TAMIL
- 2022 மார்ச் மாதத்திற்கான வேளாண் மற்றும் ஊரகத் தொழிலாளர்கள் சார்ந்த அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு எண் தலா 3 புள்ளிகள் உயர்ந்து, வேளாண் தொழிலாளர்களுக்கு 1098-ஆகவும், ஊரகத் தொழிலாளர்களுக்கு 1109 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
- வேளாண் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் வரிசையில் 1282 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கிறது. 876 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்தில் உள்ளது.
- ஊரகத் தொழிலாளர்களுக்கான குறியீட்டு எண்ணின் பட்டியலில் 1270 புள்ளிகளுடன் தமிழ்நாடு முதலிடத்திலும், 926 புள்ளிகளுடன் இமாச்சலப் பிரதேசம் கடைசி இடத்திலும் உள்ளன.
- விவசாயம் மற்றும் கிராமப்புறத் தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்ச சரிவு முறையே தமிழ்நாட்டிலும் கர்நாடகத்திலும் (தலா 10 புள்ளிகள்) ஏற்பட்டுள்ளது .
- முக்கியமாக அரிசி, தானியங்கள், வெற்றிலை, மீன், காய்கறிகள் மற்றும் பழங்கள் உள்ளிட்டவற்றின் விலை வீழ்ச்சி இதற்கு காரணமாகும்.
- கோதுமை, ஆட்டுக்கறி, பால், கடலை எண்ணெய், பச்சை மிளகாய், பருத்தி உள்ளிட்டவற்றின் விலை உயர்வின் காரணமாக, விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்களுக்கான நுகர்வோர் விலைக் குறியீட்டு எண்களில் அதிகபட்சமாக உயர்வை மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் சந்தித்துள்ளன.
- The All India Consumer Index for Agricultural and Rural Workers for March 2022 has risen by 3 points to 1098 for agricultural workers and 1109 for rural workers.
- Tamil Nadu tops the index for agricultural workers with 1282 points. Himachal Pradesh is in last place with 876 points.
- Tamil Nadu tops the list of rural workers with 1270 points, followed by Himachal Pradesh with 926 points.
- Tamil Nadu and Karnataka (10 points each) saw the sharpest decline in the consumer price index for agriculture and rural workers.
- This is mainly due to the fall in prices of rice, cereals, betel, fish, vegetables and fruits.
- Maharashtra and Rajasthan have seen the highest increase in consumer price indices for agricultural and rural workers due to higher prices of wheat, lamb, milk, groundnut oil, green chillies and cotton.