Type Here to Get Search Results !

TNPSC GROUP 2 & 2A EXAMINATION QUESTION PAPER ANALYSIS 2022

  • தமிழக அரசின் பல்வேறு துறைகளில் குரூப் 2, குரூப் 2ஏ அந்தஸ்தில் காலியாக உள்ள 5,529 பதவிகளுக்கான போட்டித்தேர்வு, சனிக்கிழமை (மே 21- ஆம் தேதி) நடந்தது. மாநிலம் முழுவதும், 4,012 மையங்களில் இத்தேர்வு நடந்தது. 11 லட்சத்திற்கும் மேற்பட்டோர் எழுதினர்.
  • இத்தேர்வுக்கான அறிவிப்பை, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) கடந்த பிப். 23- ஆம் தேதி வெளியிட்டது. மார்ச் 23- ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன. 
  • இதுவரை இல்லாத வகையில் 11.78 லட்சத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பித்து இருந்தனர். ஆண்களை விட பெண்கள் 1.85 லட்சம் பேர் கூடுதலாக விண்ணப்பித்து இருந்தனர்.
  • பொது அறிவு, பொதுத்தமிழ் என இரண்டு பகுதியாக பிரித்து, ஒவ்வொரு பிரிவிலும் தலா 100 வினாக்கள் வீதம் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்பட்டு இருந்தன. ஒவ்வொரு வினாவுக்கும் தலா 1.5 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடந்தது.
  • பொதுத்தமிழ் பாடப்பகுதியில் இருந்து கேட்கப்பட்ட வினாக்கள் மிகவும் எளிமையாக இருந்தன. போட்டித் தேர்வுக்கு நன்கு தயாராகி வந்தவர்களால் பொதுத்தமிழில் நிச்சயம் 90 வினாக்களுக்கு மேல் சரியான விடை அளிக்க முடியும். 
  • அதேநேரம், பொது அறிவு பாடப்பகுதியில் கணித பகுதியில் கேட்கப்பட்ட 25 வினாக்களில் கிட்டத்தட்ட 22 வினாக்கள் மிக எளிமையாக இருந்தன.
  • வரலாற்றுப் பகுதியில் இந்தமுறை தென்னிந்திய வரலாற்றுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படவில்லை. 'கரண்ட் அஃபையர்ஸ்' பிரிவில், பொருளாதாரம் சார்ந்த வினாக்கள், பொது அறிவியல் வினாக்கள் கொஞ்சம் கடினமாக இருந்தன. 
  • கரோனா காலக்கட்டத்தில் பொருளாதார வளர்ச்சி சார்ந்த வினாக்கள் கேட்கப்பட்டிருந்தன. உதாரணமாக, 'கோவிட் -19 காரணமாக ஏற்பட்ட சூழ்நிலையில், மாநிலங்களின் நிகர கடன் உச்சவரம்பு 2021- ல் மாநில உள்நாட்டு உற்பத்தியில் எத்தனை சதவீதம் வரை மேம்படுத்தப்பட்டது?' என்ற வினா கேட்கப்பட்டு இருந்தது.
  • அதேபோல, '2022-23 நிதிநிலை அறிக்கையில் தோராய மதிப்பில் பற்றுச்சீட்டு தொகையை இறங்கு வரிசையில் எழுதும்படி,' கேட்டிருந்தனர். இதுபோன்ற வினாக்கள், போட்டித்தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இனி, நிதிநிலை அறிக்கையை பற்றியும் விரல் நுனியில் தெரிந்து வைத்திருப்பது அவசியம் என்று புரிய வைத்துள்ளது.
  • முன்னாள் நீதிபதி முருகேசன் தலைமையிலான குழு எதற்காக அமைக்கப்பட்டது என்ற ஒரு வினாவும் சமீபத்திய நிகழ்வுகளில் இருந்து கேட்கப்பட்டு இருந்தது. 
  • விளையாட்டுத்துறைக்கு இந்தமுறை அவ்வளவாக முக்கியத்துவம் தரப்படவில்லை. பொது அறிவு பிரிவில் உள்ள வினாக்கள் அனைத்தும் டி.என்.பி.எஸ்.சி குறிப்பிட்டுள்ள பாடப்பகுதிகளில் இருந்துதான் கேட்கப்பட்டு இருந்தன. 
  • என்றாலும், கணிதம் தவிர பிற பகுதிகளில் கேட்கப்பட்ட வினாக்களில் சில பட்டப்படிப்பு பாடப்பகுதியில் இருந்தும் கேட்கப்பட்டு இருந்தன.

TNPSC GROUP 2/2A EXAM ANALYSIS

S.No

Topic

2022

GR 2

2018

GR 2

2018

GR 2A

2016

2014

1

History / Indian National Movement

13

15

11

16

16

2

Economics

6

14

9

9

6

3

Polity

13

11

9

8

3

4

Geography

4

6

3

6

8

5

Physics

3

5

4

4

4

6

Chemistry

3

3

6

3

3

7

Botany

2

3

2

2

3

8

Zoology

2

3

4

6

6

9

General Knowledge

-

3

3

3

6

10

Aptitude

25

25

25

25

25

11

Unit 8 – Tamil Culture

15

-

-

-

-

12

Unit 9 – Development Administration of Tamilnadu

4

-

-

-

-

13

Current Affairs

10

12

24

18

10

14

Tamil / English

100

100

100

100

100

TOTAL NO OF QUESTIONS  = 200

TOTAL NO OF MARKS = 300





Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel