Type Here to Get Search Results !

ஆற்றல் மற்றும் காலநிலை திட்டங்களில் சிறந்து விளங்கும் மாநிலங்களின் தரவரிசை பட்டியல் / RANKING LIST OF STATES THAT EXCEL IN ENERGY & CLIMATE PROGRAMS

 

TAMIL
  • நித்தி ஆயோக் மூலம் 2022 ஏப்ரல் 11 அன்று மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1 வெளியிடப்பட்டது.  இந்த நிகழ்வுக்கு நித்தி ஆயோகின் துணைத் தலைவர் டாக்டர் ராஜீவ் குமார் தலைமை தாங்கினார்.  
  • மாநில எரிசக்தி விநியோக நிறுவனங்களின் செயல்பாடு, ஆற்றல் பகிர்மானம், பயன்பாடு, இருப்பு, ஆற்றல் சேமிப்பு உள்ளிட்ட அளவுகோல்களின் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டது.
  • இந்த அறிக்கையின் முக்கிய அம்சங்களை கூடுதல் செயலாளர் டாக்டர் ராகேஷ் சர்வால் விவரித்தார். மாநில எரிசக்தி மற்றும் பருவநிலை குறியீடு சுற்று-1-ல் மாநிலங்களின் செயல்பாடு ஆறு அளவுகோல்களை கொண்டு தரவரிசை செய்யப்பட்டுள்ளது.  
  • 1. டிஸ்காம் செயல்பாடு 2. எரிசக்தி எளிதில், குறைந்த செலவில் நம்பகத்தன்மையோடு கிடைத்தது 3.  தூய்மை எரிசக்திக்கான நடவடிக்கைகள் 4.  எரிசக்திக்கென 5. சுற்றுச்சூழல் நீடித்திருத்தல் 6. புதிய முன்முயற்சிகள். 
  • இந்த அளவுகோல்கள்  மேலும் 27 குறியீடுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.  இவற்றின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் 3 குழுக்களாக  பிரிக்கப்பட்டுள்ளன.  1. முன்னோடிகள் 2. சாதனையாளர்கள 3. முன்னேற விரும்புகின்றவை.
  • மாநிலங்களின் அளவு மற்றும் புவியியல் வேறுபாடுகளை அடிப்படையாக கொண்டு மிகப்பெரிய மாநிலங்கள், சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் என 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன.  
  • இதன்படி, குஜராத், கேரளா, பஞ்சாப் ஆகியவை தரவரிசையில் முதல் 3 பெரிய மாநிலங்களாக உள்ளன.  தமிழ்நாடு தரவரிசையில் 43.4 சராசரி புள்ளிகளுடன் 9 ஆவது இடத்தை பெற்றுள்ளது.  
  • நன்றாக செயல்பட்ட சிறிய மாநிலங்களின் தரவரிசையில் கோவா முதலிடத்தையும், திரிபுரா, மணிப்பூர் ஆகியவை அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன. 
  • யூனியன் பிரதேசங்களை பொறுத்தவரை சண்டிகர், தில்லி, டாமன் அண்ட் டியூ /  யாத்ரா, நாகர்ஹவேலி ஆகியவை சிறந்த செயல்பாடு உள்ளவையாக கண்டறியப்பட்டுள்ளன.  புதுச்சேரி 48.5 சராசரி புள்ளிகளுடன் 4 ஆவது இடத்தில் உள்ளது.
  • அதன்படி எரிசக்தி ஆற்றல் சேமிப்பு பிரிவில் தமிழ்நாடு 85.4 புள்ளிகள் பெற்று முதல் இடத்தில் உள்ளதாக நிதி அயோக் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக பட்டியலில் குஜராத் மாநிலம் முதல் இடத்திலும், கேரளா இரண்டாம் இடத்திலும், பஞ்சாப் 3ஆம் இடத்தில் உள்ளன.
ENGLISH
  • State Energy and Climate Index Round-1 was released on April 11, 2022 by Nitish Ayog. The event was chaired by Dr. Rajeev Kumar, Vice President, Nitish Ayog.
  • The ranking list is published on the basis of criteria including performance, energy distribution, utilization, reserve and energy storage of state energy distribution companies.
  • Additional Secretary Dr. Rakesh Sarwal explained the key features of this report. The performance of the states in the State Energy and Climate Index Round-1 is ranked by six criteria.
  • 1. DISCOM function 2. Energy available easily, reliably at low cost 3. Measures for clean energy 4. For energy 5. Environmental sustainability 6. New initiatives.
  • These criteria are further subdivided into 27 codes. Based on these, the states and union territories are divided into 3 groups. 1. Pioneers 2. Achievers 3. Those who want to progress.
  • Based on the size and geographical differences of the states, they are divided into 3 types namely large states, small states and union territories.
  • Accordingly, Gujarat, Kerala and Punjab are the top 3 largest states in the rankings. Tamil Nadu is ranked 9th with an average of 43.4 points. Goa tops the list of best performing small states, followed by Tripura and Manipur.
  • The Union Territories of Chandigarh, Delhi, Daman and Diu / Yatra and Nagar Haveli have been identified as the best performing. Puducherry is in 4th place with an average of 48.5 points.
  • According to Nithi Ayog, Tamil Nadu ranks first in the energy saving category with 85.4 points. Overall, Gujarat tops the list, followed by Kerala and Punjab.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel