Type Here to Get Search Results !

TNPSC 23rd JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

வனிஜ்ய பவன் மற்றும் நிர்யாத் இணையதளத்தை பிரதமர் தொடங்கிவைத்தார்

 • தில்லியில் ‘வனிஜ்ய பவன்’ கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர் திரு நரேந்திர மோடி, நிர்யாத் இணையதளத்தையும் தொடங்கிவைத்தார். 
 • மத்திய அமைச்சர்கள் திரு பியூஷ்கோயல், திரு சோம் பிரகாஷ் மற்றும் திருமதி அனுப்ரியா பட்டேல் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்

தகவல் தொடர்பு சேவைக்கான ஜிசாட்-24 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டது

 • இஸ்ரோவின் நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (NSIL) நிறுவனம் நாட்டின் தகவல் தொடர்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக ஜிசாட்-24 என்ற அதி நவீன செயற்கைக்கோளை வடிவமைத்த‌து. இந்த செயற்கைக்கோள் இஸ்ரோவின் 42வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள்.
 • இந்த ஜிசாட் 24 அதிக எடை கொண்ட செயற்கைக்கோள் கடந்த மே 17-ம் தேதி விமானம் மூலம் பிரான்சின் கட்டுப்பாட்டில் உள்ள பிரெஞ்ச் கயானாவின் கொரு ஏவுதளத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு கனரக ராக்கெட் ஏரியன்-5 மூலம் நேற்று செலுத்தப்பட்டு வெற்றிகரமாக புவிநிலை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
என்.ஐ.ஏ., புதிய டைரக்டர் ஜெனரலராக தின்கர் குப்தா நியமனம்
 • என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக, மூத்த ஐ.பி.எஸ்., அதிகாரி, தின்கர் குப்தா நியமிக்கப்பட்டுள்ளார்.
 • பஞ்சாபில், 1987ல் ஐ.பி.எஸ்., அதிகாரியாக தேர்வான தின்கர் குப்தா, தேசிய புலனாய்வு அமைப்பின் புதிய டைரக்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ளார்.
 • இவர், ஓய்வு பெறும் வரை, அதாவது, 2024, மார்ச் 31 வரை இப்பதவியை வகிப்பார். தின்கர் குப்தாவின் நியமனத்திற்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.
துப்பாக்கிக் கட்டுப்பாட்டு மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்

 • அமெரிக்காவில் பொதுமக்கள் துப்பாக்கி வைத்திருப்பதற்கு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளும் ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் சில குடியரசுக் கட்சி எம்.பி.க்கள் ஆதரவுடன் செனட் சபையில் நிறைவேற்றினா்.
 • இதையடுத்து, இந்த வார இறுதியில் அந்த மசோதா இறுதிக்கட்ட வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. இதன் மூலம், 29 ஆண்டுகளுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் ஆயுதச் சட்டத் தீா்திருத்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
 • அதன்படி, குடும்ப வன்முறை குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டு, அந்த வன்முறையால் பாதிக்கப்பட்டவா்களை திருமணம் செய்யாமல் இருப்பவா்கள் ஆயுதம் வாங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. இதுவரை குற்றவாளிகள் பாதிக்கப்பட்டவா்களை திருமணம் செய்துகொண்டு உடன் வாழ்ந்தால்தான் துப்பாக்கி வாங்க முடியாமல் இருந்தது.
 • இது தவிர, ஆபத்தானவா்களிடமிருந்து ஆயுதங்களைத் திரும்பப் பெறுவதற்காக மாகாணங்களுக்கு நிதி ஒதுக்கீடு போன்ற பல்வேறு அம்சங்கள் இந்த மசோதாவில் இடம் பெற்றுள்ளன.

ஆசிய ட்ராக் சாம்பியன்ஷிப் - முதன் முதலில் வெள்ளி வென்ற ரொனால்டோ சிங் 

 • ஆசிய டிராக் சாம்பியன்ஷிப்பின் சீனியர் பிரிவின் ஸ்பிரிண்ட் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதன் மூலம், இந்திய சைக்கிள் வீரர் ரொனால்டோ சிங் தனது வாழ்நாளின் சாதனை ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
 • சாம்பியன்ஷிப்பில் இது அவரது மூன்றாவது பதக்கம். முன்னதாக 1 கிமீ டைம் ட்ரையல் மற்றும் டீம் ஸ்பிரிண்ட் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்றிருந்தார்.
 • இந்திய ஜூனியர் சைக்கிள் வீரர் பிர்ஜித் யும்னம் 15 கிமீ பாயிண்ட்ஸ் பந்தயத்தில் 23 புள்ளிகளுடன் வெண்கலம் வென்றார். கொரியாவின் சுங்கியோன் லீ 24 புள்ளிகளுடன் வெள்ளிப் பதக்கமும், உஸ்பெகிஸ்தானின் ஃபரூக் போபோஷெரோவ் தங்கப் பதக்கமும் வென்றனர்.
 • 10 கிலோமீட்டர் பெண்கள் ஸ்கிராட்ச் ரேஸ் இறுதிப் போட்டியில் கஜகஸ்தானின் ரினாட்டா சுல்தானோவாவை வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்ற 19 வயதான இந்திய வீராங்கனை சயானிகா கோகோய், அன்றைய பெரிய ஆச்சரியத்தை நிகழ்த்தினார். யுரி கிம் தங்கப் பதக்கத்தையும், ஜப்பானின் கீ ஃபுருயாமா வெள்ளிப் பதக்கத்தையும் வென்றனர்.
 • உலகத்தரம் வாய்ந்த சைக்கிள் போட்டியில் இந்திய அணி 23 பதக்கங்களுடன் (2 தங்கம், 6 வெள்ளி, 15 வெண்கலம்) ஐந்தாவது இடத்தைப் பிடித்தது.
 • கொரியா 12 தங்கம், 14 வெள்ளி மற்றும் மூன்று வெண்கலப் பதக்கங்களுடன் இரண்டாவது இடத்தையும், கஜகஸ்தான் நான்கு தங்கம், நான்கு வெள்ளி மற்றும் மூன்று வெண்கலத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்தன. ஜப்பான் 18 தங்கம், 7 வெள்ளி மற்றும் 2 வெண்கலத்துடன் பதக்கப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel