Type Here to Get Search Results !

TNPSC 6th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

72 ஏக்கரில் சுண்ணாம்புக் கல் சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள பல்லுயிர் பெருக்க சூழலியல் பூங்கா முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்

 • சிமெண்ட் தயாரிக்கத் தேவையான மூலப் பொருட்களில் ஒன்றான சுண்ணாம்புக்கல்லை விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பந்தல்குடி கிராமத்தில் ராம்கோ நிறுவனம் எடுத்து வருகிறது. 
 • தற்போது 60 மீட்டர் ஆழம் வரை சென்றுள்ளது. அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழலைக் கருத்தில் கொண்டு அச்சுரங்கத்தை அப்படியே கைவிடாமல் ராம்கோ நிறுவனம் புதிய முயற்சியாக ரூ.5.20 கோடி மதிப்பில் மறுசீரமைப்பு செய்துள்ளது.
 • இந்தச் சுற்றுச்சூழல் பூங்காவில் நீர்நிலைப் பாதை, வறண்ட நிலத் தாவரங்கள், கற்றாழை அடினியம் தோட்டம், பந்தல் பூங்கா, புல்வெளி, கல் பூங்கா என பிரிக்கப்பட்டு பொதுமக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
 • இப்பூங்காவின் சுரங்கத்தில் உள்ள தேவையற்ற கற்கள் மற்றும் உள்ளூர் செடிகளால் உருவாக்கப்பட்டுள்ள கல் பூங்கா, நடைபாதை, 40 ஏக்கர் பரப்பளவில் அடர்வனம் (மியாவாக்கி) ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.
 • மேலும் விலங்குகளின் பல்லுயிர் ஆதாரங்களை உருவாக்கும் வகையில் நீர்நிலைப் பாதை, வறண்ட நிலத்தில் வளரும் தாவரங்கள், 200 வகையான மரங்கள், மூலிகைத் தாவரங்கள் நட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. 
 • இங்கு ஆயிரக்கணக்கான பறவைகள், வண்ணத்துப் பூச்சிகள், நுண்ணுயிரிகள் வசிக்கத் தொடங்கியுள்ளதால் இப்பூங்கா குறுங்காடு போல் காட்சியளிக்கிறது. 2023-ம் ஆண்டு முடிவில் 5 லட்சம் நாட்டு மரக்கன்றுகள் 400 ஏக்கர் பரப்பளவில் நடத் திட்டமிடப்பட்டுள்ளது.
 • இப்பூங்கா திறப்பு விழா பந்தல்குடியில் நேற்று மாலை நடைபெற்றது. விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தலைமை வகித்தார். வருவாய்த் துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன், தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் ஸ்டாலின் சுற்றுச்சூழல் பூங்காவை திறந்து வைத்துப் பார்வையிட்டார்.

இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் கபில்தேவின் சாதனையை முறியடித்த அஸ்வின்

 • இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, மொஹாலியில் கடந்த 4 -ம் தேதி தொடங்கியது. 
 • இதனிடையே, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்கள் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் கபில்தேவை பின்னுக்குத் தள்ளி ரவிச்சந்திரன் அஸ்வின் இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். 
 • இந்த டெஸ்ட்டில் அஸ்வின் இந்த சாதனையை வசப்படுத்தியுள்ளார். கபில்தேவ் 434 விக்கெட்கள் வீழ்த்தியிருந்த நிலையில் அஸ்வின் அந்த எண்ணிக்கையை 435 விக்கெட்டுகளை எடுத்து கடந்துள்ளார். 
 • இந்த பெருமை மிகு பட்டியலில் அணில் கும்ளே 619 விக்கெட்களுடன் முதலிடத்தில் உள்ளார்.
புனேவில் வானஸ்-கார்வார், பிசிஎம்சி-புகிவாடி இடையே புதிதாக மெட்ரோ ரெயில் பிரதமர் மோடி திறந்து வைத்தார்
 • மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் வானஸ்-கார்வார், பிசிஎம்சி-புகிவாடி இடையே புதிதாக மெட்ரோ ரெயில் இயக்க திட்டமிடப்பட்டது. இதற்காக ரூ.11,400 கோடி மதிப்பிட்டில் திட்டமிடப்பட்டது. இந்த திட்டத்துக்கு 2016ல் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் துவங்கப்பட்டு சுறுசுறுப்பாக நடந்தது.
 • இந்நிலையில் கார்வார் கல்லூரி முதல் ஆனந்த் நகர் வரையிலான 12 கிலோமீட்டர் மெட்ரோ பணிகள் முழுவதுமாக முடிவடைந்துள்ளன. பணிகள் முடிவடைந்துள்ளது. இதையடுத்து பிரதமர் நரேந்திர மோடி மெட்ரோ ரெயில் இயக்கத்தை பச்சைக் கொடியசைத்து துவக்கி வைத்தார்.
புனே சிம்பயாசிஸ் பல்கலைக்கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்
 • பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று புனேயில் சிம்பயாசிஸ் பல்கலைக் கழகத்தின் பொன்விழா கொண்டாட்டத்தை தொடங்கி வைத்தார். 
 • சிம்பயாசிஸ் ஆரோக்கிய வளாகத்தையும் அவர் துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், மகாராஷ்டிர மாநில ஆளுநர் திரு. பகத் சிங் கோஷ்யாரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel