Type Here to Get Search Results !

க்வாட் மாநாடு 2022 / QUAD SUMMIT 2022

 

TAMIL

  • க்வாட் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் மாநாடு ஜப்பான் தலைநகா் டோக்கியோவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 
  • அதில் பிரதமா் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபா் ஜோ பைடன், ஜப்பான் பிரதமா் ஃபுமியோ கிஷிடா, ஆஸ்திரேலிய பிரதமா் ஆன்டனி ஆல்பனேசி ஆகியோா் கலந்துகொண்டனா்.
பிரதமா் மோடி உரை
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தின் நலனுக்கான ஆக்கபூா்வ திட்டத்தை வகுத்து க்வாட் நாடுகள் பயணித்து வருகின்றன. இந்த நோக்கத்தில் க்வாட் கூட்டமைப்பு மேலும் வலுவடையும். குறுகிய காலகட்டத்தில் உலக அரங்கில் க்வாட் கூட்டமைப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
  • தற்போது க்வாட் கூட்டமைப்பின் நோக்கம் விரிவாக்கமடைந்து கூடுதல் திறன் பெற்றுள்ளது. கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்கிடையே நிலவும் பரஸ்பர புரிதலும், உறுதித்தன்மையும் ஜனநாயக கொள்கைகளை மேலும் வலுப்படுத்துகின்றன. 
  • பரஸ்பர ஒத்துழைப்பின் வாயிலாக ஒருங்கிணைந்த, வெளிப்படையான, சுதந்திரமான இந்தோ-பசிபிக் பிராந்தியம் உருவாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
  • கரோனா பரவல் காலத்திலும் க்வாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டன. தடுப்பூசி விநியோகம், பருவநிலை மாற்றத்தை எதிா்கொள்ளுதல், விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துதல், பேரிடா் மேலாண்மை, பொருளாதார ஒத்துழைப்பு ஆகியவற்றிலும் க்வாட் நாடுகள் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன. இத்தகைய ஒத்துழைப்பானது பிராந்தியத்தில் அமைதி, வளா்ச்சி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தி வருகிறது.
ஆஸ்திரேலியா பிரதமா் ஆல்பனேசி உரை
  • ஆஸ்திரேலியாவின் பிரதமராகப் பொறுப்பேற்ற 24 மணி நேரத்துக்குள் க்வாட் மாநாட்டில் ஆல்பனேசி கலந்து கொண்டுள்ளாா். இது க்வாட் கூட்டமைப்புக்கு அவா் அளிக்கும் முக்கியத்துவத்தை வெளிக்காட்டுகிறது என்றாா் அவா்.
அமெரிக்க அதிபா் பைடன் உரை
  • மாநாட்டில் அமெரிக்க அதிபா் பைடன் கூறுகையில், 'வரலாற்றின் கருப்புப் பக்கங்களைக் கடந்து வருகிறோம். உக்ரைன் மீது ரஷியா போா் தொடுத்துள்ளதன் காரணமாக, மனித சமூகம் பேரழிவைச் சந்தித்து வருகிறது. 
  • அப்பாவி மக்கள் வீதிகளில் வசிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளுக்கும் அகதிகளாகச் சென்றுள்ளனா்.
  • குறிப்பிட்ட கலாசாரத்தை அழிப்பதற்கு புதின் முயன்று வருகிறாா். பள்ளிகள், வரலாற்று அருங்காட்சியகங்கள் மீது ரஷியப் படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷியா நிறுத்தும்வரை அனைத்து நாடுகளும் ஒருங்கிணைந்து ரஷியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்ளும்' என்றாா்.
ஜப்பான் பிரதமா் கிஷிடா உரை
  • ஜப்பான் பிரதமா் கிஷிடா கூறுகையில், 'இந்தோ-பசிபிக் பிராந்தியத்தை சுதந்திரமாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் திகழச் செய்வதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் உறுதியேற்க வேண்டும்' என்றாா்.
கூட்டறிக்கை
  • எந்தவித காரணத்தின் அடிப்படையிலும் பயங்கரவாத நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியாது. பயங்கரவாதத்தை அனைத்து வடிவங்களிலும் க்வாட் கூட்டமைப்பு எதிா்க்கிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி போன்ற உதவிகள் கிடைப்பது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
  • மும்பை, பதான்கோட் பகுதிகளில் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவிக்கப்படுகிறது. பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக ஆப்கானிஸ்தான் செயல்படக் கூடாது. 
  • ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் 2593-ஆவது தீா்மானத்தை மதித்து ஆப்கானிஸ்தான் செயல்பட வேண்டும். பயங்கரவாத அமைப்புகளுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை எஃப்ஏடிஎஃப் அமைப்பின் வழிகாட்டுதலின்படி அனைத்து நாடுகளும் மேற்கொள்ள வேண்டும்.
  • சா்ச்சைக்குரிய பகுதிகளில் ராணுவத் தளங்களை அமைப்பது, கடல் ரோந்து கப்பல்களை அச்சுறுத்தும் வகையில் பயன்படுத்துவது, மற்ற நாடுகளை அச்சுறுத்துவது உள்ளிட்ட பிராந்தியத்தின் சூழலைத் தன்னிச்சையாக மாற்றுவதற்கான முயற்சிகளை க்வாட் கடுமையாக எதிா்க்கிறது. ஐ.நா.வின் கடலுக்கான சா்வதேச சட்டத்தை மதித்து க்வாட் செயல்படும்.
  • கிழக்கு, தென்சீனக் கடல் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுதந்திரமான கப்பல் போக்குவரத்து நிலவுவதை க்வாட் உறுதி செய்யும். சுதந்திரம், சட்டத்தின் அடிப்படையிலான ஆட்சி, ஜனநாயக கொள்கைகள், இறையாண்மை, பிராந்திய ஒருமைப்பாடு, பிரச்னைகளுக்கு அமைதிவழித் தீா்வு ஆகியவற்றுக்கு க்வாட் தொடா்ந்து மதிப்பளிக்கும்.
  • இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கு க்வாட் கூட்டமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவுள்ளன. 
  • பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்கு வெளிப்படைத்தன்மையுடன் கடனுதவி வழங்கவும் உறுதியேற்கப்பட்டுள்ளது. எண்மத் தொடா்பு, பசுமை எரிசக்தி, பேரிடரைத் தாங்கவல்ல கட்டமைப்புகள் ஆகியவற்றிலும் க்வாட் நாடுகள் ஒத்துழைத்து செயல்படவுள்ளன' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
க்வாட் மாநாடு 2023
  • அடுத்த க்வாட் மாநாடு 2023-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது.
ENGLISH
  • The conference of India, the United States, Japan and Australia, which are part of the Quad Alliance, was held in Tokyo, Japan on Tuesday.
  • It was attended by Prime Minister Narendra Modi, US President Joe Biden, Japanese Prime Minister Fumio Kishida and Australian Prime Minister Anthony Albanese.
Prime Minister Modi's speech
  • The Quad nations are traveling with a creative plan for the benefit of the Indo-Pacific region. The Quad Federation will be further strengthened in this regard. The Quad Federation has gained prominence on the world stage in a short period of time.
  • Currently the scope of the Quad Confederation has expanded and gained additional capacity. The mutual understanding and stability that exists between the member states further strengthens democratic principles.
  • The formation of an integrated, transparent, independent Indo-Pacific region through mutual cooperation is guaranteed.
  • The Quad nations also worked together during the corona expansion. The four countries are also working together on vaccine distribution, climate change mitigation, supply chain regulation, disaster management, and economic cooperation. Such cooperation is promoting peace, development and stability in the region.
Prime Minister of Australia Albanese Speech
  • Albanese attended the Quad conference within 24 hours of taking office as Prime Minister of Australia. This shows the importance that Ava places on the Quad Federation.
Speech by US President Biden
  • Speaking at the conference, US President Biden said, "We are moving through the black pages of history. Human society is suffering because of Russia's war on Ukraine.
  • Innocent people are living on the streets. Millions of people have fled as refugees at home and abroad.
  • Putin is trying to destroy a particular culture. Schools and historical museums are being attacked by Russian forces. Until Russia stops the war on Ukraine, all nations will continue to work together against Russia.
Speech by the Prime Minister of Japan Kishida
  • Japan's Prime Minister Kishida has said that the four nations must work together to make the Indo - Pacific region independent and transparent.
Joint Report
  • Terrorist activities cannot be justified for any reason. The Quad Federation opposes terrorism in all its forms. The provision of financial assistance to terrorist organizations should be stopped.
  • Terrorist attacks in Mumbai and Pathankot have been condemned. Afghanistan should not act in support of terrorist organizations.
  • UN Afghanistan must act in accordance with Security Council Resolution 2593. All countries must take steps to prevent terrorist organizations from receiving funding under the guidance of the FATF.
  • The Quad strongly opposes attempts to arbitrarily change the region's environment, including setting up military bases in war-torn areas, using maritime patrol vessels as a threat, and threatening other countries. The quad will act in accordance with UN international law for the sea.
  • The quad will ensure free shipping in all areas, including the East and South China Seas. The quartet will continue to value freedom, the rule of law, democratic principles, sovereignty, territorial integrity, and peace.
  • The four nations will work together to improve infrastructure in the Indo-Pacific region.
  • It has also pledged to provide transparent loans to countries in the region. The quartet will also work together on hexadecimal interaction, green energy and disaster-resistant infrastructure.
Quad Conference 2023
  • The next quad conference will be held in 2023 in Australia.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel