Type Here to Get Search Results !

TNPSC 7th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

முப்படைகள் தலைமை தளபதி பணி நியமன விதியில் மாற்றம் கொண்டு வந்தது மத்திய அரசு

  • ஓய்வு பெற்ற பணியில் உள்ள 62 வயதை கடக்காத முப்படைகளின் தளபதிகளில் ஒருவரை நியமிப்பது விதியாக இருந்தது. இந்த நிலையில்தான் இந்த விதியில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
  • அதன்படி 62 வயதுக்கு மேற்பட்ட ஓய்வு பெற்ற அல்லது பணியில் உள்ள லெப்டினனட் ஜெனரல, ஏர் மார்ஷல், துணை அட்மிரல்களும் முப்படைகளின் தலைமை தளபதி பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
  • இந்த புதிய விதி மாற்றலின் மூலம் முப்படைகளின் தலைமை தளபதி பணிக்கு 3 ஸ்டார் மற்றும் 4 ஸ்டார் அதிகாரிகளும் தகுதியுள்ளவர்களாவார்கள். 
  • முப்படைகளின் தலைமை தளபதி பணியானது ராணுவ சீர்த்திருத்தங்களை செய்யும் மிகப் பெரிய பணியாகும். பாதுகாப்பு படைகளுக்கும் அரசுக்கும் இடையே ஒத்துழைப்புடன் செயல்படும் ஒரு பதவியாகும்.
  • முன்பெல்லாம் நாட்டின் பாதுகாப்பு படைகளை நவீனப்படுத்தும் திட்டங்கள், பதவி உயர்வுகளை பெறுவது உள்ளிட்டவை அந்தந்த தலைமை அதிகாரியின் கீழ் செயல்படுத்தப்பட்டு வந்தன. ஆனால் முதல்முறையாக ராணுவ விவகாரங்கள் துறை ஏற்படுத்தப்பட்ட பின்னர் இந்த செயல்பாடுகள் அனைத்தும் ராணுவத்தின் கீழ் வந்துள்ளன.
  • முப்படைகள் தொடர்பான ராணுவ விவகாரங்கள் தொடர்பான முடிவுகளை எடுக்கும் பணி முப்படைகளின் தலைமை தளபதிக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் அக்னி 4 ஏவுகணை வெற்றிகரமாக சோதனை

  • கடந்த 1989-ம் ஆண்டில் அக்னி 1 ஏவுகணை முதல்முறையாக சோதனை செய்யப்பட்டது. இது 1,200 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயக்கூடியது. அக்னி பிரைம் (2,000 கி.மீ.), அக்னி 2 (3,500 கி.மீ.), அக்னி 3 (3,000 முதல் 5,000 கி.மீ.), அக்னி 4 (4,000 கி.மீ.), அக்னி 5 (8,000 கி.மீ.) என அடுத்தடுத்து அக்னி வகை ஏவுகணைகள் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டன.
  • கண்டம் விட்டு கண்டம் பாயும் இந்த ஏவுகணைகள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டு பயன்பாட்டில் உள்ளன. அடுத்ததாக அக்னி 6 ஏவுகணை தயாரிக்கப்பட்டு வருகிறது. இது 12,000 கி.மீ. தொலைவு வரை சீறிப் பாயும் திறன் கொண்டதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்திய ராணுவத்தில் இதுவரை சேர்க்கப்பட்டுள்ள அக்னி வகை ஏவுகணைகள் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் அக்னி 4 ஏவுகணை ஒடிசாவில் உள்ள அப்துல் கலாம் தீவில் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • இது 4,000 கி.மீ. தொலைவு வரை பாயக்கூடியது. 1,000 கிலோ எடையுள்ள அணு ஆயுதங்களை சுமந்து செல்லும் திறன் கொண்டது. அக்னி வகை ஏவுகணைகள் மூலம் சீனா மற்றும் பாகிஸ்தானின் எந்த பகுதி மீதும் இந்திய ராணுவத்தால் தாக்குதல் நடத்த முடியும்.

காவல் துறையை நவீனப்படுத்த மத்திய அரசு ரூ.126 கோடி ஒதுக்கீடு

  • காவல் துறையை நவீனப்படுத்தவும், போலீஸ் நிலையங்கள் அமைத்தல் மற்றும் மேம்படுத்தும் பணிகளுக்காக மத்திய அரசு ரூ.126.7 கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.
  • நாடு முழுவதும் உள்ள போலீஸ் படைகளை நவீனப்படுத்துவதற்காகவும், புதிதாக போலீஸ் நிலையங்கள் அமைத்தல், போலீஸ் நிலையங்களை மேம்படுத்துதல், காவல் துறையினர் வசதிக்காக பல்வேறு திட்டங்களை அமல்படுத்துதல் போன்றவற்றுக்காக இந்த நிதி செலவிடப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நம்பிக்கையில்லா தீா்மானத்தில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி

  • கரோனா விதிமுறைகளை மீறி தனது அலுவலகத்தில் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகளை நடத்திய விவகாரத்தில் போரிஸ் ஜான்ஸன் மற்றும் அவரது அமைச்சா்களுக்கு எதிராக சா்ச்சைகள் எழுந்துள்ளன.
  • இந்தச் சூழலில், பிரதமா் பதவியைத் தொடரும் தகுதியை போரிஸ் ஜான்ஸன் இழந்துவிட்டதாகக் கூறி, கன்சா்வேட்டிவ் கட்சியைச் சோந்த 54 அல்லது அதற்கு மேற்பட்ட எம்.பி.க்கள் கட்சியின் உறுப்பினா் குழு தலைவா் சா் கிரஹாம் பிராடியிடம் கடிதம் அளித்தனா்.
  • அதையடுத்து, போரிஸ் ஜான்ஸனுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீமானம் கொண்டு வரப்பட்டது. இந்தத் தீா்மானத்தின் மீது கட்சியின் 359 எம்.பி.க்களும் ரகசியமாக வாக்களித்தனா்.
  • தில், பிரதமா் பதவியை ஜான்ஸன் தொடா்வதற்கு ஆதரவாக 211 எம்.பி.க்கள் வாக்களித்திருந்தனா். அவருக்கு எதிராக 148 வாக்குகள் பதிவாகியிருந்தன.
  • அதையடுத்து, இந்த வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்ஸன் வெற்றி பெற்ாக நாடாளுமன்றத்தில் கன்சா்வேட்டிவ் உறுப்பினா்கள் குழு தலைவா் சா் கிரஹாம் பிராடி செவ்வாய்க்கிழமை அறிவித்தாா்.

பாரா துப்பாக்கிச் சூடு உலக கோப்பைப் போட்டியில் இந்தியா அவனி லெகரா தங்கம் வென்றார்

  • டோக்யோ பாராலிம்பிக்ஸ் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்தியாவின் பாரா துப்பாக்கிச் சுடும் வீராங்கனை அவனி லெகரா பிரான்சில் நடந்துவரும் பாரா துப்பாக்கிச் சுடும் உலகக் கோப்பைப் போட்டியில்  இந்தியாவுக்குத் தங்கப் பதக்கம் வென்றார்.
  • பெண்கள் R2 10 மீட்டர் ஏர் ரைஃபில் எஸ்.எச்.1 பிரிவில் இந்த பதக்கத்தை வென்ற லெகரா, இந்தப் போட்டியில் தமது சொந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையையும் படைத்தார்.
  • அவர் பெற்ற புள்ளிகள் - 250.6. இதன் மூலம் தமது முந்தைய சாதனையான 249.6 புள்ளிகளை அவரே முறியடித்தார். இந்த சாதனை மூலம் அவர் 2024 பாராலிம்பிக்ஸ் போட்டிக்குத் தகுதியும் பெற்றுவிட்டார்.
  • போலந்து நாட்டின் எமிலியா பாப்ஸ்கா 247.6 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கத்தையும், ஸ்வீடன் நாட்டின் அன்னா நார்மன் 225.6 புள்ளிகளுடன் வென்கலப் பதக்கத்தையும் இந்தப் போட்டியில் வென்றனர்.
மத்திய பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள் மாநாடு 2022-ஐ குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்து விருதுகளையும் வழங்கினார்
  • மத்திய பல்கலைக் கழகங்களின் துணை வேந்தர்கள், தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நிறுவனங்களின் இயக்குனர்கள் பங்கேற்கும்  2 நாள் மாநாட்டை குடியரசுத் தலைவர் மாளிகையில் குடியரசுத் தலைவர் திரு ராம்நாத் கோவிந்த் இன்று (ஜூன் 7, 2022) தொடங்கி வைத்தார்.
  • இந்த மாநாட்டில் உயர் கல்விக்கான 161 மத்திய நிறுவனங்களில்  53 நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் நேரடியாகவும் மற்றவர்கள் இணையதளம் வழியாகவும் கலந்து கொள்கின்றனர்.
  • சுதந்திரத்தின் 75 வது ஆண்டு பெருவிழாவின் உயர்கல்வி நிறுவனங்களின் பங்களிப்பும், பொறுப்பும்; உயர் கல்வி நிறுவனங்களின் சர்வதேச தரவரிசை;  கல்வியாளர்கள் – தொழில் துறையினர், கொள்கை உருவாக்குவோர் இடையே ஒத்துழைப்பு; பள்ளிக் கல்வி, உயர் கல்வி, தொழிற்கல்வி ஆகியவற்றின் ஒருங்கிணைப்பு; வளர்ந்து வரும் தொழில்நுட்ப யுகத்தில் கல்வி மற்றும் ஆராய்ச்சி போன்றவை இந்த மாநாட்டு அமர்வுகளின் தலைப்புகளாக இருக்கும்.  

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel