Type Here to Get Search Results !

TNPSC 26th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

50,000 இலவச விவசாய மின் இணைப்புகள், இ-வாகன சார்ஜிங் மையங்கள் -  தமிழக அரசின் 19 முக்கிய அறிவிப்புகள்

  • தமிழக சட்டப்பேரவையில் இன்று நடந்த எரிசக்தி துறை மீதான விவாதத்தின்போது, பல்வேறு முக்கிய அறிவிப்புகளையும், அதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதி விவரங்களையும் எரிசக்தி துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார். 
  • 50,000 விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள்
  • சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு
  • விவசாயிகளஉக்கு பாதிப்பு ஏற்படாதவண்ணம் பரந்த அடித்தளத்தைக் கொண்ட மின் கோபுரங்கள் அமைப்பதற்கு பதிலாக மிகக் குறுகிய அடித்தளம் கொண்ட மிக உயர் மின்னழுத்த ஒற்றை மின் கம்பங்கள் தேவையான இடங்களில் அமைக்கப்படும்.
  • தமிழகம் முழுவதும் 2000 மெகாவாட் " சூரிய மின் சக்தி பூங்கா" (Solar Power Park) நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழகத்தில் மின் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டிருக்கும் 10,809 உயரழுத்த மின்பாதைகளில் 30 சதவீதத்திற்கும் அதிகமாக விவசாய மின் இணைப்புகள் கொண்ட 1,686 ஊரக மின்பாதைகள் தேர்வு செய்யப்பட்டு அதனை விவசாய மின் இணைப்புகள் கொண்ட பாதை மற்றும் விவசாய மின் இணைப்புகள் இல்லாத பாதைகளாக பிரித்து விவசாய மின் இணைப்புகள் மட்டும் கொண்ட மின்பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்திற்கு சொந்தமான பழைய காற்றாலைகளை மாற்றி புதிய காற்றாலை மற்றும் சூரியசக்தியுடன் இணைந்த (HYBRID) மின் உற்பத்தி நிலையங்கள் அமைக்கப்படும்.
  • தமிழ்நாட்டில் உயர் மின் அழுத்த கட்டமைப்பில் இணைக்கப்பட்டிருக்கும் மின் பாதைகளில் 273 மின்பாதைகள் (Feeders) தேர்வு செய்யப்பட்டு அப்பாதைகளில் உயர் மின்னழுத்த விநியோக அமைப்பின் மூலம் குறைந்த அளவு திறன் கொண்ட மின் விநியோக மின்மாற்றிகள் நிறுவப்படும்.
  • தமிழகமெங்கும் 4,500 இடங்களில், ஒரே இடத்தில் இருக்கும் இரு மின் விநியோக மின்மாற்றிகளை உயர் மின்னழுத்த மின் விநியோக அமைப்பின் மூலம் பிரித்தல்.
  • பழைய மற்றும் திறன் குறைந்த 54208 கி.மீ 33 கி.வோ மின் பாதைகளை புதிதாக மாற்றுதல்
  • திருவாரூர், ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் சுசீந்திரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடும் நான்கு மாட வீதிகளில் உள்ள மேல்நிலை மின்கம்பிகளை புதைவடங்களாக மாற்றுதல்
  • ரூ.1,649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்கள் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும்.
  • ரூ.166 கோடி மதிப்பீட்டில் மிக உயரழுத்த மின்மாற்றிகளின் திறனை மேம்படுத்துதல்
  • மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்களை சாலையோரம் இருக்கும் துணை மின் நிலையங்களில் நிறுவுதல்
  • எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டல அனல் மின் திட்டத்தில் புகைபோக்கி வளிமக் கந்தக நீக்கும் அமைப்பை (Flue Gas Desulpurisation- FGD) நிறுவுதல்.
  • மின் தடங்கல் எதுவும் இல்லாமல் உயர் மின் அழுத்த பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள மேலும் ஒரு புதிய Hot Line கோட்டம் உருவாக்குதல்
  • ஒருங்கிணைந்த மின் கட்டமைப்பு மேலாண்மைத் திட்டம் (Unified Network Management System)
  • நிலக்கரியின் தரத்தை ஆய்வு செய்ய Thermo Gravimetric Analyser நிறுவுதல்
  • பேசின் பாலம் எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையத்தில் 2x30 மெகாவாட் அலகுகளை நாப்தாவிலிருந்து திரவ நிலை எரிவாயு (R LNG)க்கு மாற்றுவதற்கான நடவடிக்கை எடுத்தல்.
  • திருமாக்கோட்டை எரிவாயு சுழலி மின் நிலையத்திற்கு மதனம் எரிவாயு வயலில் இருந்து எரிவாயு ஒதுக்கீடு பெறுதல்

2030க்குள் மனிதர்கள் ஒவ்வொரு ஆண்டும் 560 பேரழிவுகளை சந்திக்க நேரிடும் - ஐநா அறிக்கை

  • ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு புதிய அறிக்கை, காலநிலை மாற்றத்தால் நாம் வாழ்ந்து வரும் பூமி இன்னும் கூடுதலான பேரழிவுகளால் வரும் ஆண்டுகளில் கடுமையாக பாதிக்கப்படலாம் என்று அதிர்ச்சிகரமான தகவலை தெரிவிக்கிறது. 
  • தற்போதைய போக்குகள் கட்டுப்படுத்தப்படாமல் தொடர்ந்தால், உலகம் 2030 ஆம் ஆண்டில் ஆண்டுக்கு 560 பேரழிவுகளைச் சந்திக்கும் என்றும், 2015 ஆம் ஆண்டில் ஏற்பட்டதை விட 400 பேரழிவுகள் அதிகமாக ஏற்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • வெள்ளம் மட்டுமல்லாது தொற்றுநோய்கள் அல்லது இரசாயன விபத்துக்கள் போன்ற பிற ஆபத்துகளும் ஏற்படக்கூடும் என்று ஐநா தெரிவித்துள்ளது. 
  • காலநிலை மாற்றம் காலநிலை தொடர்பான ஆபத்துகளின் அளவு, அதன் கால அளவு மற்றும் தீவிரத்தன்மையை அதிகரிக்கிறது. காலநிலையில் ஏற்பட்ட முதற்கட்ட மாற்றத்தால் 1970 முதல் 2000 வரை, உலகம் மிகவும் பாதிக்கப்பட்டது. ஆண்டுக்கு 90 முதல் 100 நடுத்தர முதல் பெரிய அளவிலான பேரழிவுகள் ஏற்பட்டன.
  • 2001ம் ஆண்டை விட 2030ல் கடுமையான வெப்ப அலைகளின் எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகமாக இருக்கும் என்றும் 30 சதவீதம் அதிக வறட்சி ஏற்படும் என்றும் அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. 
  • இதற்கிடையில், இது இயற்கை பேரழிவுகள் பற்றி மட்டும் பேசவில்லை, ஆனால் காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட கோவிட்-19, பொருளாதார சரிவுகள் மற்றும் உணவுப் பற்றாக்குறை ஆகியவற்றையும் ஐநா தனது அறிக்கையில் விளக்கியுள்ளது.
  • இயற்கை பேரழிவுகள் அதிகம் உள்ள பகுதிகளில் பெருகிவரும் மக்கள்தொகையால் பேரழிவுகளின் தாக்கமும் அதிகரித்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. 
  • 1990 இல், பேரழிவுகளால் உலகிற்கு ஆண்டுக்கு $70 பில்லியன் இழப்பு ஏற்பட்டது. ஆசியா-பசிபிக் பகுதி அதிக சேதத்தை சந்திக்கிறது, ஆண்டுதோறும் பேரழிவுகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.6 சதவீதத்தை இழக்கிறது.
இமாச்சலப் பிரதேசத்தில் 7 ரோப்வே திட்டங்களுக்கு என் எச் எல் எம் எல் மற்றும் மாநில அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • ரோப்வேஸ் (கயிற்றுப்பாதை) மூலம் இணைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கான பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, இமாச்சலப் பிரதேசத்தில் 7 ரோப்வே திட்டங்களுக்கு நேஷ்னல் ஹைவேஸ் லாஜிஸ்டிக்ஸ் மேனேஜ்மெண்ட் லிமிடெட் (என் எச் எல் எம் எல்) மற்றும் மாநில அரசு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • பர்வத்மாலா திட்டத்தின் கீழ் மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி மற்றும் இமாச்சலப் பிரதேச முதல்வர் திரு ஜெய் ராம் தாக்கூர் மற்றும் இணை அமைச்சர் திரு வி கே சிங் ஆகியோர் முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டது.
  • இந்த குறிப்பிடத்தக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் தனித்துவமான, சுற்றுச்சூழலுக்கு நட்பான, இயற்கையான மற்றும் தடையற்ற பயண அனுபவம் சுற்றுலாப் பயணிகளுக்கு கிடைக்கும். 
  • உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, மொத்தம் ரூ.3,232 கோடி செலவில் 57.1 கிமீ நீளமுள்ள 7 ரோப்வே திட்டங்கள் மாநிலத்தில் கட்டப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel