Type Here to Get Search Results !

TNPSC 9th & 10th AUGUST 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF


ஹரியாணா மாநிலம் ரூ.900 கோடி மதிப்பில் எத்தனால் உற்பத்தி ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்
  • ஹரியாணா மாநிலம் பானிப்பட் நகரில் ரூ.900 கோடி மதிப்பில் 2-வது தலைமுறைக்கான எத்தனால் உற்பத்தி ஆலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ஆலையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • டெல்லியிலிருந்து காணொலி வசதி மூலம் இந்த ஆலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். 
  • இந்நிகழ்ச்சியில் ஹரியாணா ஆளுநர் பண்டாரு தத்தாத்ரேயா, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
மாநிலங்களுக்கு அளிக்கப்படும் வரி பகிர்வு நிதி 4758 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கியுள்ளது
  • மாநில அரசுகளின் மூலதனம் மற்றும் மேம்பாட்டுச் செலவினங்களுக்கான திறனை மேம்படுத்த மத்திய அரசு வரி பகிர்வு நிதியை வழங்கி வருகிறது.
  • மாதந்தோறும் வழங்கப் படும் இந்த தொகையை இம்முறை இரு தவணைகளாக சேர்த்து வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இரு தவணைகள் சேர்த்து ஒரு லட்சத்து 16 ஆயிரத்து 665 கோடியே 75 லட்ச ரூபாய் வழங்கப்படுகிறது.
  • மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள இந்த வரிப்பகிர்வுக்கான பட்டியலில் மொத்தம் 28 மாநிலங்கள் இடம் பெற்றுள்ளன. இதில் தமிழகத்துக்கு 4758 கோடி ரூபாய் விடுவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம்
  • ஒன்றிய சட்டத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக யு.யு.லலித் நியமனம் செய்யப்படுகிறார். வரும் 27ம் தேதி முதல் அவர் தனது பணியை தொடங்குவார்,' என கூறப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம், உச்ச நீதிமன்றத்தின் 49வது தலைமை நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுகிறார். வரும் 27ம் தேதி பதவியேற்கும் யு.யு.லலித், 74 நாட்கள் மட்டுமே இப்பதவியில் நீடிப்பார். 
  • நவம்பர் 8ம் தேதி அவர் ஓய்வு பெறுகிறார். மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் 1957ம் ஆண்டு பிறந்த யு.யு.லலித், தனது வழக்கறிஞர் பணியை 1983ம் ஆண்டு தொடங்கினார்.
7 கட்சிகளின் ஆதரவுடன் 8வது முறையாக பீகார் முதல்வராக நிதிஷ் பதவியேற்பு: துணை முதல்வரானார் தேஜஸ்வி
  • பீகாரில் பாஜ உடனான மோதலைத் தொடர்ந்து, அம்மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார் கூட்டணியை முறித்துக் கொள்வதாக அறிவித்தார். 
  • அதைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அவர், அடுத்த சில மணி நேரத்தில் லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), காங்கிரஸ், இடதுசாரிகள் உள்ளிட்ட கட்சிகளை கொண்ட மெகா கூட்டணியுடன் இணைந்து, 164 எம்எல்ஏக்கள் ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்க ஆளுநரிடம் உரிமை கோரினார்.
  • ஆளுநர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து, ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா ஆடம்பரமின்றி நடந்தது. இதில், பீகார் முதல்வராக 8வது முறையாக நிதிஷ் பொறுப்பேற்றார். 
  • அவருக்கு ஆளுநர் பாகு சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வராக பதவியேற்றார். 
சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சட்டவிதிகளின் 11-வது கூடுதல் நடைமுறைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • அபித்ஜானில், 9-27 ஆகஸ்ட் 2021-ல் நடைபெற்ற சர்வதேச அஞ்சல் சங்கத்தின் 27-வது மாநாட்டில் கையெழுத்தான சட்ட விதிகளில் இடம்பெற்றுள்ள 11-வது கூடுதல் நடைமுறையில் தெரிவிக்கப்பட்டுள்ளபடி, சர்வதேச அஞ்சல் சங்கத்தின் விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்கு, பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்த ஒப்புதல் மூலம் இந்திய அஞ்சல் துறை, குடியரசுத் தலைவரால் கையெழுத்திடப்பட்ட “ஒப்புதல் ஆணை” பெறுவதுடன், அதனை சர்வதேச அஞ்சல் சங்கத்தின் சர்வதேச அமைப்பின் தலைமை இயக்குனரிடம் ஒப்படைக்கும்.
  • இது சர்வதேச அஞ்சல் சங்க விதிகளில் இடம்பெற்றுள்ள விதிமுறை 25 மற்றும் 30-ல் எழும் கடமைகளை நிறைவேற்றும்.
கூட்டுறவு சங்கங்களை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) இணையதளத்தில் இணைக்கும் நிகழ்ச்சியை மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தொடங்கி வைத்தார்
  • மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுதுறை அமைச்சர் திரு அமித் ஷா, இன்று புது தில்லியில் கூட்டுறவு சங்கங்களை அரசு இ-மார்க்கெட்பிளேஸ் (ஜிஇஎம்) இணையதளத்தில் இணைக்கும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். 
  • மத்திய அரசின் கூட்டுறவு அமைச்சகம், இந்திய தேசிய கூட்டுறவு ஒன்றியம் மற்றும் ஜிஇஎம் -ஆல் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில், மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ்கோயல், மத்திய கூட்டுறவு மற்றும் வடகிழக்கு மண்டல மேம்பாட்டுத் துறை இணை அமைச்சர் திரு பி.எல்.வர்மா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel