உலக ஆஸ்துமா தினம் 2024 / WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY
TNPSCSHOUTERSMay 06, 2024
0
உலக ஆஸ்துமா தினம் 2024 / WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY: நீண்டகால ஒவ்வாமையினால் நுரையீரல் மற்றும் சுவாசக் குழாய்களில் ஏற்படும் மாற்றங்களின் விளைவாக ஏற்படும் இளைப்பு நோயே ஆஸ்துமா எனப்படுகிறது.
அதிகப்படியான மூச்சுத் திணறல் அல்லது இளைப்பு, அதிகப்படியான இருமலால் ஏற்படும் தூக்கமின்மை, நெஞ்சில் ஏற்படும் வலி, இறுக்கம் ஆகியவற்றை ஆஸ்துமாவின் அறிகுறிகளாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
உலக சுகாதார அமைப்பின் 2019ஆம் ஆண்டு அறிக்கையின்படி, உலகளவில் சுமார் 262 மில்லியன் ஆஸ்துமா நோயாளிகள் உள்ளனர். அந்த ஆண்டு மட்டும் 4.60 லட்சம் இறப்புகள் ஏற்பட்டதாக கணக்கிடப்பட்டது.
இது 2016ஆம் ஆண்டு ஆய்வை விட அதிகமானதாகும் (235 மில்லியன் ). இதில், சுமார் 15-20 மில்லியன் நோயாளிகள் இந்தியாவில் உள்ளனர்.
இந்தியாவில் சுமார் 15 முதல் 49 வயது வரை உள்ள பெண்களில் சுமார் 2 சதவீதம் பேரும் 12 முதல் 19 வயது வரை உள்ள பெண்கள் ஒரு சதவீதத்தினரும் 15-49 வயது வரை உள்ள ஆண்களில் ஒரு சதவீதத்தினரும் பாதிக்கபட்டதாகவும் தெரிய வந்துள்ளது.
குழந்தைகளுக்கு 4 % - 20 % வரை ஆஸ்துமா தாக்கம் காணப்படுவதாகவும் உலக சுகாதார அமைப்பின் (WHO) ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்துமா இறப்புகள் பொருளாதார வளர்ச்சி குறைந்த மற்றும் நடுத்தர பொருளாதார வளர்ச்சி நாடுகளிலேயே அதிகமாக காணப்படுகிறது.
உலக ஆஸ்துமா தினம் ஏன்?
உலக ஆஸ்துமா தினம் 2024 / WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY: ஆஸ்துமா நோயை தடுத்தல், சிகிச்சை மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஆஸ்துமாவிற்கான உலகளாவிய அமைப்பு (The Global Inititive for Asthma - GINA) கடந்த 1993ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது.
இது, அமெரிக்காவின் தேசிய இதயம், நுரையீரல் மற்றும் ரத்த நிறுவனம், தேசிய சுகாதார நிறுவனம், மற்றும் உலக சுகாதார அமைப்பு ஆகியவற்றுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.
ஆஸ்துமா பாதிப்பு மற்றும் இறப்பு ஆகியவற்றைக் குறைக்க உலகம் முழுவதும் உள்ள மருத்துவ நிபுணர்கள், பொது சுகாதாரத்துறை அதிகாரிகளை ஒருங்கிணைத்து பணியாற்றி வருகின்றனர்.
ஜினா அமைப்பு தொடங்கி, முதல் சந்திப்பு மே மாதம் முதல் செவ்வாய் கிழமை நடைபெற்றதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் முதல் செவ்வாய்க் கிழமை உலக ஆஸ்துமா தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
உலக ஆஸ்துமா தினம் 2024 தீம்
உலக ஆஸ்துமா தினம் 2024 / WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY: உலக ஆஸ்துமா தினம் 2024 தீம் "ஆஸ்துமா கல்வி அதிகாரமளிக்கிறது".
இந்த தீம் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்களின் நோயை எவ்வாறு நிர்வகிப்பது மற்றும் எப்போது மருத்துவ உதவியை நாடுவது என்பது பற்றிய கல்வியின் அவசியத்தை வலியுறுத்துகிறது.
ஆஸ்துமாவுக்கான உலகளாவிய முன்முயற்சியானது உலகளாவிய இறப்பு மற்றும் நோயுற்ற விகிதங்களைக் கட்டுப்படுத்தும் விரிவான ஆஸ்துமா மேலாண்மை திட்டங்களை உருவாக்குவதற்கும் மேம்படுத்துவதற்கும் அனைத்து வள நாடுகளையும் ஊக்குவிக்க முயற்சிக்கிறது.
மையக் கருத்து 2022
உலக ஆஸ்துமா தினம் 2024 / WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY: இதன்படி, ஆஸ்துமா ஒழிப்பு மற்றும் விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஒரு மையக் கருத்தை அறிவித்து வருகிறார்கள்.
இதன்படி, உலக ஆஸ்துமா தினம் 2022ம் ஆண்டிற்கு "ஆஸ்துமாவிற்கான சிகிச்சையில் இடைவெளியை நீக்குதல்'' என்கிற மையக் கருத்தை வெளியிட்டுள்ளது.
உலக ஆஸ்துமா தின தீம் 2023
உலக ஆஸ்துமா தினம் 2024 / WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY: 2023 ஆம் ஆண்டிற்கான, உலக ஆஸ்துமா தினத்திற்கான கருப்பொருளாக "அனைவருக்கும் ஆஸ்துமா பராமரிப்பு" என்பதை GINA தேர்ந்தெடுத்துள்ளது.
புவியியல் இருப்பிடம், சமூகப் பொருளாதார நிலை அல்லது பிற காரணிகளைப் பொருட்படுத்தாமல், ஆஸ்துமா உள்ள ஒவ்வொருவருக்கும் பயனுள்ள மற்றும் மலிவான ஆஸ்துமா சிகிச்சைக்கான அணுகல் இருப்பதை உறுதிசெய்வதன் முக்கியத்துவத்தை இந்தத் தீம் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
இந்த கருப்பொருளின் குறிக்கோள், ஆஸ்துமா பராமரிப்பு மற்றும் நிர்வாகத்தில் சமத்துவத்தை மேம்படுத்துவது மற்றும் உலகளாவிய தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்கள் மீது ஆஸ்துமாவின் சுமையை குறைப்பது ஆகும்.
ENGLISH
WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY:Asthma is a debilitating disease caused by changes in the lungs and airways caused by chronic allergies. Symptoms of asthma include excessive shortness of breath or restlessness, insomnia caused by excessive coughing, chest pain, and tightness.
According to the World Health Organization's 2019 report, there are approximately 262 million asthma patients worldwide. That year alone there were an estimated 4.60 lakh deaths.
This is higher than the 2016 survey (235 million). Of these, about 15-20 million patients are in India.
In India, it affects about 2% of women between the ages of 15 and 49, 1% of women between the ages of 12 and 19 and 1% of men between the ages of 15-49.
Studies by the World Health Organization (WHO) also show that children are 4% to 20% more likely to develop asthma. Asthma deaths are highest in economically low- and middle-income countries.
Why World Asthma Day?
WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY:The Global Initiative for Asthma (GINA) was established in 1993 to prevent, treat and raise awareness of asthma. It works with the National Heart of America, the Lung and Blood Institute, the National Institutes of Health, and the World Health Organization.
Medical professionals around the world are working with public health officials to reduce the risk of asthma and death. World Asthma Day is observed on the first Tuesday in May every year, since the first meeting of the Gina Organization was held on the first Tuesday in May.
World Asthma Day 2024 Theme
WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY:World Asthma Day 2024 Theme is "Asthma Education Empowers".
This theme emphasizes the need of educating people with asthma on how to manage their disease and when to seek medical attention.
The Global Initiative for Asthma strives to encourage all resource countries to develop and promote comprehensive asthma management programmes that curb global mortality and morbidity rates.
World Asthma Day Theme 2022
WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY:Accordingly, they have been announcing a central concept each year based on asthma eradication and awareness. Accordingly, the World Asthma Day 2022 has published the central concept of "eliminating the gap in the treatment of asthma".
World Asthma Day Theme 2023
WORLD ASTHMA DAY 2024 - 1ST TUESDAY:For 2023, GINA has selected "Asthma Care for All" as the theme for World Asthma Day. This theme underscores the importance of ensuring that everyone with asthma, regardless of their geographic location, socioeconomic status, or other factors, has access to effective and affordable asthma care.
The goal of this theme is to promote equity in asthma care and management and reduce the burden of asthma on individuals, families, and communities worldwide.