சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ப்பு
- சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் 42-வது பட்டமளிப்பு விழா, பல்கலை வளாகத்தில் உள்ள விவேகானந்தர் கலையரங்கில் நடந்தது.
- இதில், சிறப்பு விருந்தினராக பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று, பல்வேறு பிரிவுகளில் 69 மாணவர்களுக்கு பட்டங்கள், பதக்கங்களை வழங்கினார்.
- பட்டமளிப்பு விழா தொடங்கியதும், உயர்கல்வி அமைச்சரும் பல்கலைக்கழக இணைவேந்தருமான க.பொன்முடி அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.
- துணைவேந்தர் ரா.வேல்ராஜ் பல்கலைக்கழக சாதனைகளை விளக்கினார். அதைத் தொடர்ந்து, பல்கலைக்கழக வேந்தரும் ஆளுநருமான ஆர்.என்.ரவி. பட்டமளிப்பு விழாவை தொடங்கிவைத்தார்.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார். அதன்பின், பல்வேறு பிரிவுகளில் சிறந்த மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களையும், பதக்கங்களையும் பிரதமர் மோடி வழங்கினார்.
சுத்தம் மற்றும் ஆரோக்கியமான சூழலைப் பெறுவது மக்களின் அடிப்படை உரிமை என அறிவிக்கும் தீா்மானத்தை ஐ.நா. நிறைவேற்றியுள்ளது
- சுத்தமான, ஆரோக்கியமான, நிலைத்து நீடிக்கும் சூழலைப் பெறுவது அனைத்து மக்களின் அடிப்படை உரிமை என்பதை பறைசாற்றும் வரைவுத் தீா்மானம் 193 உறுப்பினா்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபையில் வியாழக்கிழமை வாக்கெடுப்புக்குக் கொண்டுவரப்பட்டது.
- சா்வதேச சுற்றுச்சூழல் சட்டத்தின் கீழ், இதுதொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள பலதரப்பு ஒப்பந்தங்களை முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும் என்று அந்த வரைவுத் தீா்மானத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.
- அந்தத் தீா்மானத்துக்கு ஆதரவாக இந்தியா உள்பட 161 நாடுகள் வாக்களித்தன. ரஷியா, சீனா, பெலாரஸ், கம்போடியா, எத்தியோப்பியா, ஈரான், கிரிகிஸ்தான், சிரியா ஆகிய நாடுகள் வாக்களிப்பைப் புறக்கணித்தன.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், 'தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கணக்குப்படி 264 புலிகளுடன் இந்தியாவில் உள்ள புலிகளின் எண்ணிக்கையில் சுமார் 10 விழுக்காடு தமிழ்நாட்டில்தான் உள்ளது.
- புலிகள் பாதுகாப்பில் தமிழகத்தின் முன்னோடி முயற்சிகளுக்கு பொருத்தமாக 2022 அக்டோபர் மாதம் சென்னையில் ஒன்றிய அரசுடன் இணைந்து தமிழ்நாடு அரசால், உலகளாவிய புலிகள் உச்சி மாநாடு நடத்தப்படும் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்' என தெரிவித்துள்ளார்.