Type Here to Get Search Results !

பிளாக்செயின் டெக்னாலஜி / BLACKCHAIN TECHNOLOGY

 

TAMIL

  • கடந்த சில ஆண்டுகளாக வளர்ந்து வரும் சிறந்த தொழில்நுட்பமாக இருந்து வருகிறது பிளாக்செயின் டெக்னாலஜி (Blockchain Technology).
  • இது பரவலாக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் நிலைத்தன்மை போன்ற சுவாரஸ்யமான அம்சங்களுக்காக உலகளவில் பின்பற்றப்பட்டு வரும் முக்கிய தொழில்நுட்பங்களில் ஒன்றாகும்.
  • அடுத்த தலைமுறைக்கான, நம்பிக்கைக்குரிய, புரட்சிகரமான தொழில்நுட்பமாக உள்ள பிளாக்செயின் டெக்னாலஜி வேகமாக வளர்ந்துள்ளது. 
  • இது நம்முடைய பிசினஸ் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ப்ராசஸை முற்றிலும் மாற்றியுள்ளது. இந்த டெக்னலாஜியை பற்றி உங்களுடைய புரிதலுக்கு சொல்வதென்றால், இது Google Docs-ஐ போலவே உள்ளது. 
  • ஆனால் அதை விட இது சற்று சிக்கலானது மற்றும் மேம்பட்டது என கூறலாம். பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படுகிறது, இது ஏன் மிகவும் பிரபலமாக உள்ளது போன்ற கேள்விகளுக்கான பதில்களை இங்கே பார்க்கலாம்.
பிளாக்செயின் டெக்னாலஜி என்றால் என்ன?
  • பிளாக்செயின் டெக்னாலஜி என்பது ஒரு டிஜிட்டல் லெட்ஜர் அல்லது ஒரு நெட்வொர்க்கில் இருக்கும் பல கணினிகளில் உள்ள பரிவர்த்தனைகளின் பட்டியலைச் சேமிக்கும் ஒரு ட்ராக்கிங் ஷீட் (tracking sheet) ஆகும். 
  • ஒரு வகை டிஜிட்டல் லெட்ஜர் டெக்னலாஜியான இது சிஸ்டமை மாற்றுவது, ஹேக் செய்வது, கரப்ட் செய்வது அல்லது ஏமாற்றுவது போன்ற தகவல்களை, குறிப்பாக பரிவர்த்தனைகளை (transactions) ரெக்கார்ட் செய்கிறது. இது ஒரு பரவலாக்கப்பட்ட விநியோக நெட்வொர்க் (decentralized distribution network) ஆகும்.
  • ஏனென்றால் ரெக்கார்ட் செய்யப்படும் பரிவர்த்தனைகள் பிளாக்செயினில் உள்ள கம்ப்யூட்டர் சிஸ்டம்களின் முழு நெட்வொர்க்குடன் விநியோகிக்கப்படுகின்றன மற்றும் நகலெடுக்கப்படுகின்றன. 
  • பிளாக்செயினில் ஒரு புதிய பரிவர்த்தனை செய்யப்படும் போதெல்லாம், அதன் ரெக்கார்ட்கள் ஒவ்வொரு பங்கேற்பாளரின் லெட்ஜரிலும் சேர்க்கப்படும். 
  • அனைத்து மாற்றங்களும் ரியல்-டைமில் ரெக்கார்ட் செய்யப்படுவதால், எந்த ஒரு நபரும் என்ட்ரிகளை மாற்றவோ அல்லது திருத்தவோ முடியாது, இது முற்றிலும் வெளிப்படையானது.
  • அதாவது பிளாக்செயினில் உள்ள லெட்ஜர் ஒரு பரவலாக்கப்பட்ட லெட்ஜர் என்பதால் இதில் பதிவாகும் டேட்டாக்களின் மீது யாருக்கும் கட்டுப்பாடு இல்லை. அப்படியே யாராவது அதை மாற்ற அல்லது சிதைக்க முயற்சித்தால், அவர்கள் விநியோகிக்கப்பட்ட அனைத்து வெர்ஷன்களிலும் செயினில் உள்ள ஒவ்வொரு பிளாக்கையும் மாற்ற வேண்டும், 
  • இது நடைமுறையில் மிகவும் சிக்கலானது. மேலும் லெட்ஜரில் பதிவாகும் பரிவர்த்தனைகள் உரிமையாளரின் டிஜிட்டல் கையொப்பத்தால் அங்கீகரிக்கப்படுகின்றன. இதனால் எந்த மாற்றத்தையும் அல்லது மோசடி முயற்சியையும் விரைவாக கண்டறிய முடியும்.
ஏன் பிரபலமானது?
  • பிளாக்செயின் டெக்னலாஜி மிகவும் பிரபலமானதற்கு முக்கிய காரணம் அதன் வெளிப்படைத்தன்மை மற்றும் மாற்ற முடியாத தன்மையும் ஆகும். இது ஒரு பரவலாக்கப்பட்ட பியர்-டு-பியர் நெட்வொர்க் அமைப்பாகும். 
  • மேலும் இது பிற பரிவர்த்தனைகளை போல அதை நிர்வகிக்க அல்லது கட்டுப்படுத்த வேண்டிய பொறுப்பான நபரை கொண்டிருக்க தேவை இல்லை.
  • மேலும் இந்த டெக்னலாஜி யூஸர்கள் மற்றும் அதை மேம்படுத்துபவர்கள் பற்றிய பரஸ்பர புரிதலின் அடிப்படையில் செயல்படுகிறது. இதன் பதிவுகளை எளிதில் சிதைக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது என்பதால் பரிவர்த்தனைகள் விரைவாகவும் பாதுகாப்பாகவும் வைக்க உதவி நம்பகதன்மை கொண்டதாக உள்ளது. 
  • இதனால்தான் பிட்காயின்ஸ் போன்ற பிளாக்செயின் தயாரிப்புகள் நிதி, விநியோகச் சங்கிலி, சுகாதாரம், உற்பத்தி போன்ற துறைகளில் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன.
பிளாக்செயின் டெக்னலாஜியின் நன்மைகள்

1. பாதுகாப்பானது
  • இது டிஜிட்டல் கையொப்பங்களைப் பயன்படுத்தி மோசடி இல்லாத பரிவர்த்தனைகளை உருவாக்குவதால் மிகவும் பாதுகாப்பானது. மேலும், முன்னறிவிப்பின்றி எந்தவொரு தனிநபராலும் தரவுகளில் எந்த ஒரு மாற்றத்தையும் செய்ய முடியாது.
2. பரவலாக்கப்பட்ட சிஸ்டம்
  • டிரெடிஷ்னல் பரிவர்த்தனைகளுக்கு, பரிவர்த்தனைகளை நிர்வகிக்கும் சில ஒழுங்குமுறை அல்லது மையப்படுத்தப்பட்ட அமைப்பின் ஒப்புதல் தேவைப்பட்டாலும், இந்த தொழில்நுட்பத்துடன் கையாளுதல்கள் யூஸர்களின் பரஸ்பர ஒருமித்த சரிபார்ப்புடன் செய்யப்படுகின்றன. எனவே எந்த மூன்றாம் தரப்பும் தேவையில்லை.
3. வேகமான ப்ராசஸிங்
  • இந்த தொழில்நுட்பம் ப்ரோகிராம் செய்ய கூடியது மற்றும் தேவைக்கேற்ப பல செயல்களையும் நிகழ்வுகளையும் ஆட்டோமேட்டிக்காக செய்ய கூடியது.
கிரிப்டோகிராஃபி
  • கிரிப்டோகிராஃபி என்பது எந்த தேர்ட்-பார்ட்டியையும் ஈடுபடுத்தாமல் அழிக்க மற்றும் மாற்ற கடினமாக இருக்கும் வெவ்வேறு நுட்பங்களை பயன்படுத்தி தகவல்களை பாதுகாப்பதற்கான வழி. பிளாக்செயின் தொழில்நுட்பம் இதை அடிப்படையாக கொண்டது.
ஸ்மார்ட் கான்ட்ராக்ட்ஸ் 
  • Smart contracts என்பது பிளாக்செயினில் இயங்கும் செல்ஃப்-எக்சிகியூட்டிங் கான்ட்ராக்ட்ஸ் ஆகும். பிளாக்செயினில் இயங்கும் ப்ரோகிராம் அல்லது ஸ்கிரிப்ட் போன்றது. 
  • இது பரிவர்த்தனைகளை கண்காணிக்கிறது மற்றும் சேவைகளை பரிமாறிக்கொள்ள அனுமதிக்கிறது. எனவே இதை நன்கு கற்பது எப்போதும் ஒரு பிளஸ் பாயிண்ட். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை கற்று கொள்ள பல்வேறு சான்றிதழ் படிப்புகள் ஆன்லைனில் கிடைக்கின்றன. வேகமாக வளர்ந்து வரும் இந்த துறையில் சாதிக்க உங்களை மேம்படுத்தி கொள்ளுங்கள்.
ENGLISH
  • Blockchain technology has been a hot technology emerging in the last few years. It is one of the key technologies being followed globally for its interesting features like decentralization, transparency and sustainability.
  • Blockchain technology has grown rapidly as a promising, revolutionary technology for the next generation. It has completely changed the process of how our business works. To your understanding of this technology, it is similar to Google Docs.
  • But it's a bit more complicated and advanced than that. Here are answers to questions like what is blockchain technology, how does it work, and why is it so popular?
What is Blockchain Technology?
  • Blockchain technology is a digital ledger or a tracking sheet that stores a list of transactions across multiple computers in a network. A type of digital ledger technology that records information, particularly transactions, to alter, hack, corrupt, or defraud a system. It is a decentralized distribution network.
  • This is because recorded transactions are distributed and replicated across the entire network of computer systems on the blockchain. Whenever a new transaction is made on the blockchain, its records are added to each participant's ledger.
  • Since all changes are recorded in real-time, no person can change or edit entries, which is completely transparent. This means that the ledger on the blockchain is a decentralized ledger and no one has control over the data recorded in it. 
  • So if someone tried to change or corrupt it, they would have to change every block in the chain across all distributed versions. It is more complicated in practice. And transactions recorded in the ledger are authenticated by the owner's digital signature. This makes it possible to quickly detect any alteration or fraudulent attempt.
Why is it popular?
  • The main reason blockchain technology is so popular is its transparency and immutability. It is a decentralized peer-to-peer network system. And it does not need to have a responsible person to manage or control it like other transactions.
  • And this technology works on mutual understanding of users and developers. It helps keep transactions fast and secure as its records cannot be easily tampered with or destroyed, so it is reliable.
  • This is why blockchain products like Bitcoins are widely used in fields like finance, supply chain, healthcare, manufacturing etc.
Advantages of Blockchain Technology
    1. Safe
    • It is highly secure as it uses digital signatures to generate fraud-free transactions. Also, no individual can make any changes to the data without prior notice.
    2. Decentralized system
    • While traditional transactions require the approval of some regulatory or centralized body that governs transactions, with this technology transactions are done with mutual consensus verification of users. So no third party is required.
    3. Faster processing
    • This technology is programmable and can automate many actions and events on demand.
    Cryptography
    • Cryptography is a way of securing information using different techniques that are difficult to destroy and alter without involving any third-party. Blockchain technology is based on this.
    Smart Contracts
    • Smart contracts are self-executing contracts that run on the blockchain. Like a program or script that runs on the blockchain.
    • It tracks transactions and allows exchange of services. So learning this well is always a plus point. Various certification courses are available online to learn blockchain technology. Elevate yourself to succeed in this fast-growing industry.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel