நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு பதவி ஏற்றார் - தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்
- நாட்டின் 14வது ஜனாதிபதியாக இருந்த ராம்நாத் கோவிந்த் பதவிக் காலம் நேற்று முன்தினத்துடன் முடிவடைந்தது. புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது.
- பாஜ கூட்டணி வேட்பாளராக பழங்குடி பிரிவை சேர்ந்த திரவுபதி முர்முவும், எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக யஷ்வந்த சின்காவும் போட்டியிட்டனர்.
- தேர்தலில் பதிவான வாக்குகள் கடந்த 21ம் தேதி எண்ணப்பட்டன. இதில், திரவுபதி முர்மு 6,76,803 வாக்குகளும் (64%), யஷ்வந்த் சின்கா 3,80,177 வாக்குகளும் பெற்றனர். இதன் மூலம், 2,96,626 வாக்குகள் வித்தியாசத்தில் திரவுபதி முர்மு வெற்றி பெற்றார்.
- இந்நிலையில், முர்முவின் பதவியேற்பு விழா நாடாளுமன்ற மைய மண்டபத்தில் காலை நடந்தது. பதவியேற்புக்கு முன்பாக அவர் ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்தினார்.
- சரியாக காலை 10.15 மணிக்கு, நாட்டின் 15வது ஜனாதிபதியாக திரவுபதி முர்மு கடவுளின் பெயரால் பதவியேற்றார். அவருக்கு உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- தொடர்ந்து, பதவி ஏற்று கொண்டதற்கான சாசனத்தில் முர்மு கையெழுத்திட்டார். அப்போது, 21 குண்டுகள் முழங்க அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
- நாட்டின் முதல் பழங்குடியின ஜனாதிபதி, 2வது பெண் ஜனாதிபதி, மிக குறைந்த வயது ஜனாதிபதி என்ற பெருமைகளை திரவுபதி பெற்றுள்ளார்.
- இதுவரை ஜனாதிபதியாக பதவியேற்ற அனைவருமே நாட்டின் சுதந்திரத்துக்கு முன் பிறந்தவர்கள்.
- திரவுபதி முர்மு (64) மட்டும்தான் சுதந்திரத்துக்குப் பின் பிறந்த முதல் ஜனாதிபதி.
- ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரி பாகங்களுக்காக, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டம் செப்டம்பர் 30 2021 அன்று அறிவிக்கப்பட்டது.
- அதன்படி, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை பெறும் 23 பயனாளிகளிள் தற்காலிக பட்டியல் 6 ஜூலை 2022 அன்று வெளியிடப்பட்டது.
- இந்த பயனாளிகள் பட்டியலில் 12 ட்ரோன் உற்பத்தியாளர்கள் மற்றும் 11 ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
- ட்ரோன் மற்றும் ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள தகுதிகள்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் மற்றும் புதிய தொழில் முனைவோருக்கான தகுதி - ட்ரோன் உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.2 கோடி. ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்கள் ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.50 லட்சம்
- சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் அல்லாதவர்களுக்கான தகுதி - ட்ரோன் உற்பத்தியாளர்களுக்கு ஆண்டுக்கு விற்பனை வருவாய் ரூ.4 கோடி ட்ரோன் உதிரிபாக உற்பத்தியாளர்களுக்கு ஆண்டு விற்பனை வருவாய் ரூ.1 கோடி