Type Here to Get Search Results !

TNPSC 14th MAY 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு

  • திரிபுரா மாநிலத்தின் புதிய முதலமைச்சராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார். திரிபுராவில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் திடீரென பிப்லப் தேவ் ராஜினாமா செய்துள்ளார்.
  • தேர்தலையொட்டி கட்சிப்பணிகளில் ஈடுபடுவதற்காக பதவி விலகியதாக பிப்லப் கூறியுள்ளார். இதைத்தொடர்ந்து நடைபெற்ற பாரதிய ஜனதா சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் சட்டமன்ற கட்சித்தலைவராக மாணிக் சாஹா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்னதாக திரிபுராவில் முதலமைச்சர் மாற்றம் நிகழ்ந்துள்ளது. திரிபுரா பாஜக எம்எல்ஏக்கள் பலர் பிப்லபுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருந்த நிலையில் இம்மாற்றத்தை கட்சித் தலைமை செய்துள்ளது. பல் மருத்துவரான மாணிக் சாஹா கடந்த மாதம்தான் மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

சென்னையில் சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி

  • சென்னை நுங்கம்பாக்கத்தில் செப்.26 முதல் அக்.2-ம் தேதி வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடக்க உள்ளது. இதற்கான தமிழக அரசின் கொள்கை அளவிலான இசைவு கடிதத்தை தமிழ்நாடு டென்னிஸ் சங்கத் தலைவர் விஜய் அமிர்தராஜிடம் முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
  • இந்த நிகழ்ச்சியில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன், தலைமைச் செயலர் இறையன்பு, இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை செயலர் அபூர்வா, தமிழக விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் இரா.ஆனந்தகுமார், சதுரங்கப் போட்டிக்கான சிறப்பு அலுவலர் டாக்டர் தாரேஸ் அஹமது, அகில இந்திய சதுரங்க கூட்டமைப்பின் தலைவர் சஞ்சய் கபூர், செயலர் பரத் சிங் சவுகான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது நியமனம்

  • மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக இருந்த ஷேக் கலிபா பின் சயீத், 73, உடல் நலக்குறைவால் நேற்று முன்தினம் காலமானார்.
  • இதையடுத்து, எமிரேட்சின் ஆட்சிக் குழு கூட்டம், அபுதாபி அரண்மனையில் நேற்று நடந்தது. இதில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபராக ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான், 61, தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டார். இவர் அபுதாபியின் மன்னராகவும் பொறுப்பேற்றார்.

செஸ் ஒலிம்பியாட் - முதல்வர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து

  • தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு அரசு மற்றும் அகில இந்திய சதுரங்க கூட்டமைப்புக்கு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • இந்திய வரலாற்றில் முதன் முறையாக தமிழ்நாட்டில் 44-வது செஸ் ஒலிம்பியாட் - 2022 போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டியானது மாமல்லபுரத்தில் 28.7.2022 முதல் 10.8.2022 வரை நடைபெறவுள்ளது.
  • இப்போட்டியில் சர்வதேச அளவில் 186 நாடுகளைச் சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட சதுரங்க விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். 
  • சரித்திர புகழ் வாய்ந்த மாமல்லபுரத்தில் நடைபெறவுள்ள இப்போட்டிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய சதுரங்க கூட்டமைப்பினரிடையே கையெழுத்தானது.
மையப்படுத்தப்பட்ட வழி உரிமை அனுமதிகளுக்கான “விரைவு சக்தி சஞ்சார்” தளத்தை தொலைத்தொடர்புத் துறை தொடங்கியுள்ளது
  • நாடு முழுவதும், குறிப்பாக கிராமப்புறங்களில் அகண்ட அலைவரிசை சேவைகளுக்கான உலகளாவிய மற்றும் சமமான அணுகல், பிரதமர் திரு நரேந்திர மோடியின் மிக முக்கியமான தொலைநோக்கு பார்வைகளில் ஒன்றாகும். 
  • பிரதமரின் விரைவு சக்தி தேசிய பெருந்திட்டத்திற்கு இணங்க, மத்திய தகவல் தொடர்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ரயில்வே துறை அமைச்சர் திரு அஷ்வினி வைஷ்ணவ் மையப்படுத்தப்பட்ட வழி உரிமை அனுமதிகளுக்கான (www.sugamsanchar.gov.in) “விரைவு சக்தி சஞ்சார்” வலைதளத்தைத் தொடங்கியுள்ளார்.

மிஷன் சாகர் IX- செஷல்சில் ஐஎன்எஸ் கரியால்
  • மிஷன் சாகர் IX இன் கீழ், தென்மேற்கு இந்தியப் பெருங்கடலில் இந்தியக் கடற்படைக் கப்பலான கரியாலை அனுப்புவதன் ஒரு பகுதியாக, அந்தக் கப்பல் மே 11 முதல் 14 வரை செஷல்ஸின் போர்ட் விக்டோரியாவுக்குச் சென்றிருக்கிறது.
  • முன்னதாக செஷெல்ஸ் அரசாங்கத்திடம் இருந்து பெறப்பட்ட முன்மொழிவைத் தொடர்ந்து, மூன்று சம்பிரதாய வணக்கத் துப்பாக்கிகள், வெடிமருந்துகளுடன், கப்பல் மூலம் செஷெல்ஸ் பாதுகாப்புப் படைகளுக்கு வழங்கப்பட்டது. 
  • மே 13  அன்று ஐஎன்எஸ் கரியால் கப்பலில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில்,  பாதுகாப்புத் தலைவர்  பிரிகேடியர் மைக்கேல் ரோசெட்டிடம், செஷெல்ஸுக்கான இந்திய தூதர் ஜெனரல் தல்பீர் சிங் சுஹாக் இவற்றை முறைப்படி வழங்கினார்.
  • செஷெல்ஸில் கப்பல் தங்கியிருந்த காலத்தில், இந்தியக் கடற்படை செஷெல்ஸ் பணியாளர்களுக்கு குறிப்பிட்ட கடல்சார் துறைகளில் பயிற்சி அளித்தது. 
  • இந்தியக் கடற்படைத் தளபதி அட்மிரல் ஆர் ஹரி குமார், ஏப்ரல் 21 முதல் 23 வரை  செஷல்சில் மேற்கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தையொட்டி, ஸுக்குச் சென்ற உத்தியோகபூர்வ விஜயத்தை ஒட்டி, ஐஎன்எஸ் கரியால் கப்பல் அங்கு சென்றுள்ளது. 
  • போர்ட் விக்டோரியாவை அடைவதற்கு முன், கப்பல் இலங்கையின் கொழும்பு,  மற்றும் மாலே, மாலத்தீவுகளுக்கு அத்தியாவசிய மருத்துவப் பொருட்களை வழங்குவதற்காகச் சென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel