உலகின் உயரமான ரயில்வே பாலம் ஜம்மு காஷ்மீரில் திறப்பு
- ஜம்முவின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி என்ற இடத்துக்கு இடையே செனாப் ஆற்றின் குறுக்கே 1,178 அடி உயரத்தில் ரயில்வே பாலம் கட்டுமான பணி கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
- இந்த பாலத்தின் நீளம் 4,314 அடி. கடந்த 2017-ம் ஆண்டு அடித்தளம் அமைக்கும் பணி முடிவடைந்து வளைவுப் பகுதி கட்டுமானம் தொடங்கியது. இரும்பு மற்றும் கான்கிரீட் பாலமாக இது அமைக்கப்பட்டுள்ளது.
- இதன் வளைவுப் பகுதி கட்டுமானம் கடந்த ஏப்ரல் மாதம் முடிவடைந்தது. கிட்டத்தட்ட ரயில்வே பாலத்தில் அனைத்து பணிகளும் முடிவடைந்ததால், செனாப் ரயில்வே பாலம் திறந்துவைக்கப்பட்டது.இதன் மூலம் முதல் முறையாககாஷ்மீரின் ஸ்ரீநகர் நாட்டின் இதர பகுதிகளுடன் இணைக்கப்படவுள்ளது.
- அனைத்து பணிகளும் முடிந்தபின், இந்தப் பாலம், பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நாட்டில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட 35 மீட்டர் உயரமானதாக இருக்கும். இந்த பாலத்தில் வரும் டிசம்பர் மாதம் ரயில் போக்குவரத்து நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையில் வீரமங்கை வேலுநாச்சியார் நாட்டிய நாடகம் - முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
- சென்னை கலைவானர் அரங்கில் கலை பண்பாட்டுத்துறை, இயல் இசை நாடக மன்றம் மற்றும் செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில், வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக தொடக்க விழா நடந்தது.
- இந்த விழாவில் கலந்துகொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வீரமங்கை வேலுநாச்சியார் இசையார்ந்த நாட்டிய நாடக விழாவை தொடங்கி வைத்தார்.
தமிழ்நாட்டில் முதன் முறையாக சர்வதேச பட்டம் விடும் திருவிழா
- தமிழகத்தில் முதன்முறையாக மாமல்லபுரத்தில் சர்வதேச பட்டம் விடும் திருவிழா தொடங்கியுள்ளது. இதனை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மதிவேந்தன் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
- இதில் அமெரிக்கா, தாய்லாந்து ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களும், குஜராத், ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்து வந்துள்ள கலைஞர்களும் பங்கேற்றுள்ளனர்.