Type Here to Get Search Results !

TNPSC 31st MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

செஸ் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய விஸ்வநாதன் ஆனந்த்

  • நார்வேயில் நடைபெற்று வந்த ப்லிஸ்ட் செஸ் சாம்பியன் தொடரில் 52 வயதான விஸ்வநாதன் ஆனந்த் கலந்து கொண்டார். இந்த ஆட்டத்தில் ஏழாவது தொடரில் உலகச் சாம்பியன் மேக்னஸ் கார்ல்சன் எதிர்த்து விஸ்வநாதன் ஆனந்த் விளையாடினார். 
  • இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விஸ்வநாதன் ஆனந்த் உலக சாம்பியன் மேக்னஸ் கார்ல்சனை வென்றார். இந்த தோல்வியால் மேக்னஸ் கார்ல்சன் இரண்டாவது இடத்திற்கு சென்றார். 
  • ஐந்தாவது சுற்றில் அனீஸ் கிரியுடனும், ஒன்பதாவது சுற்றில் பிரான்ஸ் மாக்சிம் லிச்சியர் லாக்ரேனுடனும் தோல்வியடைந்ததால் விஸ்வநாதன் ஆனந்த் 5 புள்ளிகளை பெற்று நான்காவது இடத்தில் உள்ளார். 
  • அமெரிக்க கிரண்ட்மாஸ்டர் வெஸ்லி 6.5 புள்ளிகள் பெற்று முதலிடத்திலும், நெதர்லாந்து கிரண்ட்மாஸ்டர் அனிஷ் கிரி மூன்றாவது இடத்திலும் உள்ளார்.

10 கோடி விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி நிதியுதவி - பிரதமர் நரேந்திர மோடி வழங்கினார்

  • இமாச்சல பிரதேச தலைநகர் சிம்லாவில் ஏழைகள் நல மாநாடு நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று மத்திய அரசின் 16 திட்டங்களின் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 
  • இதன் ஒரு பகுதியாக பிரதமரின் விவசாயி நிதித் திட்டத்தின் 11-வது தவணை நிதி வழங்கப்பட்டது. நாடு முழுவதும் 10 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு ரூ.21,000 கோடி அவரவர் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டது.

துப்பாக்கி சுடுதலில் இந்திய மகளிர் அணிக்கு தங்கம்

  • ஐஎஸ்எஸ்எஃப் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி அஜர்பைஜானின் பாகு நகரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் அணிகள் பிரிவில் இளவேனில் வாலறிவன், ரமிதா, ஸ்ரேயா அகர்வால் ஆகியோரை உள்ளடக்கிய இந்திய அணி அனா நீல்சன், எம்மா கோச், ரிக்கே மேங் இப்சன் ஆகியோரை கொண்ட டென்மார்க் அணியை 17-5 என்ற கணக்கில் தோற்கடித்து தங்க பதக்கம் வென்றது.
  • இந்தத் தொடரில் 12 பேரை கொண்ட இந்திய அணி பங்கேற்றுள்ளது. கடந்த 27-ம் தேதி தொடங்கிய இந்தத் தொடரில் இந்தியா ஒரு தங்கத்துடன் பட்டியலில் 5-வது இடம் வகிக்கிறது. செர்பியா 2 தங்கம், ஒரு வெள்ளி, ஒரு வெண்கலத்துடன் முதலிடத்தில் உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி மார்ச் காலாண்டில் 4.1 சதவீதம்

  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி, மார்ச்சுடன் முடிவடைந்த காலாண்டில் 4.1 சதவீதமாக அதிகரித்ததை அடுத்து, கடந்த நிதியாண்டின் வளர்ச்சி, 8.7 சதவீதமாக உயர்வடைந்துள்ளது. இது, இதற்கு முந்தைய நிதியாண்டில் மைனஸ் 6.6 சதவீதமாக இருந்தது.
  • இருப்பினும், இதற்கு முந்தைய நிதியாண்டின் மார்ச் காலாண்டில், வளர்ச்சி 5.4 சதவீதமாக உயர்ந்து இருந்தது. சீனாவை பொறுத்தவரை, அந்நாட்டின் வளர்ச்சி, மார்ச் காலாண்டில் 4.8 சதவீதமாக உள்ளது. 
  • மத்திய புள்ளியியல் அலுவலகம், இரண்டாவது கணிப்பில், கடந்த நிதியாண்டில் வளர்ச்சி 8.9 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக -அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
  • நாட்டின் முக்கிய 8 துறைகளின் வளர்ச்சி, கடந்த ஏப்ரலில் 8.4 சதவீதமாக உயர்வைக் கண்டுள்ளது. இது, அதற்கு முந்தைய ஆண்டை விட 62.6 சதவீதம் அதிகமாகும். 
  • மேலும், கடந்த மார்ச் மாதத்தில், வளர்ச்சி 4.9 சதவீதமாக இருந்தது. எட்டு முக்கிய துறைகளில், நிலக்கரி, கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, பெட்ரோலிய சுத்திகரிப்பு பொருட்கள், உரம், உருக்கு, சிமென்ட், மின்சாரம் ஆகியவை அடங்கும்.

ரூ.3,000 கோடிக்கு அஸ்திரா ஏவுகணை கொள்முதல் - பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்

  • ராணுவத் தளவாட உற்பத்தியில் உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,971 கோடியில் அஸ்திரா எம்கே-1 ஏவுகணைகளைக் கொள்முதல் செய்வதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது.
  • அஸ்திரா எம்கே-1 ஏவுகணை, இந்திய கடற்படையிலும் விமானப் படையிலும் விண்ணில் இருந்து விண்ணில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் வலிமை கொண்டது.
  • பாரத் டைனமிக்ஸ் நிறுவனத்திடம் இருந்து 248 அஸ்திரா ஏவுகணைகள் கொள்முதல் செய்யப்படவுள்ளன. அவற்றில், 200 ஏவுகணைகள் இந்திய விமானப் படையிலும், 48 ஏவுகணைகள் கடற்படையிலும் பயன்படுத்தப்படும்.
  • டிஆா்டிஓ வடிவமைத்த அஸ்திரா ஏவுகணை முதன்முதலில் கடந்த 2003-ஆம் ஆண்டு மே மாதம் பரிசோதிக்கப்பட்டது. அதன் பிறகு அந்த ஏவுகணைகள் பல முறை பரிசோதிக்கப்பட்டு சுகோய் போா் விமானத்தில் சோக்கப்பட்டன. 
  • அந்த ஏவுகணைகள், அடுத்த சில ஆண்டுகளில் தேஜஸ் மாா்க்-1ஏ போா் விமானத்திலும் மேம்படுத்தப்பட்ட மிக்-29 ரக போா் விமானங்களிலும் சோக்கப்படும்.

2021-2022 நிதியாண்டில் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71% - இந்திய அரசு

  • 2021-2022ஆம் நிதியாண்டில் இந்திய அரசின் நிதி பற்றாக்குறை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6.71 சதவிகிதமாக இருந்தது என்று இந்திய அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன. இது 6.9 சதவிகிதமாக இருக்கும் என்று பட்ஜெட் கணிப்பு திருத்தப்பட்டபோது தெரிவிக்கப்பட்டிருந்தது.
  • 2021-22 நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.7 சதவீதமாக இருந்தது என்றும் அந்த தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளன.
  • ஜனவரி - மார்ச் வரையிலான காலாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 4.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
  • மின்சாரம், எரிவாயு, தண்ணீர் விநியோகம் துறை 7.5 சதவீதமாக வளர்ச்சி கண்டுள்ளது.
  • கட்டுமான துறை 11.5 சதவீதமாக ஏற்றம் பெற்றுள்ளது. உற்பத்தி துறை 9.9 சதவீதமாக ஏற்றம் கண்டுள்ளது.
  • விவசாயத்துறை 3 சதவீதமாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் 3.3 சதவீதமாக இருந்தது.
தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86,912 கோடி ரூபாய் ஜிஎஸ்டி இழப்பீட்டுத்தொகை விடுவிப்பு
  • இதனிடையே, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்கு மொத்தம் 86,912 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி இழப்பீட்டுத் தொகையை மத்திய அரசு விடுவித்துள்ளது. இதில், தமிழ்நாட்டுக்கு ரூ. 9,602 கோடி ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • மகராஷ்டிராவிற்கு ரூ. 14,145 கோடி, கர்நாடகத்திற்கு ரூ. 8,633 கோடி, உத்தர பிரதேசத்திற்கு ரூ. 8,874, டெல்லிக்கு ரூ. 8,012 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், கேரளாவிற்கு ரூ. 5,693 கோடி, மேற்கு வங்கத்திற்கு ரூ. 6,591 கோடி, புதுச்சேரிக்கு ரூ.576 கோடி என 21 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ. 86,912 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.
  • இன்று மே 31 வரையிலான அனைத்து ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகையையும் விடுவித்துள்ளதாக, நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.
  • ஜிஎஸ்டி இழப்பீட்டு நிதியில் 25,000 கோடி ரூபாய் மட்டுமே இருந்த நிலையில், இந்திய அரசு முழு இழப்பீட்டுத் தொகையையும் விடுவித்துள்ளது. மீதமுள்ள ரூ.61,912 கோடி மத்திய அரசின் கூடுதல் வரி வசூல் மூலம் விடுவிக்கப்படும்.
  • இதில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் மாநிலங்களுக்கு வழங்கப்படவேண்டிய பாக்கி ரூ. 17,973 கோடியாகும். பிப்ரவரி, மார்ச் மாதத்திற்கான பாக்கி ரூ. 21,322 கோடி. 2022 ஜனவரி வரையிலான இழப்பீட்டு பாக்கி ரூ. 47,617 கோடி. மொத்தம் 86,912 கோடி.

இந்தியாவின் முதல் மாநிலமாக 'மண் காப்போம்' இயக்கத்துடன் குஜராத் அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம்

  • 'மண் காப்போம்' இயக்கத்துடன் இணைந்து குஜராத் மாநிலத்தில் மண் வளத்தை மீட்டெடுப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குஜராத் முதல்வர் மாண்புமிகு திரு.பூபேந்திரபாய் பட்டேல் மற்றும் சத்குரு ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
  • இதன்மூலம், சர்வதேச சுற்றுச்சூழல் இயக்கமான 'மண் காப்போம்' இயக்கத்துடன் கரம்கோர்த்த முதல் இந்திய மாநிலம் என்ற பெருமையை குஜராத் பெற்றது. 
பல்லுயிர் பெருக்கப் பாதுகாப்புக்கான கொள்கையை என்டிபிசி வெளியிட்டுள்ளது
  • இந்தியாவின் மிகப்பெரிய ஒருங்கிணைந்த மின் உற்பத்தி நிறுவனமான தேசிய அனல்மின் கழகம் என்டிபிசி, புதுப்பிக்கப்பட்ட பல்லுயிர் பெருக்க கொள்கை 2022-ஐ வெளியிட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தை மேம்படுத்தி பாதுகாக்கும் விரிவான தொலைநோக்கை உருவாக்க இது உதவும்.
  • பல்லுயிர் பெருக்க கொள்கை என்பது என்டிபிசி என்பது சுற்றுச்சூழல் கொள்கையுடன் சேர்ந்த ஒரு பகுதியாகும். சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த கொள்கைகளை ஏற்படுத்துவது இதன் நோக்கமாகும்.
  • அதிக பல்லுயிர் பெருக்கம் உள்ள பகுதிகளில் செயல்பாடுகளைத் தவிர்ப்பது மற்றும் திட்டத் தளங்களை நியாயமாகத் தேர்ந்தெடுப்பது குறித்து என்டிபிசி எப்போதும் கவனத்துடன் செயல்பட்டு வருகிறது. 
  • அந்நிறுவனம் தற்போது இயங்கி வரும் அனைத்து தளங்களிலும் பல்லுயிர் பெருக்கத்தின் இழப்பை தவிர்க்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
  • என்டிபிசி 2018 ஆம் ஆண்டில் பல்லுயிர் பெருக்க கொள்கையை வெளியிட்ட முதல் பொதுத்துறை நிறுவனமாகும். அதே ஆண்டில், என்டிபிசி இந்திய வணிகம் மற்றும் பல்லுயிர் முன்முயற்சியில் (IBBI) உறுப்பினரானது.
  • ஆலிவ் ரிட்லி ஆமைகளைப் பாதுகாப்பதற்காக ஆந்திரப் பிரதேச வனத் துறையுடன் ஐந்து ஆண்டுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது என்டிபிசி மேற்கொண்ட ஒரு பெரிய முன்முயற்சி ஆகும்.
  • ஆந்திர கடலோரப் பகுதியில் ரூ. 4.6 கோடிகள் நிதி பங்களிப்புடன், ஆமைகள் குஞ்சு பொறித்து கடலில் விடும் நடவடிக்கை என்டிபிசி ஒப்பந்தத்திற்கு பின்னர் 2.25 மடங்கு அதிகரித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel