிஐடி ஆய்வாளர்)
- வி. ஸ்ரீநிவாசன் (சென்னை தெற்கு மண்டல காவல் கண்காணிப்பாளர்)
- எம். சுமதி (திண்டுக்கல் மாவட்ட காவல் ஆய்வாளர்)
- சி. நாகலெட்சுமி (நாகப்பட்டினம் மாவட்ட காவல் ஆய்வாளர்)
- வி. துளசி தாஸ் (சென்னை மாநகர காவல் உதவி ஆய்வாளர்)
- எல். பார்த் சாரதி (சென்னை போலீஸ் சிபிசிஐடி காவல் உதவி ஆய்வாளர்)
- கே. இளையராஜா (சென்னை மாநகர காவல் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் உதவி ஆய்வாளர்)
- இந்த 15 காவல் அதிகாரிகளுக்கும் 8 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பரிசாக வழங்கப்படும்.
இஸ்ரேல் டேக்வாண்டோ போட்டியில் இந்தியாவின் அப்ரீன், சிவான்ஷ் வெண்கலப் பதக்கம் வென்றனர்
- இஸ்ரேலில், சர்வதேச டேக்வாண்டோ தொடர் நடந்தது. இதில் பெண்களுக்கான 62 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் அப்ரீன் ஹைதர் 22, பங்கேற்றார். காஷ்மீரை சேர்ந்த இவர், ஈகுவடாரின் மினா மெல்லிடம் தோல்வியடைந்து வெண்கலம் கைப்பற்றினார்.
- ஆண்களுக்கான 74 கிலோ பிரிவில் இந்தியா சார்பில் சிவான்ஷ் தியாகி 22, பங்கேற்றார். இரண்டு போட்டியில் வென்ற இவர், வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
- காமன்வெல்த் டேக்வாண்டோ சாம்பியன்ஷிப், ஜோர்டானில் நடந்த போட்டியில் தலா ஒரு வெண்கலம் கைப்பற்றிய இவர், அடுத்த ஆண்டு சீனாவில் நடக்கவுள்ள ஆசிய விளையாட்டுக்கு தகுதி பெற்றுள்ளார்.