Type Here to Get Search Results !

TNPSC 7th JULY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

பிரிட்டன் பிரதமா் போரிஸ் ஜான்ஸன் ராஜிநாமா

 • பிரிட்டனில் 'பாா்ட்டி கேட்' ஊழல் எனப்படும், கரோனா கால சட்ட விதிகளை மீறி பிரதமா் அலுவலகத்தில் விருந்து நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டதாக எழுந்த புகாரையடுத்து போரிஸ் ஜான்ஸனுக்கு அரசியல் நெருக்கடி தொடங்கியது. 
 • விதிகளை மீறி விருந்து நிகழ்ச்சிகளில் பங்கேற்ற்காக அவா் பகிரங்கமாக மன்னிப்பு கோரியபோதும், அவா் பதவியில் நீடிக்க கன்சா்வேடிவ் கட்சிக்குள்ளேயே எதிா்ப்பு எழுந்தது.
 • இதையடுத்து, கடந்த மாதம் ஆளும் கட்சி சாா்பில் அவா் மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீா்மானம் தோல்வியடைந்ததால் அவரது பிரதமா் பதவி தப்பியது. மொத்தம் 359 எம்.பி.க்களில் 211 போ ஜான்ஸனுக்கு ஆதரவாக வாக்களித்தனா்.
 • இந்நிலையில், பாலியல் புகாருக்குள்ளான எம்.பி. கிறிஸ் பிஞ்சரை, அதுகுறித்து தெரிந்திருந்தும் கட்சியின் துணை தலைமைக் கொறடாவாக ஜான்ஸன் நியமித்த பிரச்னை அடுத்த விவகாரமாக வெடித்தது.
 • கிறிஸ் பிஞ்சா் தன் மீதான பாலியல் புகாரை ஒப்புக்கொண்டு கடந்த வாரம் பதவி விலகினாா். அவரை துணை தலைமைக் கொறடாவாக நியமித்தது தவறு என ஜான்ஸன் தெரிவித்தாா். கிறிஸ் பிஞ்சா் நியமன விஷயத்தில் பிரதமா் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது கட்சிக்குள் அதிருப்தியை ஏற்படுத்தியது.
 • இதைத் தொடா்ந்து, நிதியமைச்சா் ரிஷி சுனக், சுகாதாரத் துறை அமைச்சா் சஜித் ஜாவித், கல்வித் துறை அமைச்சா் வில் குவின்ஸ் ஆகியோா் அடுத்தடுத்து ராஜிநாமா செய்தனா். 
 • ரிஷி சுனக்குக்கு பதிலாக நிதியமைச்சராக இராக் அகதிகள் விவகாரத் துறை அமைச்சராக இருந்து வரும் நாதிம் ஸஹாவியை ஜான்ஸன் நியமித்தாா்.
 • இருப்பினும், 27 கேபினட் அமைச்சா்கள், 22 இணையமைச்சா்கள், நாடாளுமன்ற தனிச் செயலா்கள் உள்ளிட்ட அரசு உயா் அதிகாரிகள் என 50-க்கும் மேற்பட்டோா் ராஜிநாமா செய்யப்போவதாகத் தெரிவித்ததால் போரிஸ் ஜான்ஸனுக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது.
 • கட்சியின் நம்பிக்கையை இழந்ததையடுத்து, போரிஸ் ஜான்ஸன் தனது ராஜிநாமா அறிவிப்பை வெளியிட்டாா். 

வெளிநாட்டு ராணுவ கொள்முதல் 3 தனியார் வங்கிகளுக்கு ஒன்றிய அரசு ஒப்புதல்

 • இந்திய ராணுவத்துக்கு வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் ஆயுதங்கள், ராணுவ தளவாடங்களுக்கு தேவையான நிதி, வங்கி உத்தரவாதம் போன்றவை தற்போது பொதுத்துறை வங்கிகள் மூலமாக மட்டுமே பரிமாற்றம் செய்யப்பட்டு வருகிறது.
 • இந்நிலையில், இதுபோன்ற கொள்முதலுக்கான கடன் உத்தரவாத கடிதம், நேரடி வங்கி பரிமாற்றங்களை செய்வதற்கு ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் ஆகிய மூன்று தனியார் துறை வங்கிகளுக்கும் பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. 
 • இந்த வங்கிகள் மூலமாக, முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் கோடி வரையிலான வணிகம் செய்யப்பட உள்ளது. இவற்றின் செயல்பாடுகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, தேவைப்பட்டால் இந்த தொகையின் அளவு அதிகரிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உலகளாவிய வாழ்வாதாரக் குறியீடு 2022ல் பெங்களூரு 146வது இடம்

 • ஐரோப்பியப் புலனாய்வுப் பிரிவு(EUI) சமீபத்தில் வாழ்வாதாரக் குறியீடு பட்டியல் 2022ஐ வெளியிட்டது. இதில் 173 நகரங்கள் அவற்றின் வாழ்வாதாரம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது.
 • நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்தையும் அடிப்படையாகக்கொண்டு இந்த வாழ்வாதார குறியீடு 2022 உருவாக்கப்பட்டுள்ளது.
 • இந்த பட்டியலில் 100க்கு 54.4 மதிப்பெண்களுடன் பெங்களூரு 146வது இடத்தைப் பிடித்துள்ளது.இதில் டெல்லி, மும்பை,சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நான்கு இந்திய நகரங்களும் மோசமான மதிப்புகளை பெற்று 140,141,142 மற்றும் 143 இடங்களை பிடித்துள்ளன.
தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் தொடங்கி வைத்தார்
 • தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதற்கான அகில இந்திய கல்வி மாநாட்டை பிரதமர் திரு நரேந்திர மோதி வாரணாசில் இன்று தொடங்கி வைத்தார். 
 • உத்தரபிரதேச ஆளுநர் திருமதி ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், மத்திய அமைச்சர்கள் திரு தர்மேந்திரபிரதான், திருமதி அன்னபூர்ணாதேவி, டாக்டர் சுபாஷ் சர்கார், டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங், இணையமைச்சர்கள், கல்வியாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட இதர தரப்பினரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
 • ஜூலை 7 முதல் 9ம் தேதி வரை கல்வி மாநாட்டிற்கு மத்திய கல்வி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது. 
 • இந்த மாநாடு, பிரபல கல்வியாளர்கள், கொள்கைவகுப்போர் மற்றும் முன்னணி கல்வியாளர்கள், தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டு தேசிய கல்விக்கொள்கை 2020-ஐ சிறந்த முறையில் அமுல்படுத்துவதற்கான செயல்திட்டத்தை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது. 
 • நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் (மத்திய, மாநில, நிகர்நிலை மற்றும் தனியார்)-ஐ சேர்ந்த 300க்கும் மேற்பட்ட கல்வியாளர்கள் & நிர்வாக பிரிவுத் தலைவர்கள் மற்றும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களின் (ஐஐடி, ஐஐஎம், என்ஐடி, ஐஐஎஸ்இஆர்) திறனை மேம்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மாநாட்டிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 
 • சம்பந்தப்பட்ட பல்வேறு தரப்பினரும், தத்தமது கல்வி நிறுவனங்களின் தேசிய கல்விக்கொள்கையை அமுல்படுத்துவதில் காணப்படும் முன்னேற்றத்தை எடுத்துரைப்பதோடு, இதனை அமுல்படுத்துவதற்கான சிறந்த உத்திகள், மிகச்சிறந்த நடைமுறைகள் மற்றும் வெற்றிச்சரித்திரத்தையும், எடுத்துரைக்க உள்ளனர்.
 • மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கல்வி மாநாட்டில், தேசிய கல்விக்கொள்கை 2020ன் கீழ் அடையாளம் காணப்பட்ட 9 அம்சங்கள் குறித்து குழு விவாதங்கள் நடத்தப்பட்டது. 
 • இந்த அம்சங்கள் பல்வேறு துறைகள் மற்றும் முழுமையான கல்வி; திறன் வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு; ஆராய்ச்சி, புதுமை கண்டுபிடிப்பு மற்றும் தொழில்முனைவு; தரமான கல்விக்கு ஆசிரியர்களின் திறனை மேம்படுத்துதல்; தரம், தரவரிசை மற்றும் அங்கீகாரம்; டிஜிட்டல் அதிகாரமளித்தல் மற்றும் ஆன்லைன் கல்வி; சமமான மற்றும் உள்ளார்ந்த கல்வி; இந்திய அறிவாற்றல்முறை; மற்றும் உயர்க்கல்வியை சர்வதேச மயமாக்குதல் போன்றவற்றை உள்ளடக்கியதாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel