Type Here to Get Search Results !

TNPSC 9th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஸ்ரீபெரும்புதூர் செயின்ட் கோபைன் நிறுவன வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில் மிதவை கண்ணாடி பிரிவு முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

 • 1998ல் பெரும்புதூர் தொழில் வளாகத்தில் செயின்ட் கோபைன் நிறுவனத்துக்கு அடிக்கல் நாட்டிவைத்த முன்னாள் முதல்வர் கருணாநிதி 2000-ம் ஆண்டில் உற்பத்தியை தொடங்கிவைத்தார்.
 • இங்கு, முகம்பார்க்கும் கண்ணாடி, சூரிய ஆற்றல் கண்ணாடி, லாக்வேர்டு கண்ணாடி, இன்சுலேட்டட் கண்ணாடி, மேற்பூச்சுள்ள கண்ணாடி, பாதுகாப்பு கண்ணாடி, தீப்பிடிக்காத, குண்டு துளைக்காத, வெடிகுண்டு தாக்குதலை சமாளிக்கும் வகையிலான கண்ணாடிஉள்ளிட்டவை தயாரிக்கப்படுகின்றன. மேலும், மதிப்புக் கூட்டப்பட்ட கண்ணாடிகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
 • இந்நிலையில், இந்த வளாகத்தில் ரூ.500 கோடி மதிப்பில், 200பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் மிதவை கண்ணாடிப் பிரிவு, ஒருங்கிணைந்த ஜன்னல் பிரிவு மற்றும் நகர்ப்புற வனம் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
 • இவற்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். இந்த மிதவைக் கண்ணாடிப் பிரிவுஅதிகபட்ச உற்பத்தி, நவீனத் தொழில்நுட்பம், பிரத்யேக வடிவமைப்பு ஆகிய சிறப்புத் தன்மைகளை உள்ளடக்கியது.

பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவு

 • முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, கடந்த 1991-ம் ஆண்டு சென்னையை அடுத்த பெரும்புதூரில் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 4 பேருக்கு மரண தண்டனையும், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. 
 • கடந்த 2000-ம் ஆண்டு ஏப்ரலில் தமிழக ஆளுநர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, நளினியின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார். அதேபோல 2014-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய 3 பேரின் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தது.
 • இந்நிலையில், ராஜீவ் காந்திகொலை வழக்கில் பெல்ட் வெடிகுண்டு வெடித்தது தொடர்பாக தன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்படவில்லை என்பதால் தனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைத்து, விடுவிக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் கடந்த 2016-ம் ஆண்டு பேரறிவாளன் வழக்கு தொடர்ந்திருந்தார்.
 • இந்நிலையில், பேரறிவாளன் தொடர்ந்திருந்த வழக்கு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.
 • இதற்கு கடுமையாக ஆட்சேபம் தெரிவித்த மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் கே.எம்.நடராஜ், ''முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கின் பின்னணியில் ஆயுதம், வெடிகுண்டு, வெளிநாட்டு தொடர்புஎன மிகப்பெரிய சதித்திட்டங்கள் உள்ளன.
 • ஏற்கெனவே பேரறிவாளனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விட்டது. மீண்டும் ஜாமீன் வழங்கி கரிசனம் காட்ட முடியாது.
 • இந்த விவகாரம் நீண்ட நெடும் நாட்களாக நிலுவையில் இருந்து வருகிறது. இந்த விஷயத்தில் தமிழக ஆளுநர் முடிவெடுக்க அதிகாரம் உள்ளதா, அவரின் அதிகாரம் என்ன என்பது குறித்து தீர ஆராய வேண்டியுள்ளது. 32 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்த நபர், தனக்கு ஜாமீன் வழங்க கோருகிறார்.
 • எனவே, இதுதொடர்பாக மத்திய அரசு முடிவு எடுக்கும்வரை உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள வானளாவிய அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனுக்கு ஜாமீன் அளிக்கிறோம். 
 • அவர் மாதம் ஒருமுறை ஜோலார்பேட்டையில் உள்ள காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை விதிக்கிறோம். இந்த வழக்கின் முடிவுகள் பிரதான வழக்கின் இறுதி முடிவுக்கு கட்டுப்பட்டவை.

