Type Here to Get Search Results !

TNPSC 24th APRIL 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ரூ 20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளை தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார்

  • தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டத்தில் பங்கேற்பதற்காக ஜம்மு-காஷ்மீர் சென்ற பிரதமர் திரு நரேந்திர மோடி, நாடு முழுவதும் உள்ள அனைத்து கிராம சபைகளிலும் உரையாற்றினார். 
  • சம்பா மாவட்டத்தில் உள்ள பள்ளி பஞ்சாயத்துக்கு அவர் சென்றார். சுமார் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு வளர்ச்சி முன்முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைத்து அடிக்கல் நாட்டினார். 
  • அம்ரித் சரோவர் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்தார். ஜம்மு காஷ்மீர் துணைநிலை ஆளுநர் திரு மனோஜ் சின்ஹா, மத்திய அமைச்சர்கள் திரு கிரிராஜ் சிங், டாக்டர் ஜிதேந்திர சிங், திரு கபில் மோரேஷ்வர் பாட்டீல் உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
பொது சேவை மையம் (CSC) ஏற்பாடு செய்துள்ள பயிர்க் காப்பீடு குறித்த நாடு தழுவிய பயிலரங்கை மத்திய வேளாண் அமைச்சர் தொடங்கி வைக்கிறார்
  • வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம், மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளுடன் இணைந்து 'விடுதலைப் பெருவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக'  2022 ஏப்ரல் 25-ம் தேதி முதல் 30-ம் தேதி வரை 'விவசாயிகள் நலனே எங்கள் முன்னுரிமை'  என்ற பிரச்சாரத்தை ஏற்பாடு செய்கிறது. 
  • இந்த பிரச்சாரத்தின் போது, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத் துறை, விவசாயிகளுக்காக பிராந்திய அளவில் நாடு தழுவிய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்யும்.
மகாராஷ்டிராவின் அவுரங்காபாத்தில் ரூ 5569 கோடி மதிப்பிலான 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
  • மகாராஷ்டிராவின் முக்கிய தொழில் மற்றும் கல்வி மையங்களில் ஒன்றான அவுரங்காபாத் மாவட்டத்தின் வளர்ச்சிக்கான மற்றுமொரு நடவடிக்கையாக ரூ 5569 கோடி மதிப்பிலான 7 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் திரு நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்.

பிரான்ஸ் அதிபராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார் இமானுவேல் மேக்ரான்

  • பிரான்ஸ் அதிபர் தேர்தலானது இரு சுற்றுகளாக நடைபெற்றது. முதல் சுற்றில் 12 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆனால் யாரும் பெரும்பான்மை பெறவில்லை. இதையடுத்து அதிக வாக்குகள் பெற்ற இரண்டு வேட்பாளர்கள் அடுத்த சுற்றில் போட்டியிட்டனர்.
  • இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் முதல் சுற்றில் எந்த ஒரு வேட்பாளரும் பெரும்பான்மை பெற்றதே இல்லை. கடந்த 2017ஆம் ஆண்டை போலவே இந்த முறையும் மய்ய இமானுவேல் மேக்ரானும் தீவிர வலதுசாரியான மரைன் லே பென்னும் இரண்டாவது சுற்றில் மோதினர்.
  • இந்த தேர்தலுக்கான முதல் சுற்று கடந்த 10ஆம் தேதி நடந்தது. அப்போது இமானுவேல் 50 சதவீத வாக்குகளையே பெற்றார். இதற்கு அடுத்து இமானுவேலும் மரைனும் இரண்டாவது சுற்றில் பங்கேற்றனர். இதில் இமானுவேல் 58.2 சதவீத வாக்குகளும், மரைன் லே பென் 41.8 சதவீத வாக்குளையும் பெற்றார்.
  • இதையடுத்து இமானுவேல் மேக்ரான் அதிபர் தேர்தலில் வென்றதாக அறிவிக்கப்பட்டார். கடந்த 2017ஆம் ஆண்டு முதல் மேக்ரான் அதிபராக இருந்து வருகிறார். 
  • 20 ஆண்டுகளில் இரண்டாவது முறையாக ஒருவரே மீண்டும் அதிபராவது இதுதான் முதல் முறை. 

உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவுக்கு இரண்டாவது தங்கம்

  • உலக வில்வித்தை 'ரீகர்வ்' கலப்பு அணிகள் பிரிவில் இந்திய அணி தங்கம் வென்றது.துருக்கியில் உலக கோப்பை வில்வித்தை ஸ்டேஜ் 1 போட்டி நடந்தது.
  • இதன் கலப்பு 'ரீகர்வ்' பிரிவு பைனலில் இந்தியா, பிரிட்டன் அணிகள் மோதின. இந்தியா சார்பில் தருண்தீப் ராய், ரிதி பங்கேற்றனர். பிரிட்டன் அணியில் பிரையானி பிட்மேன், அலெக்ஸ் வைஸ் களமிறங்கினர்.
  • முதல் செட்டை 35-37 என இழந்த இந்திய அணி, இரண்டாவது செட்டை 36-33 எனக் கைப்பற்றி எழுச்சி கண்டது. மூன்றாவது செட்டை 39-40 என பறிகொடுத்த இந்தியா, நான்காவது செட்டை 38-37 என வென்று பதிலடி தந்தது.
  • நான்கு செட்களின் முடிவில் போட்டி 4-4 என சமநிலை வகித்தது. இதனையடுத்து வெற்றியாளரை தீர்மானிக்க போட்டி 'ஷூட் ஆப்' முறைக்கு சென்றது. 
  • இதில் அசத்திய இந்திய அணி 18-17 என தன்வசப்படுத்தியது. முடிவில் இந்திய அணி 5-4 என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.
  • இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த இரண்டாவது தங்கம். ஏற்கனவே, ஆண்கள் அணிகளுக்கான காம்பவுண்டு பிரிவில் அபிஷேக் வர்மா, ரஜத் சவுகான், செய்னி இடம் பெற்ற இந்திய அணி தங்கம் வென்றிருந்தது. 
  • ஆசிய விளையாட்டில் (2010) வெள்ளி வென்ற தருண்தீப் ராய் 38, உலக கோப்பை அரங்கில் முதன்முறையாக கலப்பு அணிகள் பிரிவில் பதக்கம் வென்றுள்ளார். இளம் வீராங்கனை ரிதி 17, உலக கோப்பை அரங்கில் தனது முதல் பதக்கத்தை தட்டிச் சென்றார்.இத்தொடரில் இந்திய அணி 2 தங்கப் பதக்கத்துடன் விடை பெற்றது.

வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளினார் கெளதம் அதானி

  • இந்தியாவின் இரண்டாவது கோடீஸ்வர தொழில் அதிபரான கௌதம் அதானி, அதானி குழுமம் மற்றும் அதானி அறக்கட்டளையின் நிறுவனராக உள்ளார். இந்தியா மட்டுமல்லாது பன்னாட்டுத் தொழிலதிபதிரான இவர் குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரத்தில் பிறந்தவர்.
  • அவர் இந்தியாவில் ஆறு பொது வர்த்தக நிறுவனங்களுடன் ஒரு துறைமுகம் மற்றும் எரிசக்தி நிறுவனத்தையும் நிர்வகித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் குழுமத்தின் முகேஷ் அம்பானி அடுத்த இடத்தில் ஆசியாவின் மிகப்பெரிய பணக்காரராக உள்ளார்.
  • இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி கெளதம் அதானி உலக அளவில் பெரும் பணக்காரரான வாரன் பஃபெட்டை பின்னுக்கு தள்ளி 5வது இடத்தை பெற்றுள்ளதாக ஃபோர்ப்ஸ் கூறியுள்ளது. 
  • கெளதம் அதானியின் 123.7 பில்லியன் டாலர் சொத்து மதிப்பு அவரை இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரராக ஆக்கியுள்ள நிலையில், நாட்டின் நம்பர் 2 பணக்காரரான முகேஷ் அம்பானியை விட 19 பில்லியன் டாலர் அதிக சொத்து மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார்.
ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் இந்தியாவின் தீபக் புனியா வெள்ளிப் பதக்கம்
  • மங்கோலியாவில் ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் தொடர் நடந்தது. இந்தியா சார்பில் ரவிக்குமார், பஜ்ரங் புனியா உட்பட 30 பேர் பங்கேற்றனர். 
  • ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 86 கிலோ எடைப்பிரிவு பைனலில் இந்தியாவின் தீபக் புனியா, கஜகஸ்தானின் அசாமத் தவுலெத்பெகோவ் மோதினர். 
  • இதில் ஏமாற்றிய தீபக் புனியா 1-6 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெள்ளிப் பதக்கத்தை கைப்பற்றினார். 
  • ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 92 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் விக்கி, உஸ்பெகிஸ்தானின் அஜினியாஸ் சபர்னியாசோவ் மோதினர்.
  • அபாரமாக விளையாடிய விக்கி, 5-3 என்ற கணக்கில் வெற்றி பெற்று வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றார்.
  • ஆண்களுக்கான 'பிரீஸ்டைல்' 61 கிலோ எடைப்பிரிவு வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியாவின் மங்கள் காத்யன், கிர்கிஸ்தானின் உலுக்பெக் சோல்டோஷ்பெகோவ் மோதினர். இதில் ஏமாற்றிய மங்கள் 4-6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார். மற்ற எ…

பேயா்ன் முனீச் சாதனை சாம்பியன்

  • போருசியா டாா்ட்மண்ட் அணியை சனிக்கிழமை நள்ளிரவு ஆட்டத்தில் வென்ற (3-1) பேயா்ன் முனீச், பட்டியலில் 75 புள்ளிகளுடன் முதலிடத்தை உறுதி செய்துகொண்டது. 
  • இதனால் பேயா்ன் முனீச் பட்டத்தை வெல்வது உறுதியானது. இந்த ஆட்டத்தில் பேயா்ன் முனீச்சுக்காக சொகே நா்பி (15'), ராபா்ட் லெவாண்டோவ்ஸ்கி (34'), ஜமால் முசியாலா (83') ஆகியோரும், டாா்ட்மண்டுக்காக எம்ரே கேனும் (52') கோலடித்தனா்.
  • பேயா்ன் முனீச் தொடா்ந்து 10-ஆவது முறையாக கோப்பை வெல்ல இருப்பது, ஐரோப்பிய டாப் 5 லீக் போட்டிகளில் சாதனையாகும். 
  • முன்னதாக 2012-20 காலகட்டத்தில் சீரி ஏ போட்டியில் யுவென்டஸ் 9 முறை சாம்பியன் ஆனதே சாதனையாக இருந்தது. பேயா்ன் முனீச் பயிற்சியாளா் ஜுலியன் நகேல்ஸ்மானுக்கு இது முதல் பட்டம்.
  • பிரான்ஸில் நடைபெறும் லீக் 1 போட்டியில் பாரீஸ் செயின்ட் ஜொமெய்ன் (பிஎஸ்ஜி) அணியும் 10-ஆவது முறையாக சாம்பியன் ஆக உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel