Type Here to Get Search Results !

TNPSC 12th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலம் முதல் நாளில் ரூ.43,000 கோடி

  • ஐபிஎல் ஒளிபரப்பு உரிமை ஏலத்தில் முதல் நாளிலேயே ரூ.43 ஆயிரம் கோடியை எட்டியுள்ளது. அதாவது 4 பிரிவுகளில் 2 பிரிவுகளுக்கான ஏலம் மட்டுமே இன்று முடிந்துள்ளது.
  • "பேக்கேஜ் 1" சுமார் ரூ 23, 370 கோடி ரூபாய்க்கும் , "பேக்கேஜ் 2" ரூ. 19, 680 கோடிக்கும் ஏலம் போயுள்ளது. இனி ஐபிஎல்-ம் ஒவ்வொரு போட்டியும் ரூ.105 கோடி மதிப்புடையதாகிறது. அமெரிக்க நேஷனல் ஃபுட் பால் லீகிற்கு அடுத்த படியாக ஐபிஎல் தான் இப்போது உள்ளது.
  • ஒவ்வொரு ஆண்டும் ஐபிஎல் பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடங்கிய ஐபிஎல் தொடர் தற்போது பல நாடுகளில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 
  • இதனால் ஐபிஎல் தொலைக்காட்சி, டிஜிட்டல் உரிமத்தை கைப்பற்ற ஒவ்வொரு முறையும் கடும் போட்டி நிலவுகிறது. முதல் 10 ஆண்டுகளில் சோனி பிக்சர்ஸ் குழுமம் ரூ.8200 கோடிக்கு ஒளிபரப்பு உரிமையை வாங்கியிருந்தது. 
  • அதை தொடர்ந்து கடந்த அடுத்த 5 ஆண்டுகளுக்கு முன் ரூ.16,347 கோடிக்கு ஸ்டார் இந்தியா, டிஷ்னி நிறுவனம் ஆகியவை தொலைக்காட்சி உரிமம் மற்றும் டிஜிட்டல் உரிமத்தை பெற்றது.
  • 2023 முதல் 2027ம் ஆண்டு வரையிலான ஆண்டுகளுக்கு ஒளிபரப்பு உரிமையை 4 பிரிவுகளாக பிசிசிஐ பிரித்து வழங்க இருக்கிறது. ஆசிய துணைக் கண்டத்தில் மட்டும் ஒளிபரப்பு உரிமை, டிஜிட்டல் ஒளிபரப்பு உரிமை, 18 போட்டிகளுக்கு டிஜிட்டல் உரிமை இல்லாத ஒளிபரப்பு உரிமை, அதாவது முதல் போட்டி, 4 ப்ளே ஆஃப், டபுள் ஹெட்டர் போட்டிகள் அடங்கும், உலக நாடுகளுக்கான ஒளிரபப்பு உரிமை என 4 பிரிவுகளில் வழங்க பிசிசிஐ வழங்குகிறது.
  • இந்த நிலையில் இங்கிலிஷ் பிரீமியர் லீக் கால்பந்து மீடியா ரைட்ஸ் வருவாயையும் தூக்கிச் சாப்பிட்டுள்ளது ஐபிஎல் மீடியா ரைட்ஸ். கடந்த ஐபிஎல் தொடரின் மீடியா ரைட்ஸின் படி ஒரு ஐபிஎல் போட்டியின் மதிப்பு ரூ.54.23 கோடி. இப்போது ரூ.105 கோடியாக அதிகரித்துள்ளது.

டிஎன்பிஎஸ்சி தலைவராக முனியநாதன் நியமனம்

  • டிஎன்பிஎஸ்சி தலைவராக 2020-ல் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் பொறுப்பேற்றார். இவர் கடந்த ஜூன் 9-ம் தேதி ஓய்வு பெற்றார். இதையடுத்து, புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான பணிகள் நடந்து வருகின்றன. 
  • இந்நிலையில், தற்காலிக அடிப்படையில் டிஎன்பிஎஸ்சி உறுப்பினரான ஐஏஎஸ் அதிகாரிசி.முனியநாதன், தேர்வாணையத்தின் பொறுப்பு தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இவர் ஏற்கெனவே நாகை மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிடர் நலம் மற்றும் தொழிலாளர் நலத் துறையில் ஆணையர் உள்ளிட்ட பொறுப்புகளை வகித்துள்ளார்.
ஏடிபி சேலஞ்சர் டென்னிஸ் - தமிழக வீரர்கள் ஜீவன், ரூ.ராம் சாம்பியன்

  • ஸ்லோவாக்கியாவில் பிராட்டிஸ்லாவா ஓபன் ஏடிபி சேலஞ்சர் பயண டென்னிஸ் போட்டியின் 3வது பதிப்பு நடந்தது. களிமண் தரையில் நடந்த போட்டியின் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தியா சார்பில் தமிழக வீரர்கள் ஜீவன் நெடுஞ்செழியன், ரூ.ராம் பாலாஜி இணை களம் கண்டது.
  • அவர்களுடன் உக்ரைன் இணை விளாடிஸ்லாவ் மனாஃபோவ், ஒலெக் பிரிஹோட்கோ ஆகியோர் மோதினர். டை பிரேக்கர் வரை நீண்ட முதல் செட்டை 7-8(8-6) என்ற புள்ளி கணக்கில் ஜீவன் இணை கைப்பற்றியது. 
  • தொடர்ந்து 2வது செட்டை யும் 6-4 என்ற புள்ளி கணக்கில் ஜீவன் இணை எளிதில் வசப்படுத்தியது. அதனால் ஜீவன் இணை 2-0 என்ற நேர் செட்களில் வெற்றிப் பெற்று பிராட்டிஸ்லாவா ஓபன் ஏடிபி சேலஞ்சர் சாம்பியன் பட்டத்தை வென்றது. 

பாரா உலக துப்பாக்கி சுடுதல் - அவனி லெகராவுக்கு 2ஆம் தங்கம்

  • பிரான்ஸின் சட்டியருக்ஸ் நகரில் நடைபெறும் இப்போட்டியில் மகளிா் ஆா் 8-50 மீ. ரைபிள் பிரிவில் 458.3 புள்ளிகளுடன் தங்கம் வென்றாா் லெகரா. ஸ்லோவோக்கியாவின் வெரோனிகா, ஸ்வீடன் அன்னா நாா்மன் வெள்ளி, வெண்கலம் வென்றனா்.
  • ஏற்கெனவே ஆா் 2 10 மீ. ஏா் ரைபிள் ஸ்டாண்டிங் பிரிவில் லெகரா தங்கம் வென்றிருந்தாா். பி 2 மகளிா் 10 மீ. ஏா்பிஸ்டல் பிரிவில் ரூபினா பிரான்ஸிஸ் வெண்கலம் வென்றாா்.

உலக யூத் பளுதுாக்குதலில் இந்தியாவுக்கு இரண்டு வெள்ளி

  • உலக யூத் பளுதுாக்குதலில் இந்தியாவின் அகன்ஷா கிஷோர் (40 கி.கி.,), விஜய் பிரஜாபதி (49 கி.கி.,) வெள்ளி வென்றனர்.மெக்சிகோவில், உலக யூத் பளுதுாக்குதல் சாம்பியன்ஷிப் நடக்கிறது.
  • பெண்களுக்கான 40 கிலோ எடைப்பிரிவில் பங்கேற்ற இந்தியாவின் அகன்ஷா, 'ஸ்னாட்ச்' பிரிவில் 59, 'கிளீன் அன்ட் ஜெர்க்' பிரிவில் 68 என, மொத்தம் 127 கிலோ பளுதுாக்கி வெள்ளி வென்றார்.
  • ஆண்களுக்கான 49 கிலோ எடைப்பிரிவு போட்டியில் 'ஸ்னாட்ச்' பிரிவில் 78, 'கிளீன் அன்ட் ஜெர்க்' பிரிவில் 97 என, ஒட்டுமொத்தமாக 175 கிலோ பளுதுாக்கிய இந்தியாவின் விஜய் பிரஜாபதி, இரண்டாவது இடம் பிடித்தார். இத்தொடரில் இதுவரை இந்தியாவுக்கு 2 வெள்ளி பதக்கம் கிடைத்துள்ளன.

நாா்வே செஸ் ஏ பிரிவில் பிரக்ஞானந்தா சாம்பியன்

  • நாா்வே செஸ் ஓபன் ஒரு பகுதியாக ஜூனியா்களுக்கு ஏ பிரிவு செஸ் போட்டி நடத்தப்பட்டது. இதில் இந்திய ஜிஎம் பிரக்ஞானந்தா தொடக்கம் முதலே அபாரமாக ஆடி 9 சுற்றுகளிலும் தோல்வியே காணவில்லை. 
  • கடைசி ஆட்டத்தில் இந்திய ஐஎம் வி. பிரணீத்தை வீழ்த்தி 7.5 புள்ளிகளுடன் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினாா். ஆன்லைன் செஸ்ஸில் உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸனை வீழ்த்திய பிரக்ஞானந்தா அபார பாா்மில் உள்ளாா்.
  • பிரக்ஞானந்தா (ஏலோ 2642) முதலிடத்தைப் பெற்ற நிலையில், மாா்ஸல் எரோமிஸ்கி (இஸ்ரேல்), ஜங் மின் (சுவிடன்) ஆகியோா் இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்றனா்.
  • நாா்வே ஓபன் செஸ் போட்டியில் இந்தியாவின் முன்னாள் உலக சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் கடைசி சுற்றில் ஆா்யன் டரியை வீழ்த்தி 3-ஆவது இடத்தைப் பெற்றாா். உலக சாம்பியன் மாக்னஸ் காா்ல்ஸன் 16.5 புள்ளிகளுடன் முதலிடத்தையும், அஜா்பைஜானின் மமேட்யரோவ் 15.5 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும், ஆனந்த் 14.5 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றனா்.
தேசிய நிர்வாக சேவை வழங்குதல் மதிப்பீடு 2021 அறிக்கையை மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் திங்களன்று வெளியிடுவார்
  • தேசிய நிர்வாக சேவை வழங்குதல் மதிப்பீட்டு 2021 அறிக்கையை மத்திய அறிவியல் தொழில்நுட்பம் புவி அறிவியல் துறை இணை அமைச்சர் (தனிப் பொறுப்பு) பிரதமர் அலுவலக இணை அமைச்சர், ஊழியர் நலன், மக்கள் குறைதீர்ப்பு, ஓய்வூதியங்கள், அணுசக்தி மற்றும் விண்வெளித் துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் 2022 ஜூன் 13 அன்று வெளியிடுவார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel