Type Here to Get Search Results !

TNPSC 17th JUNE 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

கொரோனா தடுப்பூசி காப்புரிமைக்கு விலக்கு - உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

  • உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடு ஜெனிவாவில் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது. இந்த ஆண்டு கூட்டத்தின் முக்கிய விவாதப் பொருளாக உணவு மற்றும் வேளாண் பாதுகாப்பு, மீன்வளத்துறை மானியம் மற்றும் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கு ஆகியவை இருந்தன.
  • ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எட்டுவதில் இழுபறி நீடித்தது. கூட்டத்தின் கடைசி இரண்டு நாட்கள் தீவிர விவாதங்களை சந்தித்தன. 
  • மீன்பிடித் தொழிலுக்கான மானியம் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னேறிய நாடுகளின் சார்பில் வாதிடப்பட்ட போது, இந்தியாவின் முயற்சியால் மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பது குறித்த ஒப்பந்தத்தில் இருந்த சர்ச்சைக்குரிய ஷரத்துகள் கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டன.
  • இதேபோல கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கோரின. 
  • இதற்கு இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடைசி நாளில் உறுப்பு நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டன. 
  • இதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், மருந்து உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் தடுப்பூசிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும்.
  • உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உலக உணவுத் திட்டத்திற்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தடை செய்ய உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்ட நிலையில், உள்நாட்டு தேவை பாதிக்கப்பட்டால் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்தது. 
  • புதன்கிழமையன்று பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் பல்வேறு நாடுகளுடன் பேசி ஒருமித்த கருத்தை கொண்டு வரும் முயற்சியை இந்தியா மேற்கொண்டது. 
  • இதையடுத்து 9 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண் இணைப்பு - மத்திய அரசு அறிவிப்பு

    • வாக்காளர் அடையாள அட்டையுடன் 'ஆதார்' எண்ணை இணைப்பதற்கான அறிவிப்பை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. தேர்தல் கமிஷனின் ஆலோசனைப்படி, தேர்தல் சட்ட திருத்த சட்டத்தின் நான்கு முக்கிய அம்சங்கள் செயல்பாட்டிற்கு வருகின்றன. 
    • இதன்படி, ஒருவரின் பெயர் பல இடங்களில் வாக்காளர் பட்டியலில் இடம் பெறுவதை தடுக்க, வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் இணைக்கப்படும்.
    • ஆண்டு தோறும் ஜன.,1 ல் புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். அதன் பின் 18 வயது பூர்த்தியானோர், தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க ஓராண்டு காத்திருக்க நேர்கிறது. 
    • அதனால் இனி, ஜன.,1 ஏப்.,1 ஜூலை 1, அக்.,1 ஆகிய தேதிகளில், 18 வயது பூர்த்தியானவர்கள் புதிய வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ளும் நடைமுறை அறிமுகமாகிறது.
    • இதனால் ஓராண்டில் நான்கு முறை புதிய வாக்காளர்களை சேர்க்கலாம். வெளிநாடுகளில் உள்ள இந்திய துாதரகங்களில் பணியாற்றுவோர், எல்லைகளில் காவல் காக்கும் ராணுவ வீரர்கள் ஆகியோர் சேவைப் பிரிவு வாக்காளர்களாக கருதப்படுவர். 
    • அடுத்து, வாக்களிப்பதில் பாலின சமத்துவ உரிமையை அளிக்க, மனைவி என்ற சொல்லுக்கு பதிலாக துணைவர் என்ற சொல் பயன்படுத்தப்படும். இதனால், சேவைப் பிரிவினரில் கணவன் அல்லது மனைவி சார்பில் பரஸ்பரம் ஓட்டு போட முடியும்.
    • இவற்றோடு, தேர்தல் தொடர்பான சாதனங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை வைக்கவும், பாதுகாப்பு படையினர் தங்கவும் எந்த இடத்தையும் தேர்தல் கமிஷன் கோர, சட்டம் வகை செய்கிறது. 

    இங்கிலாந்து ஒருநாள் போட்டியில் 498 ரன் குவித்து உலக சாதனை

    • நெதர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் விளையாடுகிறது. ஆம்ஸ்டெல்வீன் விஆர்ஏ மைதானத்தில் நடந்த முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற நெதர்லாந்து முதலில் பந்துவீசியது. 
    • இங்கிலாந்து 50 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 498 ரன் குவித்து புதிய உலக சாதனை படைத்தது. ஒருநாள் போட்டிகளில் குவிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோராக இது அமைந்தது. பட்லர் 162 ரன் (70 பந்து, 7 பவுண்டரி, 14 சிக்சர்), லிவிங்ஸ்டன் 66 ரன்னுடன் (22 பந்து, 6 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
    பாலைவனமாதல் மற்றும் வறட்சி நாள் - சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் ஏற்பாடு
    • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சகம் சார்பில், பாலைவனமாதல் மற்றும் வறட்சி தினம் இன்று நடைபெற்றது. 
    • மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துக்கான அமைச்சர் திரு.பூபேந்திர யாதவ் நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கினார். 
    • இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் சந்தித்து வரும் சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் பொருளாரப் பிரச்சினைகளில் நிலத்துக்கு உள்ள முக்கியப் பங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
    • நிலத்தை ஆரோக்கியமானதாகவும், நல்ல விளைச்சலை தரக் கூடியதாகவும் வைத்திருக்க தனிநபர்களையும், குழுக்களையும் ஊக்குவிப்பதை நோக்கமாக கொண்டு இந்த நிகழ்ச்சி நடத்தப்படுகிறது."
    மே 2022க்கான மாதாந்திர உற்பத்தி அறிக்கை
    • 2022 மே மாதத்தில் கச்சா எண்ணெய் உற்பத்தி 2550.05 ஆயிரம் மெட்ரிக் டன்னாக இருந்தது. இது அந்த மாத இலக்கை விட 2.44 சதவீதம் அதிகமாகும். மே 2021-ஐ விட, 4.60 சதவீதம் உற்பத்தி அதிகம்.  
    • ஏப்ரல்-மே 2022-ல் மொத்த கச்சா எண்ணெய் உற்பத்தி 5019.72 டிஎம்டி ஆகும். இது இலக்கை விட 2.86 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே கால உற்பத்தியை விட 1.79 சதவீதம் அதிகமாகும்.
    • இயற்கை வாயு உற்பத்தியை பொறுத்தவரை மே 2022-ல் 2913.65 எம்எம்எஸ்சிஎம் ஆக இருந்தது. இது அந்த மாத இலக்கை விட 5.06 சதவீதம் குறைவாகும். எனினும் 2021 மே மாதத்தை விட 6.35 சதவீதம் அதிகமாகும்.
    • எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களால் மே 2022-ல் மேற்கொள்ளப்பட்ட பெட்ரோலிய பொருட்களின் உற்பத்தி 22942.49 டிஎம்டி இது இலக்கை விட 4.49 சதவீதம் அதிகமாகும். முந்தைய ஆண்டின் இதே காலகட்டத்தை விட இந்த உற்பத்தி 17.06 சதவீதம் அதிகமாகும்.
    • 2022 மே மாதத்தில் 23250 டிஎம்டி பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டன. இது இலக்கை விட 4.36 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு இதே மாதத்தை விட உற்பத்தி 16.65 சதவீதம் அதிகமாகும்.

    Post a Comment

    0 Comments
    * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

    Top Post Ad

    Below Post Ad

    Hollywood Movies

    close

    Join TNPSC SHOUTERS Telegram Channel

    Join TNPSC SHOUTERS

    Join Telegram Channel