நீடித்த வளர்ச்சி இலக்கில் இந்தியா சாதனை - ஐ.நா பாராட்டு
- கடந்த, 2015ல் குக்கிராமம் வரை மக்களின் வாழ்க்கைச் சூழலை மேம்படுத்தும் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கை, 2030ல் அடைவதற்கான திட்டத்தை ஐ.நா., அறிவித்தது.
- இதற்கு, இந்தியா உட்பட, 195 நாடுகள் ஒப்புதல் அளித்தன. இதன்படி, வறுமை மற்றும் பட்டினி ஒழிப்பு, தரமான கல்வி, நல்ல ஆரோக்கியம், பாலின சமத்துவம், துாய்மையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதி, நியாயமான விலையில் பசுமை எரிசக்தி வழங்குதல், தொழில், கட்டமைப்பு வசதிகளை அதிகரித்தல் உள்ளிட்ட, 17 அம்சங்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
- இந்நிலையில் 'நீடித்த வளர்ச்சி இலக்கில் முன்மாதிரி இந்தியா' என்ற கருத்தரங்கம் ஐ.நா.,வில் நடந்தது.
- இதில், ஐ.நா., துணைத் தலைவர் அமினா முகமது பேசியதாவது:ஐ.நா.,வின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்கில், இந்தியா குறிப்பிடத்தக்க வகையில் மிகச் சிறப்பாக செயல்பட்டு சாதனை படைத்துள்ளது. இதில் இந்தியா, இதர நாடுகளுக்கு முன்னுதாரணமாக விளங்குகிறது.
- இந்தியாவை பின்பற்றி இதர நாடுகளும் செயல் திட்டங்களை வகுத்து, 2030ல் நிர்ணயித்த இலக்கை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. இத்திட்டத்தை கடைக்கோடி மனிதர்களுக்கும் இந்தியா எடுத்துச் சென்றுள்ளது.
- கடந்த ஆறு ஆண்டுகளில், இந்தியாவில், 33 கோடி பேருக்கும் அதிகமாக கழிப்பறை வசதிகள் செய்து தரப்பட்டிருப்பது பிரமிக்க வைக்கிறது.
- மத்திய, மாநில அரசுகள் ஒன்றிணைந்து செயல்பட்டு, மாவட்ட அளவில் மட்டுமின்றி குக்கிராமத்தின் ஒவ்வொரு இல்லத்திலும் திட்டத்தின் பயனை கொண்டு சேர்த்துள்ளன. இதற்கு, மத்திய அரசையும், 'நிடி ஆயோக்' அமைப்பையும் பாராட்டுகிறேன்.இவ்வாறு அவர் பேசினார்.
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்
- கொரியாவின் சாங்வான் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் அர்ஜூன் பபுதா, சாஹு துஷார் மானே, பார்த் மஹிஜா ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி 17-15 கணக்கில் கொரியாவை தோற்கடித்து தங்கப் பதக்கம் வென்றது. இந்தத் தொடரில் இந்தியா வெல்லும் 3-வது தங்கப் பதக்கம் இதுவாகும்.
இத்தாலி பிரதமர் மரியோ டிராகி ராஜினாமா
- இத்தாலியில் அரசியலில் கூட்டணி கட்சிகளின் பிரதமர் மரியோ டிராகி தனது பதவியை ராஜினாமா செய்தார்.
- இத்தாலியில் கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் 2021 அதிபர் செர்ஜியோ மெட்டரெல்லாவால், மரியோ டிராகி பிரதமராக நியமிக்கப்பட்டார்
- தற்போது இத்தாலியில் பொருளாதார நிலை மிகவும் மோசடைந்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து கூட்டணி கட்சிகளால் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது.
- பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதற்கான சூழல் ஏற்பட்டதால், நேற்று திடீரென பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக மரியோ டிராகி அறிவித்தார். நாளை ராஜினாமா கடிதத்தை அதிபர் செர்ஜியோ மெட்டரல்லாவிடம் அளிக்கவுள்ளதாக தெரிவித்தார்.
- 2022, ஜூன் மாதத்திற்கான அகில இந்திய ஒட்டுமொத்த விலைக் குறியீட்டு எண் அடிப்படையிலான வருடாந்திர பணவீக்க விகிதம் 15.18%ஆக (தற்காலிகம்) பதிவாகியுள்ளது. இது, இதற்கு முந்தைய மே மாதத்தின் 15.88%ஐ விட சற்று குறைவு.
- தாது எண்ணெய், உணவுப் பொருட்கள், பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவின் கச்சாப் பொருட்கள், ஆதார உலோகங்கள், ரசாயனம் மற்றும் ரசாயனப் பொருட்கள் ஆகியவற்றின் விலை, கடந்த ஆண்டு இதே மாதத்தைவிட உயர்ந்திருப்பதால், 2022, ஜூன் மாதத்தின் பணவீக்க விகிதம் அதிகரித்துள்ளது.