கேன்ஸ் சா்வதேச திரைப்பட விழாவில் இந்திய ஆவணப்படத்துக்கு விருது
- பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்ற 75-ஆவது சா்வதேச திரைப்பட விழாவில், இந்திய இயக்குநா் ஷெளனக் சென் இயக்கிய 'ஆல் தேட் பிரீத்ஸ்' ஆவணப்படத்துக்கு தங்கக் கண் விருது சனிக்கிழமை வழங்கப்பட்டது.
- தில்லியை சோந்த நதீம், சவூத் ஆகிய இரு சகோதரா்கள் புலம்பெயா்ந்து வரும் பருந்து உள்ளிட்ட பறவைகளை காற்று மாசுபாட்டிலிருந்து பாதுகாப்பதை கருவாகக் கொண்டது இந்தப் படம்.
- கேன்ஸ் விழாவில் கடந்த 2 ஆண்டுகளில் இது இந்தியாவுக்கான இரண்டாவது விருதாகும். கடந்த ஆண்டில் பாயல் கபாடியாவின் 'ஏ நைட் ஆஃப் நோயிங் நத்திங்' என்ற ஆவணப்படத்துக்கு இதே விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது.
- இதுதவிர லிதுவேனிய இயக்குநா் மந்தாஸ் குவேதரவிசியஸுக்கு 'மரியுபோலிஸ் 2' ஆவணப்படத்துக்காக சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது. அண்மையில் உக்ரைன்-ரஷியா போரில் அவா் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணை - ரஷ்யா வெற்றிகரமாக சோதனை
- 1,000 கி.மீ. அப்பால் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட சிர்கான் ஹைபர்சோனிக் ஏவுகணையை இன்று ரஷ்யா வெற்றிகரமாக பரிசோதனை செய்தது.
- ஒலியை விட 9 மடங்கு வேகத்தில் செல்லக் கூடிய சிர்கான் ஹைப்பர்சோனிக் ஏவுகணை ரஷ்ய போர்க்கப்பல் அட்மிரல் கோர்ஷ்கோவ், பேரண்ட்ஸ் கடலில் இருந்து மே 28 ஏவப்பட்டு இலக்கை துல்லியமாக தாக்கி அழித்ததாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சென்னையில் கருணாநிதி சிலை - வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்
- சென்னை, அண்ணாசாலை, ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், 1.70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டு உள்ள கருணாநிதி உருவ வெண்கல சிலையை, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு திறந்து வைத்தார்.
- 12 அடி உயரம் மறைந்த தி.மு.க., தலைவரும், முன்னாள் முதல்வருமான கருணாநிதிக்கு, தமிழக அரசு சார்பில், சென்னை அண்ணா சாலையில், ஓமந்துாரார் அரசினர் தோட்டத்தில், அரசு பன்னோக்கு உயர் சிகிச்சை மருத்துவமனை வளாகத்தில், இரண்டு கிரவுண்ட் நிலத்தில், கருணாநிதிக்கு 16 அடி உயரத்தில் சிலை அமைக்கப்பட்டு உள்ளது.
குஜராத்தில் உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி
- குஜராத் காந்திநகர் கலோலில் அமைக்கப்பட்டுள்ள உலகின் முதல் நானோ யூரியா தொழிற்சாலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.
- ஆலையில் ஒரு பை சிறுமணி யூரியாவிற்கு சமமாக 500 மி.லி. பாட்டிலில் நானோ யூரியா தயாரிக்கப்படுகிறது. நானோ யூரியா தொழிற்சாலை மூலம் போக்குவரத்து செலவுகள் குறைக்கப்படும், சிறு விவசாயிகள் பயன்பெறுவர் என பிரதமர் தெரிவித்தார்.
- நாட்டில் உள்ள அனைத்து கிராமப்புற வீடுகளுக்கும், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்குவதென்ற பிரதமர் திரு.நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையை மனதிற்கொண்டு, கிராமப்புறங்களில் உள்ள 50% வீடுகளுக்கு குழாய்வழி குடிநீர் இணைப்பை வழங்கி நாடு சாதனை படைத்துள்ளது.
- கோவா, தெலங்கானா, அந்தமான் & நிக்கோபார் தீவுகள், தாத்ரா & நாகர் ஹவேலி மற்றும் டாமன் & டையூ, புதுச்சேரி மற்றும் ஹரியானா -வில் வீடுகளுக்கு ஏற்கனவே 100% குடிநீர் இணைப்பு வழங்கி சாதனை படைக்கப்பட்டுள்ளது.
- பஞ்சாப், குஜராத், ஹிமாச்சலபிரதேசம் மற்றும் பீகார் மாநிலங்கள் 90%-க்கும் மேல் பணிகளை முடித்து, ‘அனைத்து வீடுகளுக்கும் குடிநீர்‘ இணைப்பு என்ற நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன.
- மகாத்மா காந்தியின் ‘கிராம சுயராஜ்யம்‘ என்ற கனவை நனவாக்கும் விதமாக, பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளுக்கு அதிகாரமளித்து, குடிநீர் வினியோகத் திட்டங்களில் சமுதாயத்தை ஈடுபடுத்துவதே ஜல் ஜீவன் இயக்கத்தின் நோக்கம்.
- பல்வேறு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள 9.59 கோடிக்கும் மேற்பட்ட கிராமப்புற வீடுகளுக்கு, குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- இந்த வீடுகளில் வசிக்கும் பெண்களும், சிறுமிகளும், சுட்டெரிக்கும் வெயில், மழை, உறைபனிக்கிடையேயும், தண்ணீர் தேடி நீண்டதொலைவுக்கு நடந்து செல்லும் அவலத்திலிருந்து விடுபட்டுள்ளனர்.
- மத்திய அரசின் முன்னோடித் திட்டமான அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் வழங்கும் ஜல் ஜீவன் திட்டத்தை, ஜல் சக்தி அமைச்சகம், மாநிலங்கள் /யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து, 2024-ம் ஆண்டுக்குள் கிராமப்புறங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் குழாய்வழி குடிநீர் இணைப்பு வழங்குவதை உறுதி செய்யும்.
- 2019-ம் ஆண்டு ஜல் ஜீவன் இயக்கம் தொடங்கப்பட்டபோது, 3.23 வீடுகள், அதாவது 17% கிராமப்புற மக்கள் தான், குழாய்வழி குடிநீர் வசதியைப் பெற்றிருந்தனர்.
- ஆனால், 27.05.2022 நிலவரப்படி, 108 மாவட்டங்களில், 1,222 வட்டாரங்களில், 71,667 கிராமப் பஞ்சாயத்துகள் மற்றும் 1,51,171 கிராமங்கள் குழாய்வழி குடிநீர் இணைப்பைப் பெற்றுள்ளன. இந்தக் கிராமங்களில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், குழாய் வழி குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.