பச்சை நிற பாசி மணிகள் கீழடியில் கண்டெடுப்பு
- சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் 8ம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகின்றன. கீழடி அகழாய்வில் புதிய இடத்தில் தோண்டப்படும் 7 குழிகளில் சிறிதும், பெரிதுமாக பாசி மணிகள், வட்ட சில்லுகள், சுடுமண் பானை ஓடுகள் கிடைத்து வருகின்றன.
- இதேபோல் அகரத்தில் நடந்து வரும் அகழாய்வில் 4 குழிகள் தோண்டப்பட்டு வரும் நிலையில் 2 உறை கிணறுகள், பாசிமணிகள் கிடைத்து வருகின்றன.
- கொந்தகையில் 2 குழிகள் தோண்ட்டப்பட்ட நிலையில் ஒரே இடத்தில் 21 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டுள்ளன. கீழடி அகழாய்வில் புதிய குழியில் பழங்கால பச்சை நிற பாசி மணிகள் சில கிடைத்துள்ளதாக அகழாய்வாளர்கள் தெரிவித்தனர்.
உ.பியில் ரூ.1,500 கோடியில் தெற்காசியாவின் பெரிய ராணுவ தளவாட வளாகம் - அதானி குழுமம் கையெழுத்து
- கடந்த 6-ம் தேதி உத்தர பிரதேச தலைநகர் லக்னோவில் முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. அப்போது இருதரப்புக்கும் இடையில் இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- கான்பூரில் உள்ள ராணுவ தொழில்பேட்டை திட்ட உருவாக்கத்தின் ஒரு பகுதியாக இந்த வளாகம் அமைய உள்ளது. இந்த வளாகத்தில் ராணுவத்துக்கு தேவையான அதிநவீன சிறிய ரக ஆயுதங்கள் மற்றும் ஏவுகணைகள் உள்ளிட்டவை தயாரிக்கப்படும் என்றும் இவை உள்நாட்டு தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பு மூலம் தயாரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- 250 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த வளாகம் தெற்கு ஆசியாவிலேயே மிகப் பெரிய ராணுவத் தளவாட தயாரிப்பு வளாகமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்த முதலீடு தொடர்பாக உத்தர பிரதேச விரைவு தொழில் மேம்பாட்டு ஆணையம் (யுபிஇஐடிஏ) மற்றும் அதானி குழுமத்துக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
ஆன்லைன் ரம்மி தொடர்பாக ஆய்வு செய்ய குழு - அரசாணை வெளியிட்டது தமிழக அரசு
- உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி வழங்கிய தீர்ப்பில், இச்சட்டத்தை ரத்து செய்தது. மேலும், அச்சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான அறிவியல்பூர்வ தரவுகளை விளக்க தவறியதாகவும் உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.
- இந்நிலையில், ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஈர்க்கப்பட்டு, அதில் பணத்தை இழந்து உயிரை மாய்த்துக் கொள்ளும் துயரமான நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடந்து வருகின்றன.
- இதுதொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான ஆலோசனைக் கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நடந்தது.
- தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி கே.சந்துரு தலைமையில் குழு அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டது. இக்குழுவில், ஐஐடி தொழில்நுட்ப வல்லுநர் சங்கரராமன், ஸ்நேஹா அமைப்பின் நிறுவனரும் உளவியலாளருமான லட்சுமி விஜயகுமார், காவல்துறை கூடுதல் இயக்குனர் வினித் தேவ் வாங்கடே ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர்.
- ஆன்லைன் ரம்மி விளையாட்டால் ஏற்படும் நிதியிழப்பு மற்றும் தற்கொலை உள்ளிட்ட பெரும் ஆபத்தை விளைவிக்கும் தன்மையை கண்டறிவது, இந்த விளையாட்டுகளால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உரிய தரவுகளுடன் ஆராய்வது, இவற்றை விளையாட தூண்டும் விளம்பரங்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கங்களை கூர்ந்தாய்வு செய்வது, ஆன்லைன் விளையாட்டை விளையாடுவதற்கான கட்டணங்களை குறைப்பதற்கான சாத்திய கூறுகளை ஆராய்வது, அவற்றை உரிய முறையில் கட்டுப்படுத்துவது, ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களின் சட்ட விதிமுறைகளை கண்டறிவது உள்ளிட்டவைகள் குறித்து 2 வாரங்களுக்குள் தனது பரிந்துரைகளை அரசுக்கு அளிக்க வேண்டும். மேலும், இக்குழுவிற்கு தேவையான ஆதரவுகளை காவல்துறை இயக்குனர் வழங்க வேண்டும்.
ஐ.நா., சபையில் ஹிந்திக்கு அங்கீகாரம்
- ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரப்பூர்வ அலுவல் மொழிகளாக, அராபிக், சைனீஸ், ஆங்கிலம், பிரெஞ்ச், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஷ் மொழிகள் உள்ளன.
- இதில், ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச், பயன்பாட்டு மொழியாக உள்ளன. இந்நிலையில், ஐ.நா.,வின் தகவல்கள் மற்றும் செய்திகளை உலகெங்கும் உள்ள மக்கள் புரிந்து கொள்ளும் வகையில், பல மொழிகளில் வெளியிடுவதற்கான தீர்மானத்தை இந்தியா தாக்கல் செய்திருந்தது இந்த தீர்மானம் ஐ.நா., சபையில் நேற்று முன்தினம் நிறைவேறியுள்ளது.
- முதல் முறையாக இதில் ஹிந்தி சேர்க்கப்பட்டுள்ளது. இதைத் தவிர பங்கலா, உருது ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன. ஐ.நா.,வின் இந்த நடவடிக்கையை பாராட்டு வதாக, ஐ.நா.,வுக்கான இந்தியத் துாதர் டி.எஸ். திருமூர்த்தி குறிப்பிட்டுஉள்ளார்.
சர்வதேச உணவுப் புகைப்படப் போட்டி - விருது வென்ற இந்தியப் புகைப்படம்
- இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் உள்ள ஸ்ரீநகரில் எடுக்கப்பட்ட கெபாபியானா என்ற படத்திற்காக, 2022 ஆம் ஆண்டின் பிங்க் லேடி ஃபுட் போட்டோகிராஃபர் போட்டியின் இறுதி வெற்றியாளராக தேப்தத்தா சக்ரபோர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- வாஸ்வான் கெபாப்கள் மற்றும் பிற தெரு உணவுகளைக் கரி அடுப்புகளில் சமைக்கும் புகைப்படத்தை ஒரு பரபரப்பான தெருவில் இந்த இந்தியப் புகைப்படக் கலைஞர் எடுத்தார்.