இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீக்கு புக்கர் பரிசு
- இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி ஸ்ரீ (64), கடந்த 2018-ம் ஆண்டு 'ரெட் சமாதி' (Ret samadhi) என்ற நாவலை எழுதினார். இந்த நாவலை ஆங்கிலத்தில் 'டோம்ப் ஆப் சேண்ட்' என்ற தலைப்பில் டெய்சி ராக்வெல் என்பவர் மொழி பெயர்த்திருந்தார்.
- கடந்த 2021-ம் ஆண்டு அந்த மொழிபெயர்ப்பு நாவல் இந்தாண்டுக்கான புக்கர் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்திய மொழிகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாவல் என்ற பெருமையும் இதற்கு கிடைத்துள்ளது.
- இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின் போது ஒரு குடும்பத்தில் நடைபெற்ற கதைதான் 'ரெட் சமாதி' நாவல். கணவன் இறந்த பிறகு வாழும் 80 வயதான ஒரு பெண்ணை மையப்படுத்தி இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.
- நடப்பு 2022-ம் ஆண்டு புக்கர் பரிசுக்காக மொத்தம் 135 புத்தகங்கள் பரிசீலிக்கப்பட்டன. அவற்றில் கடைசியாக 6 புத்தகங்கள் தேர்வு செய்யப்பட்டன. அவற்றில் 'டோம்ப் ஆப் சேண்ட்'நாவலுக்கு புக்கர் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய ட்ரோன் திருவிழாவை தொடக்கி வைத்த பிரதமர் மோடி
- இந்தியாவின் மிகப்பெரிய டிரோன் திருவிழாவான 'பாரத் டிரோன் மஹோத்சவ் 2022' இரண்டு நாட்கள் டெல்லியில் நடைபெறுகிறது.
- இந்த டிரோன் திருவிழாவை டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். டிரோன்கள் பற்றிய செயல் விளக்கங்களையும் அவர் பார்வையிட்டார்.
- தொடர்ந்து விவசாயத்திற்கு உதவும் டிரோன் விமானிகளுடனும் ஸ்டார்ட்அப் நிறுவன அதிகாரிகளுடனும் பிரதமர் கலந்துரையாடினார்.
இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் - கேரளா அணி சாம்பியன் பெண்கள்
- இந்தியாவில் பெண்களுக்கான கால்பந்து லீக் தொடர் நடந்தது. மொத்தம் 12 அணிகள் பங்கேற்றன. ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோதின.
- 10 போட்டிகள் முடிவில் கோகுலம் கேரளா, மதுரையின் சேது அணிகள் தலா 10 வெற்றியுடன் 30 புள்ளிகள் பெற்று 'டாப்-2' இடத்தில் இருந்தன.
- இரு அணிகள் மோதிய கடைசி போட்டி புவனேஸ்வரில் (ஒடிசா) உள்ள கலிங்கா மைதானத்தில் நடந்தது.
- முடிவில் கேரள அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதையடுத்து 33 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்து, தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன் கோப்பையை தட்டிச் சென்றது.
- தவிர பெண்களுக்கான ஆசிய கிளப் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கவும் தகுதி பெற்றது கேரளா.
செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் - பிரக்ஞானந்தாவுக்கு 2ஆம் இடம்
- செஸ்ஸபிள் மாஸ்டா்ஸ் ஆன்லைன் செஸ் போட்டியில் இந்தியாவின் இளம் கிராண்ட்மாஸ்டரான ஆா்.பிரக்ஞானந்தா இறுதிச்சுற்றில் உலகின் 2-ஆம் நிலை வீரரும், சீனருமான டிங் லிரெனை (29) எதிா்கொண்டாா்.
- இந்திய நேரப்படி புதன்கிழமை நள்ளிரவு நடைபெற்ற முதல் செட்டை பிரக்ஞானந்தா 1.5 - 2.5 என்ற கணக்கில் இழந்தாா்.
- எனினும், வியாழக்கிழமை நள்ளிரவு நடைபெற்ற 2-ஆவது செட்டில் 2.5 - 1.5 என்ற கணக்கில் வென்றாா். இதனால் வெற்றியாளரை தீா்மானிக்க 2 கேம் பிளிட்ஸ் 'டை-பிரேக்கா்' முறை கையாளப்பட்டது.
- அதில் முதல் கேம் சமனில் முடிய, 2-ஆவது கேமில் டிங் லிரென் 49 நகா்வுகளில் வெற்றியைப் பதிவு செய்து சாம்பியன் ஆனாா்.
குறு & சிறு தொழில் நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு ஒப்புதல்
- 15-வது நிதிக்குழு காலத்தில் (2021-22 முதல் 2025-26 வரை) அமல்படுத்தப்பட்ட குறு & சிறு தொழில் நிறுவனங்கள் தொகுப்பு மேம்பாட்டுத் திட்டத்திற்கான புதிய வழிகாட்டு நெறிமுறைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- கீழ்காணும் நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் குறு & சிறு தொழில் நிறுவனங்களின் போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிப்பதே இத்திட்டத்தின் நோக்கம்:
- ரூ.5 கோடி முதல் ரூ. 10 கோடி வரையிலான திட்டச்செலவில் மத்திய அரசு மான்யம் 70 சதவீதமாகவும், ரூ.10 கோடி முதல் ரூ. 30 கோடி வரையிலான திட்டச்செலவில் 60 சதவீதமாகவும் வரையறுக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மற்றும் மலைப்பகுதி மாநிலங்கள், தீவுப்பிரதேசங்கள், முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்களுக்கான மானியத்தொகை ரூ. 5கோடி முதல் ரூ. 10 கோடிவரையிலான திட்டச்செலவில் 80 சதவீத அளவுக்கும், ரூ.10 கோடி முதல் ரூ.30 கோடி வரையிலான திட்டச்செலவில் 70 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- புதிய தொழில் பேட்டைகள் / அடுக்குமாடி தொழில் வளாகங்களை அமைப்பதற்கும் மான்ய தொகையை அரசு நிர்ணயித்துள்ளது.