TAMIL
- தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழ்நாடு அரசு சார்பில் 'அப்துல் கலாம்' விருது முனைவர் இஞ்ஞாசிமுத்துவுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் ஆய்வு நிறுவனத்தின் இயக்குனராக இஞ்ஞாசிமுத்து உள்ளார்.
- நாகை கீழ்வேளுரை சேர்ந்த இளவரசி என்பவருக்கு துணிவு, சாகசங்களுக்கான 'கல்பனா சாவ்லா' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றிய அமுதா சாந்திக்கு 'சிறந்த சமூகப் பணியாளர்' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- அறிவுசார் குறை உடையவர்களுக்கான சிறப்புப் பள்ளியை செயல்படுத்தும் ரெனோசான்ஸ் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக வேலைவாய்ப்பு அளித்த டாஃபே ரிஹாப் சென்டர் நிறுவனத்திற்கும் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிக்கு மாற்றுத்திறனாளிகள் நலனுக்கான விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- 'உங்கள் தொகுதியில் முதல்வர்' விருது லட்சுமி பிரியாவுக்கு வழங்கப்படுகிறது.
- மகளிர் நலத்திற்காக சிறந்த சேவைக்கு தொண்டாற்றிய வானவில் அறக்கட்டளைக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- தமிழகத்தின் சிறந்த மாநகராட்சியாக முதலமைச்சரின் விருதுக்கு சேலம் மாநகராட்சி தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- சிறந்த நகராட்சிகளில் ஸ்ரீவில்லிபுத்தூர் முதலிடமும், குடியாத்தம் இரண்டாவது இடமும், தென்காசி மூன்றாவது இடமும் பிடித்துள்ளது.
- கருங்குழி பேரூராட்சிக்கு 10 லட்சமும், கன்னியாகுமரிக்கு ஐந்து லட்சமும் பரிசு வழங்கப்பட இருக்கிறது.
- முதலமைச்சரின் 'மாநில இளைஞர் விருது' விஜயகுமார், முஹம்மது ஆசிக், வேலுரை சேர்ந்த ஸ்ரீகாந்த் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- அதேபோல் நாகையைச் சேர்ந்த சிவரஞ்சனிக்கும் முதலமைச்சரின் மாநில இளைஞர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
- Various awards have been announced by the Government of Tamil Nadu.
- Tamil Nadu Government has announced 'Abdul Kalam' Award to Dr. Injazimuthu. Injnazimuthu is the director of research institute at Pure Saveriar College, Palayangottai.
- The 'Kalpana Chawla' award for bravery and adventure has been announced to a princess from Nagai Kilvellur.
- Amuda Shanti, who has worked for the welfare of the differently abled, has been awarded the 'Best Social Worker' award.
- Renozance Foundation, which runs a special school for the mentally challenged, has been awarded the award.
- An award has also been announced for Tafe Rehab Center, which has provided the most employment to disabled people.
- Dindigul District Central Cooperative Bank has announced an award for the welfare of differently abled persons.
- 'Chief Minister in Your Constituency' Award goes to Lakshmi Priya.
- Vanavil Foundation has been awarded for its outstanding service towards women's welfare.
- Salem Corporation has been selected for the Chief Minister's Award as the Best Municipal Corporation in Tamil Nadu.
- Among the best municipalities, Srivilliputhur has been ranked first, Kudiattam ranked second and Tenkasi ranked third.
- 10 lakhs for Karunkuzhi municipality and five lakhs for Kanyakumari.
- Chief Minister's 'State Youth Award' has been announced for Vijayakumar, Muhammad Asik and Srikanth from Vellore.
- Similarly, Chief Minister's State Youth Award has been announced for Sivaranjan from Naga.