உபரி நிலங்களை பணமாக்க மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல்
 • டில்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் குழு கூட்டம் நடந்தது. இதில், பொதுத் துறை நிறுவனங்களுக்குச் சொந்தமான, பயன்படுத்தப்படாத உபரி நிலங்களை விற்பனை செய்து பணமாக்க, என்.எல்.எம்.சி., என்ற நிறுவனம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. 
 • தற்போது பொதுத் துறை நிறுவனங்களுக்கு ஏராளமான நிலங்கள், கட்டடங்கள் சொந்தமாக உள்ளன. அவற்றில் பல நிலங்கள், கட்டடங்கள் முழுமையாக பயன்படுத்தப்படாமல் உள்ளன.
 • இது போல உபரியாக, பயன்படுத்தாத நிலங்களை என்.எல்.எம்.சி., அடையாளம் கண்டு, அவற்றை விற்கவோ அல்லது முழுமையாக பயன்படுத்தவோ தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
 • இது, மத்திய அரசின் வருவாய்க்கு வழி வகுக்கும். அதுபோல, நலிவுற்று மூடப்படும் பொதுத் துறை நிறுவனங்களின் உபரி நிலம் மற்றும் கட்டடங்களை கையகப்படுத்துவது, அவற்றின் வாயிலான வருவாயை பெருக்குவது உள்ளிட்ட பணிகளையும் என்.எல்.எம்.சி., மேற்கொள்ளும். 
ஆசிய பாய்மர போட்டியில் எம்.இ.ஜி., சாதனை தங்கம், வெண்கலம் பெற்று வீரர்கள் சாதனை
 • பிப்ரவரி 26 முதல் மார்ச் 6 வரை அபுதாபியில், ஆசிய பாய்மர சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இதில், இந்திய ராணுவத்தின் மெட்ராஸ் இன்ஜினியரிங் குரூப்பை சேர்ந்த வீரர்கள் உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.
 • இளைஞர் மற்றும் மூத்தவர் பிரிவில், இந்தியா சார்பில் எட்டு வீரர்கள் பங்கேற்றனர்.டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்ற சுபேதார் விஷ்ணு சரவணன் தங்கபதக்கம் பெற்றார். 
 • ஹவில்தார் பிரின்ஸ் நோபல், மானு பிரான்சிஸ் வெண்கல பதக்கமும், மாணவர் விளையாட்டு பிரிவில் வீரர் விஜய்குமார் வெள்ளி பதக்கமும் பெற்றனர்.
எல்ஐசி 5% பங்கு விற்பனைக்கு செபி அனுமதி
 • ஒன்றிய அரசு தன்னிடம் இருக்கும் எல்ஐசி நிறுவனத்தின் 5 சதவீத பங்குகளை ஐபிஓ மூலம் விற்பனை செய்ய இருக்கிறது. இதற்கான வரைவு அறிக்கையை எல்ஐசி நிறுவனம் பங்குச்சந்தை ஒழுங்கமைப்பு அமைப்பான செபியிடம் தாக்கல் செய்துவிட்டது.
 • இந்த 5 சதவீதப் பங்குகளை விற்று ரூ.78 ஆயிரம் கோடி நிதி திரட்ட ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த ஐபிஓ மூலம் 31.60 கோடி பங்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், பாலிசி வைத்திருக்கும் மக்கள், எல்ஐசியில் பணியாற்றுவோர் ஆகியோருக்கு சிறப்புத் சலுகைகள் தரப்பட உள்ளது.
இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், ஜெர்மனியின் டிஎஃப்ஜி இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • இந்திய மருந்துவ ஆராய்ச்சிக் கவுன்சில், ஜெர்மனியின் டிஎஃப்ஜி இடையே 2021 டிசம்பரில் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்குப் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • பரஸ்பரம் பயன்பெறும் மருத்துவ அறிவியல், நச்சுத்தன்மை நோயியல், வெப்ப மண்டல நோய், அரிய வகை நோய்கள் உள்ளிட்ட சுகாதார ஆராய்ச்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பது இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். அறிவியல் ஆராய்ச்சி திட்டங்களுக்கு கூட்டாக நிதி வழங்குதல், ஆராய்ச்சியாளர்கள் பரிமாற்றம், கூட்டு கருத்தரங்குகள், பயிலரங்குகளுக்கு நிதி வழங்குதல் உள்ளிட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டில் ஒத்துழைப்பதும் இதில் அடங்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் மற்றும் அமெரிக்க சுகாதாரம் மற்றும் மனித சேவைகள் துறையின் தேசிய சுகாதார நிறுவனம், தேசிய ஒவ்வாமை மற்றும் தொற்றுநோய் நிறுவனத்துடன் செய்துகொண்ட ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்த ஒப்பந்தத்தின்படி,  சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களுடன் இணைந்து  புதுமையான ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்வதுடன், தொற்றுநோயியல், மருந்து, மூலக்கூறு உயிரியல், மருத்துவ பூச்சியியல், ஒட்டுண்ணியியல், தடுப்பு மருந்து, நுண்உயிரியல் மற்றும் தொற்றுநோயியல், துறைகளில் நோய்த் தடுப்புக்கான புதிய தொழில்நுட்பங்கள், நோய் கண்டறிதல் மற்றும் வெப்பமண்டல தொற்றுநோய் மற்றும் ஒவ்வாமை நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும்.
பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை இந்தியாவில் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், குஜராத்தின் ஜாம்நகரில், பாரம்பரிய மருந்துகளுக்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • ஆயுஷ் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் ஜாம்நகரில் அமைக்கப்பட உள்ள இந்த மையத்திற்காக, மத்திய அரசு உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் ஒன்றை செய்துகொள்ளும்.  
 • இந்த மையம் பாரம்பரிய மருத்துவத்திற்காக, அதன் தலைமையிடத்திற்கு வெளியே அமைக்கப்படும் முதலாவது மற்றும் சர்வதேச மையமாக திகழும்.
 • இந்த மையம் அமைக்கப்படுவதன் மூலம் ஆயுஷ் மருத்துவமுறைகளை உலகம் முழுவதும் பரவச் செய்ய முடியும். அத்துடன் பாரம்பரிய மருத்துவம் தொடர்பான சர்வதேச சுகாதார விவகாரங்களில் இந்தியா தலைமை வகிக்கவும் வகை செய்யும். தரமான, பாதுகாப்பான, நோய்களை குணப்படுத்தக் கூடிய அதிக திறன் கொண்ட மருந்துகள் கிடைப்பதை உறுதி செய்வதுடன் பாரம்பரிய மருந்துகளை முறையாக பயன்படுத்தவும் இந்த மையம் உதவிகரமாக இருக்கும்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) மற்றும் இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமும், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகமும் நவம்பர் 2021-ல் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. 
 • இந்திய விஞ்ஞானிகள் மற்றும் ஆராய்ச்சியாளர்களின் திறன் மேம்பாடு, புள்ளிவிவர சேகரிப்பு போன்றவற்றுடன் திறன் மேம்பாட்டுக்கான மண்டல மையமாக இந்தியாவை உருவாக்குவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். பூச்சிகளால் பரவக் கூடிய மூன்று முக்கிய நோய்கள் (மலேரியா, ஒட்டுண்ணிகளால் ஏற்படக் கூடிய கருங்காய்ச்சல், யானைக்கால்) பற்றிய கருத்துக்களை பரிமாறிக் கொள்ளவும், பகிர்ந்து கொள்ளவும் இந்த ஒப்பந்தம் வகை செய்கிறது.
சில வகை தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், க்ளூக்கோநைட், பொட்டாஷ், எமரால்டு, பிளாட்டினம் வகை உலோகங்கள், அன்டாலுசைட், சிலிமனைட்  மற்றும் மாலிப்டினம் போன்ற தாதுப்பொருட்களுக்கான ராயல்டி தொகையை நிர்ணயிக்க ஏதுவாக, சுரங்கங்கள் மற்றும் தாதுப் பொருட்கள் (மேம்பாடு மற்றும் முறைப்படுத்துதல்) சட்டம் 1957-ல் 2-வது அட்டவணையில் திருத்தங்களை மேற்கொள்ள ஒப்புதல் அளிக்கப்பட்டது.
 • மேற்குறிப்பிட்ட தாதுப்பொருள் சுரங்கங்கள் ஏலத்தில் விடப்படுவதை உறுதி செய்வதோடு அவற்றின் இறக்குமதியையும் கணிசமாக குறைப்பதுடன், சுரங்கத்துறையில் அதிகாரமளித்தலுக்கான வாய்ப்புகளையும் இந்த அனுமதி உறுதி செய்யும். 
 • மேலும் சமுதாயத்தின் பெரும்பாலானோரின் உள்ளார்ந்த வளர்ச்சியை உறுதி செய்யவும் இது உதவும்.  இறக்குமதி குறைக்கப்படுவதுடன் அந்நியச் செலாவணியை  சேமிக்கவும் இந்த அனுமதி வகை செய்யும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel