Type Here to Get Search Results !

TNPSC 8th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை - அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி அறிவிப்பு

 • ரஷ்யாவின் தாக்குதல் தொடர்ந்து வரும் நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளிடம் இறக்குமதியை நிறுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார்.
 • இந்நிலையில், ரஷ்யாவிடமிருந்து இனி கச்சா எண்ணெய் வாங்கப் போவதில்லை என அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
 • மேலும் ரஷ்யாவின் கச்சா எண்ணெய், எரிவாயு, நிலக்கரியை அமெரிக்க துறைமுகங்களில் இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாகவும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
 • இதனிடையே உக்ரைனுக்கு ரஷ்ய தயாரிப்பான போர் விமானங்களை வழங்க போலந்தின் முன்மொழிவை அமெரிக்கா நிராகரித்துள்ளது.

இந்தியா - ஜப்பான் கூட்டு ராணுவ பயிற்சி

 • நடப்பாண்டும், பெலகாவியில் 'எக்ஸ் தர்மா கார்டியன் 2022' நிகழ்ச்சி மூலம், கூட்டு ராணுவ பயிற்சி பத்து நாட்களுக்கு முன் பெலகாவியிலுள்ள வெளிநாட்டு பயிற்சி முனையத்தில் துவங்கியது.
 • இந்த பயிற்சியில், 15வது இந்திய மராட்டா காலாட் படையினரும், ஜப்பானின் 30வது தற்காப்பு படை காலாட் படையினரும் இணைந்து ஈடுபட்டனர்.
 • பயிற்சியின் போது, இருநாட்டினரும் இக்கட்டான சூழ்நிலையில் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதை பரிமாறி கொண்டனர்.
 • பயிற்சியில், புறநகர் பகுதியில் பதுங்கியிருக்கும் பயங்கரவாதிகள் மீது தாக்குதல், ஆயுதமின்றி சண்டை உட்பட பல பயிற்சியில் ஈடுபட்டனர்.இந்த பயிற்சி இன்னும் இரண்டு நாட்கள் நடக்கவுள்ளது.

நேட்டோவில் இணையவில்லை - உக்ரைன் அதிபர் திடீர் அறிவிப்பு

 • உக்ரைன் நாட்டின் மீது கடந்த சில நாட்களாக ரஷ்யா போர் தொடுத்து வரும் நிலையில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ குரல் கொடுத்து வருகின்றன.
 • இதனால் நேட்டோ நாடுகளுடன் இணைய உக்ரைன் முடிவு செய்ததாகவும் அதற்கான விண்ணப்பத்தை அளித்ததாகவும் கூறப்பட்டது.
 • இந்த நிலையில் தற்போது உக்ரைன் அதிபர் அதிரடியாக முடிவெடுத்துள்ளார். நேட்டோ அமைப்பில் உறுப்பினராக விருப்பத்தை கைவிட்டதாக அவர் கூறியதோடு கடைசிவரை தனியாகவே போராடப் போவதாகவும் எந்த சூழ்நிலையிலும் ரஷ்யாவிற்கு அடிபணியப் போவதில்லை என்றும் அவர் திட்டவட்டமாக கூறியுள்ளார்

உக்ரைனுக்கு உலக வங்கி ரூ. 5,578 கோடி ஒதுக்கீடு

 • ரஷியப் படையெப்பால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு 72.3 கோடி டாலா் (சுமாா் ரூ.5,578 கோடி) நிவாரண உதவி அளிக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.
 • கடன் மற்றும் உதவித் தொகையாக உக்ரைனுக்கு அளிக்கப்படவிருக்கும் அந்தத் தொகையில், பிரிட்டன், டென்மாா்க், லாட்வியா, லிதுவேனியா, ஐஸ்லாந்து ஆகிய நாடுகள் அளிக்கும் 13.4 கோடி டாலரும் (சுமாா் ரூ.1,034 கோடி) அடங்கும்.

உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் - 4 தங்கத்துடன் இந்தியா முதலிடம்

 • எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டித் தொடர் நடந்து வந்தது. மொத்தம் 60 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இந்த உலகக்கோப்பை போட்டித் தொடரில் பங்கேற்றனர். இந்தியா இதில் நான்கு தங்கப் பதக்கங்களுடன் முதலிடம் பிடித்துள்ளது.
 • இந்தியாவைச் சேர்ந்த ரிதம் சங்வான்- அனிஷ் பன்வாலா இணை 25 மீ ரேபிட் பயர் பிஸ்டல் கலப்பு அணிகள் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர். 
 • இதேபோல் ஆண்கள் 25 மீ பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் அனிஷ் பன்வாலா, குர்பிரீத் சிங், பாவேஷ் ஷெகாவத் ஆகியோர் அடங்கிய அணி இறுதிப்போட்டி வரை வந்து, ஜெர்மன் அணியிடம் தோல்வியடைந்தது. இதனால் இந்தியாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது.
 • ஒட்டுமொத்தமாக இந்த உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி நான்கு தங்கப் பதக்கம், இரண்டு வெள்ளிப் பதக்கம், ஒரு வெண்கலப் பதக்கம் வென்று பதக்கப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.
 • இந்தியாவுக்கு அடுத்ததாக, நார்வே 3 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம் என இரண்டாமிடத்தையும், பிரான்ஸ் 3 தங்கப் பதக்கத்துடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. இந்திய வீரர்களின் இந்த சாதனையை துப்பாக்கிச் சுடுதல் சம்மேளனம் வெகுவாக பாராட்டியுள்ளது.

உக்ரைன் அதிபருக்கு சர்வதேச அளவில் உயரிய விருது அறிவிப்பு

 • உக்ரைன் படைகளுக்கும், ரஷ்ய படைகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டு வருகிறது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, தலைநகர் கீவ்-வில் தங்கியிருந்து வீடியோ ஒன்றை வெளியிட்டு வருகிறார். வீரர்களை ஊக்கப்படுத்தி வருகிறார்.
 • இந்த நிலையில், ரஷ்யாவின் அனுதாபியான செக் குடியரசுத் தலைவர் மிலோஸ் ஜெமன், ரஷ்யப் படையெடுப்பை எதிர்கொள்ளும் துணிச்சலான உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கு உயரிய அரசு விருதை அறிவித்துள்ளார்.
மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திரு அஹந்தெம் பிமோல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார்
 • மணிப்பூர் உயர்நீதிமன்ற நீதிபதியாக திரு அஹந்தெம் பிமோல் சிங் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக இருந்த இவரை, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுடனான ஆலோசனைக்குப் பின் நீதிபதியாக குடியரசுத்தலைவர் நியமித்துள்ளார். 
 • 08.03.2022 அறிவிக்கையின்படி இவர் பொறுப்பேற்கும் நாளிலிருந்து நீதிபதியாக செயல்படுவார் என மத்திய சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் நீதிபதி நியமனங்கள்  பிரிவுத்துறை அறிவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel