Type Here to Get Search Results !

உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் / LIST OF WORLD PEACEFUL COUNTRIES

 

TAMIL
  • பொருளாதாரம் மற்றும் அமைதிக்கான நிறுவனம், ஒவ்வொரு ஆண்டும் உலகின் அமைதியான நாடுகள் பட்டியலை வெளியிட்டு வருகிறது. 
  • உலகம் முழுவதும் 163 நாடுகளில் நிலவும் உள்நாட்டு வன்முறை, அகதிகள், பயங்கரவாதம், அரசியல் நிலையற்றத்தன்மை உள்பட 28 அளவுகோல் அடிப்படையில் பட்டியலை தயாரித்துள்ளது. 
  • இதில் கடந்த 14 ஆண்டுகளில் அமைதி குறைந்துள்ளதாகவும், நாட்டின் சராசரி மதிப்பெண் 3.2 சதவீதம் குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது. உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில், 14வது ஆண்டாக ஐஸ்லாந்து 1.107 மதிப்பெண்களுடன் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறது. 
  • நியூசிலாந்து 1.269 மதிப்பெண்களுடன் 2வது இடத்தில் உள்ளது. 1.288 மதிப்பெண்களுடன் அயர்லாந்து 3வது இடத்தில் உள்ளது. 
  • 1.296 மதிப்பெண்களுடன், பயங்கரவாதத்திற்கு எதிராக போராடுவதுடன், பிற நாடுகளில் அமைதியை நிலைநாட்ட உதவும் டென்மார்க் 4வது இடத்தில் உள்ளது. 1.3 மதிப்பெண்களுடன், ஆஸ்திரியா 5வது இடத்தில் உள்ளது. 
  • கடந்தாண்டு 7வது இடத்தில் இருந்த ஆஸ்திரியா, 2 இடங்கள் முன்னேறியுள்ளது.
  • 1.301 மதிப்பெண்களுடன் போர்ச்சுக்கல் 6வது இடத்தில் உள்ளது. 1.301 மதிப்பெண்களுடன் ஸ்லோவேனியா 7வது இடத்தில் உள்ளது. கடந்தாண்டை விட 3 இடங்கள் பின்தங்கியுள்ளது. இருந்தபோதும் விருந்தோம்பல், மக்களின் வாழ்க்கை தரம் இங்கு சிறப்பாக இருக்கும்.
  • பயங்கரவாத , குற்றச்செயல்கள் குறைவால், பாதுகாப்பான நாடாக விளங்கும் செக் குடியரசு 8வது இடத்தை பிடித்துள்ளது. வெளிப்படையான சட்ட அமைப்பு, காவல்துறை கட்டமைப்பு போன்றவற்றால் சிங்கப்பூர், 9வது இடத்தை பிடித்துள்ளது. 
  • இயல்பாகவே, அமைதியை விரும்பும் நாடான ஜப்பான், 10வது இடத்தை பிடித்துள்ளது. இரண்டாம் உலகப்போர் நிறைவடைந்ததற்கு பின், சர்வதேச சமூகத்திடம் நிலைத்தன்மை மற்றும் அமைதியை நிலைநாட்டுவதில் ஜப்பான் முக்கிய பங்காற்றி வருகிறது.
  • மொத்தமுள்ள 163 நாடுகளில், 84 நாடுகளில் அமைதியை முன்பை விட சீர்குலைந்துள்ளது. 77 நாடுகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 2 நாடுகள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்கின்றன. இந்த பட்டியலில் இந்தியா 135வது இடத்தை பிடித்துள்ளது.
  • 2020ல் 138வது இடத்தை பெற்றிருந்தது. தற்போது 3 இடங்கள் முன்னேறியுள்ளது. தெற்காசியா அளவிலான நாடுகள் பட்டியலில் 5வது இடத்தை பிடித்துள்ளது. 
  • நம் அண்டை நாடான பாகிஸ்தான் 147வது இடத்தை பிடித்துள்ளது. கடந்தாண்டு ஒப்பிடுகையில் ஒரு இடம் முன்னேறியுள்ளது.
ENGLISH
  • The Institute for Economics and Peace publishes a list of the world's most peaceful countries each year. The list is based on 28 criteria, including domestic violence, refugees, terrorism and political instability in 163 countries around the world.
  • Of these, peace has declined over the past 14 years, with the country's average score dropping 3.2 percent. Iceland continues to top the list of the most peaceful countries in the world for the 14th year in a row with a score of 1.107.
  • New Zealand is in 2nd place with 1.269 points. Ireland is in 3rd place with a score of 1.288. With a score of 1.296, Denmark is in 4th place in the fight against terrorism and helps maintain peace in other countries. With a score of 1.3, Austria is in 5th place.
  • Austria, which was ranked 7th last year, has moved up 2 places. Portugal is in 6th place with a score of 1.301. Slovenia is in 7th place with a score of 1.301. 3 places behind last year. Despite the hospitality, the quality of life of the people here is excellent.
  • The Czech Republic is the 8th safest country in the world for terrorism and crime. Singapore ranks 9th in terms of transparent legal system and police structure. Naturally, Japan, a peace-loving country, ranks 10th. Since the end of World War II, Japan has been playing a key role in establishing stability and peace with the international community.
  • Out of a total of 163 countries, peace in 84 countries has been disrupted more than ever. Progress has been made in 77 countries. 2 countries continue unchanged. India is ranked 135th in the list.
  • It was ranked 138th in 2020. Currently 3 places advanced. It ranks 5th in the list of countries in South Asia. Our neighbor Pakistan is ranked 147th. One place ahead compared to last year.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel