கர்நாடகா நீர்ப்பாசன திட்டங்களுக்கு ரூ. 8,774 கோடி ஒதுக்கீடு
- மாநிலத்தில் நீர்ப்பாசன பகுதிகளை அதிகரிக்க, 2021 - 22ல், 8,774 கோடி ரூபாய் நீர்ப்பாசன திட்டங்களுக்கு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. விரைந்து திட்டங்கள் முடிவடையும். தண்ணீர் இருப்புக்கு தகுந்தபடி, திட்டங்கள் வகுக்கப்படும்.
- காளி ஆற்றின் தண்ணீரை பயன்படுத்தி, வட மாவட்டங்களுக்கு குடிநீர் வழங்க, திட்டம் வகுக்கப்பட்டுள்ளது
- மேற்கு நோக்கி பாயும் ஆறுகளுக்கு குறுக்கே, கின்டி அணை கட்டி கடலில் சேரும் தண்ணீரை தடுத்து, விவசாயத்துக்கும், குடிநீருக்கும் பயன்படுத்ததும் நோக்கில், 'பக்ஷிம வாகினி' திட்டத்தின் முதற்கட்ட பணிகள், 500 கோடி ரூபாயில் துவங்கும்
- மாநில கடலோர பகுதிகளில், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் போதும், கடலில் எழும் அலைகளால் உப்பு நீர் நுழைவதை தடுக்கவும், 1,500 கோடி ரூபாய் செலவிலான திட்டத்துக்கு, அனுமதி அளிக்கப்பட்டது.
- தற்போது உத்தரகன்னடாவில் பணிகள் துவங்குகிறது. தட்சிண கன்னடா, உடுப்பி மாவட்டங்களிலும் இத்திட்டம் செயல்படுத்தப்படும்
- மாநிலத்தின் ஏரிகளை அபிவிருத்தி செய்ய, 500 கோடி ரூபாய் செலவில், விரிவான திட்டம் வகுக்கப்படும். வெள்ளப்பெருக்கால் சேதமடைந்த ஏரிகளை சீரமைத்து, தண்ணீர் சேகரிப்பு திறனை அதிகரிக்க, 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
மத்திய படைகளுக்கு ரூ.1,523 கோடி ஒதுக்கீடு
- சி.ஏ.பி.எப்., எனப்படும், மத்திய ஆயுத காவல் படையில், எல்லைப் பாதுகாப்புப் படை, மத்திய ரிசர்வ் போலீஸ் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை, இந்தோ - திபெத்திய எல்லை காவல்படை, தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன.
- இந்தப் படையின் வீரர்கள் தான் ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளிலும், பாகிஸ்தான், வங்கதேசம், சீனா, மியான்மர், நேபாளம், பூட்டான் ஆகிய நம் அண்டை நாடுகளின் எல்லைப் பகுதிகளில், பாதுகாப்பு பணிகளிலும் ஈடுபட்டுள்ளனர்.
- இந்நிலையில், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு, சி.ஏ.பி.எப்., படைகளின் தகவல் தொழில்நுட்ப உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், படைப் பிரிவுகளுக்கு தேவையான ஆயுதங்களை கொள்முதல் செய்யவும், 1,523 கோடி ரூபாயை, மத்திய அரசு நேற்று ஒதுக்கியது.
நாட்டின் பொருளாதார வளர்ச்சி 'குளோபல் டேட்டா' கணிப்பு
- இந்தியாவின் நடப்பு ஆண்டுக்கான பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதமாக இருக்கும் என, லண்டனை சேர்ந்த ஆலோசனை நிறுவனமான 'குளோபல் டேட்டா' தெரிவித்துள்ளது.
- உக்ரைன் தாக்குதல் காரணமாக, வளர்ச்சி குறித்த இதற்கு முந்தைய கணிப்பை விட, தற்போது குறைத்து அறிவித்துள்ளது.
- நாட்டின் இறக்குமதியை பொறுத்தவரை, உக்ரைன் மற்றும் ரஷ்யாவின் பங்கு, மொத்த இறக்குமதியில் 2.2 சதவீதமாகும். இது, கடந்த 2020ம் ஆண்டு நிலையாகும்.
- உக்ரைன் போர் காரணமாக, நாட்டின் பணவீக்க விகிதம், நடப்பு ஆண்டில் 5.5 சதவீதமாக இருக்கும் என்று இந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இது, கடந்த 2021ல் 5.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
Human Space Flight Centre-க்கு புதிய இயக்குநராக உமாமகேஸ்வரன்
- HSFC-ன் தற்போதைய முந்தைய இயக்குநராக இருந்த உன்னிகிருஷ்ணன் நாயர், விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரின் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- தற்போது HSFC-யின் இயக்குநராக நியமிக்கப்பட்டிருக்கும் உமாமகேஸ்வரன், 1987-ல் விக்ரம் சாராபாய் ஸ்பேஸ் சென்டரில் பணியில் இணைந்தார்.
- இஸ்ரோவின் செயற்கைக்கோள் ஏவுதல் வாகனங்களான PSLV, GSLV மற்றும் GSLV-Mk III ஆகியவற்றின் உருவாக்கத்தில் இவருடைய பங்கும் இருந்திருக்கிறது.
டெஸ்ட் கிரிக்கெட்டில் புதிய சாதனையை நிகழ்த்திய விராட் கோலி
- டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைக் கடந்த 6-வது இந்திய வீரர் என்கிற பெருமையை விராட் கோலி அடைந்துள்ளார். இந்நிலையில் இன்று 38 ரன்களை எடுத்தபோது டெஸ்ட் கிரிக்கெட்டில் 8,000 ரன்களைப் பூர்த்தி செய்தார் விராட் கோலி.
- இந்த இலக்கை எட்டிய 6-வது இந்திய வீரர் என்கிற பெருமையைப் பெற்றார்.
- குறைந்த இன்னிங்ஸில் 8000 டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய வீரர்கள்
- 154 - சச்சின் டெண்டுல்கர்
- 158 - ராகுல் டிராவிட்
- 160 - சேவாக்
- 166 - கவாஸ்கர்
- 169 - கோலி
- பிரதமர் உரையாற்றும் பட்ஜெட்டுக்கு பிந்தைய தொடர் இணைய வழிக் கருத்தரங்கில் இது ஒன்பதாவது ஆகும். நீடித்த வளர்ச்சிக்கான எரிசக்தி இந்திய பாரம்பரியத்தை எதிரொலிப்பதுடன், வருங்காலத் தேவைகள் மற்றும் விருப்பங்களை எட்டுவதற்கு ஒரு வழியாகவும் உள்ளது என பிரதமர் கூறினார்.
- நீடித்த எரிசக்தி வளங்கள் மூலம் மட்டுமே நீடித்த வளர்ச்சியை அடைய முடியும் என அவர் தெரிவித்தார். 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வை அடைய கிளாஸ்கோ மாநாட்டில் உறுதி பூண்டதை பிரதமர் குறிப்பிட்டார்.
- சுற்றுச்சூழல் ரீதியில் நீடித்த வாழ்க்கை முறை என்ற தமது தொலைநோக்கையும் அவர் குறிப்பிட்டார். சர்வதேச சூரியசக்தி கூட்டணி போன்ற உலக ஒத்துழைப்புகளில் இந்தியா தலைமை நிலையை வழங்கி வருகிறது.
- 2030 ஆம் ஆண்டுக்குள் புதை படிமம் அற்ற எரிசக்தி மூலம் 50 சதவீத எரிசக்தி நிறுவுத் திறனை அடையவும், 500 ஜிகாவாட் படிமம் அற்ற எரிசக்தித் திறனை எட்டவும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதை அவர் குறிப்பிட்டார்.
- மோனோலித்திக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகளை (MMICs), ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு மையம் (டிஆர்டிஓ) உருவாக்கியுள்ளது.
- இது இஸ்ரோ கடந்த பிப்ரவரி 14ம் தேதி விண்ணில் ஏவிய புவி கண்காணிப்பு செயற்கை கோள் இஓஎஸ் 04-ல் உள்ள ரேடாரில் பயன்படுத்தப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.
- பல மோனோலித்திக் மைக்ரோவேவ் ஒருங்கிணைந்த சுற்றுகள் (MMIC), டிஆர்டிஓ-வின் திடநிலை இயற்பியல் ஆய்வகத்திலும், கலிலியம் ஆர்சனேட் தொழில்நுட்ப மையத்திலும் (கேடெக்) வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளன.
- இந்த எம்எம்ஐசி சுற்றுகளை பயன்படுத்திதான், செயற்கைகோளில் உள்ள படம்பிடிக்கும் ரேடாரில் பயன்படுத்தப்படும் டிஆர்-தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.
- பல்வேறு விண்வெளி திட்டங்களுக்காக கேடெக் மையத்தில் 30,000க்கும் மேற்பட்ட டிஆர்- தொகுதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
- மத்திய அரசின் இரண்டு முன்னணி தொழில்நுட்ப துறைகள், பல்வேறு தொழில்துறை நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்ட கூட்டு சாதனைக்கு இது உதாரணமாக உள்ளது.
- உள்நாட்டில் உருவாக்கப்பட்ட எம்எம்ஐசிக்கள், தற்சார்பு இந்தியா நடவடிக்கையில் முக்கியமான முன்னேற்றமாக கருதப்படுகிறது.
- ராஜஸ்தான் உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக திரு மணீந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய அரசியல் சட்டத்தின் 223-வது பிரிவு அளித்துள்ள அதிகாரத்தின்படி குடியரசுத் தலைவர் இந்த நியமன அறிவிப்பை 04.03.2022-ல் வெளியிட்டுள்ளார். இந்த அறிவிப்பு 07.03.2022-ல் இருந்து அமலுக்கு வரும்.