Type Here to Get Search Results !

பாரத்நெட் திட்டம் / BHARAT NET PROJECT

 

TAMIL
 • "பாரத்நெட்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள 12,525 கிராமப் பஞ்சாயத்துகளையும் "கண்ணாடி இழை கம்பி வடம்" மூலம் இணைத்து, அதிவேக அலைக்கற்றை வழங்கும் திட்டமாகும்.
 • இத்திட்டம், தமிழ்நாடு அரசின் "தமிழ்நாடு கண்ணாடி இழை வலையமைப்பு நிறுவனம் (TANFINET)" என்ற சிறப்பு நோக்கு நிறுவனம் வாயிலாக செயல்படுத்தப்படுகிறது.
 • இத்திட்டத்தின் மூலம் குறைந்தபட்சம் 1 Gbps அளவிலான அலைக்கற்றை அனைத்து 12,525 கிராமப் பஞ்சாயத்துகளுக்கும் வழங்கப்படும்.
 • இத்திட்டம் நான்கு தொகுப்புகளாக (A, B, C & D) பிரிக்கப்பட்டு, தொகுப்பு A-ல் காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர், கிருஷ்ணகிரி, செங்கல்பட்டு, சென்னை (NOC), இராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களும், 
 • தொகுப்பு B-ல் கடலூர், அரியலூர், பெரம்பலூர், தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், ஈரோடு, நீலகிரி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களும், 
 • தொகுப்பு C-ல் நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, நாமக்கல், கரூர், கோயம்பத்தூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களும், 
 • தொகுப்பு D-ல் கன்னியாகுமரி, மதுரை, இராமநாதபுரம், தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் செயல்படவுள்ளது.
 • இத்திட்டத்தின் மூலம் பொதுமக்களுக்கு குறைந்த விலையில் மின்னணு (டிஜிட்டல்) சேவைகள், இணையவழி கல்வி (e-Education), தொலை மருத்துவம் (Tele Medicine), இணையதள இணைப்பின் மூலம் வழங்கப்படும் சேவைகளான Triple Play Services (தொலைபேசி, தொலைக்காட்சி & இணையம்) ஆகியவற்றை வழங்க இயலும். மேலும், அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள், அதிவேக இணையதள சேவையினைப் பெறுவதன் மூலம் கிராம அளவில் அரசின் பல்வேறு திட்டங்கள் மக்களை விரைந்து சென்றடையும். அதோடு, புதிய ஊரக வேலைவாய்ப்புகளை உருவாக்கி பொருளாதார நிலை மேன்மையடையவும் இத்திட்டம் வழி வகுக்கும்.
 • தமிழகத்தின் அனைத்து கிராமப் பஞ்சாயத்துகளும் பாதுகாப்பான மற்றும் விரைவான இணைய சேவைகளைப் பெறவும், நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறங்களுக்கு இடையேயான தகவல்தொழில்நுட்ப திறன் இடைவெளியைக் குறைக்கவும் இத்திட்டம் உதவிடும்.
ENGLISH
 • The "BharatNet" project is a project to connect 12,525 rural panchayats in Tamil Nadu through a "fiber optic cord" to provide high-speed spectrum. The project is being implemented by the Government of Tamil Nadu through a special purpose organization called "Tamil Nadu Fiber Fiber Network Company (TANFINET)".
 • The project will provide at least 1 Gbps of bandwidth to all 12,525 village panchayats. The project is divided into four blocks (A, B, C & D), which include Kanchipuram, Tiruvallur, Vellore, Krishnagiri, Chengalpattu, Chennai (NOC), Ranipettai, Tirupati and Thiruvannamalai districts.
 • Package B includes Cuddalore, Ariyalur, Perambalur, Dharmapuri, Kallakurichi, Salem, Erode, Nilgiris and Villupuram districts.
 • Nagapattinam, Thanjavur, Thiruvarur, Pudukottai, Namakkal, Karur, Coimbatore, Tiruppur, Tiruchirappalli and Mayiladuthurai districts are included in the package C.
 • Package D will also cover Kanyakumari, Madurai, Ramanathapuram, Theni, Tuticorin, Tirunelveli, Virudhunagar, Tenkasi, Dindigul and Sivagangai districts.
 • The scheme will enable the public to avail low cost electronic (digital) services, e-education, telemedicine and internet connection services such as Triple Play Services (Telephone, Television & Internet). 
 • In addition, government offices, schools, colleges and businesses will be able to access high-speed Internet services at the village level by various government programs to reach people quickly. In addition, the project will create new rural jobs and improve economic conditions.
 • The scheme will help all the Grama Panchayats of Tamil Nadu to have secure and fast internet services and reduce the IT gap between urban and rural areas.
IMPORTANT TOPICS

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel