
5th MAY 2025 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
5 எழுத்தாளர்களின் நூல்கள் நாட்டுடைமை மற்றும் நூலுரிமைத் தொகையை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
- பாவேந்தர் பாரதிதாசனின் பிறந்த நாள், தமிழக அரசு சார்பில் 'தமிழ் வார விழா'வாகக் கொண்டாடப்பட்டது. அதன் நிறைவு விழா நிகழ்ச்சி இன்று(திங்கள்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது.
- இந்த விழாவில் மறைந்த எழுத்தாளர்கள் கவிக்கோ அப்துல் ரகுமான், மெர்வின், ஆ. பழநி மற்றும் கொ.மா.கோதண்டம், புலவர் இலமா. தமிழ்நாவன் ஆகிய 5 சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டு அதற்கான நூலுரிமைத் தொகையாக தலா 10 லட்சம் ரூபாய்க்கான காசோலைகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.