Type Here to Get Search Results !

TNPSC 26th MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

இலவச ரேஷன் திட்டம் - செப்டம்பர் மாதம் வரை நீட்டித்து அமைச்சரவை கூட்டம் ஒப்புதல்

  • பொருளாதார நெருக்கடி, வருவாயின்மை ஆகியவற்றால் மக்கள் அவதிப்பட்டனர். இதன்காரணமாக கோடிக்கணக்கான மக்களைப் பாதுகாக்கும் வகையில் பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.
  • இத்திட்டத்தின் மூலம் தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கிடைக்கும் உணவு தானியத்துடன், ஒரு வீட்டுக்கு ஒரு மாதத்திற்கு கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் கிடைக்கப்பெறும். 
  • இதனால் ஊரடங்கு, கொரோனாவால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்ந்து பயன்பெற்று வருகின்றனர். கொரோனா ஓரளவு கட்டுக்குள் வந்தபோதும் இத்திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வந்தது.
  • கடந்த ஆண்டு நவம்பரில் அடுத்த 4 மாதங்களுக்கு திட்டம் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதன்படி, 2022, மார்ச் வரை இது அமலில் இருக்கும். 
  • இந்நிலையில், பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தினை அடுத்த 6 மாதங்களுக்கு நீட்டித்து பிரதமர் உத்தரவிட்டு உள்ளார்.
  • பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
  • இந்த ஆண்டு செப்டம்பர் வரை நீடிக்கப்பட்டுள்ள இலவச ரேசன் திட்டத்துக்காக 80 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

துபாயில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ரூ.2,600 கோடி முதலீட்டுக்கு ஒப்பந்தம்

  • துபாயில் நடைபெற்ற ஐக்கிய அரபு நாடுகளின் முதலீட்டாளர்கள் சந்திப்பின்போது, துபாயைச் சேர்ந்த ஒயிட் ஹவுஸ் நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 3,000 பேருக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் இரு ஒருங்கிணைந்த தையல் ஆலைகள் நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • நோபுள் ஸ்டீல்ஸ் நிறுவனம் ரூ.1,000 கோடி முதலீட்டில் 1,200 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் டிரான்ஸ்வேல்டு குழுமம் ரூ.100 கோடி முதலீட்டில் 1,000 பேருக்கு வேலைவாய்ப்பும் ஆஸ்டர் டிஎம் ஹெல்த்கேர் அமைப்பு ரூ.500 கோடி முதலீட்டில் 3,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பும் ஷெராப் குழும நிறுவனம் ரூ.500 கோடி முதலீட்டில் 1,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையிலும் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
  • இந்தியாவிலேயே முதல்முதலாக தூத்துக்குடி துறைமுகத்தில் சர்வதேச அறைகலன் பூங்காவுக்கு (பர்னிச்சர் பார்க்) அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டிய அன்றே, 375 மில்லியன் டாலர் அளவுக்கு முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன.
  • கரோனா பெருந்தொற்று நேரத்திலும் கடந்த 10 மாதங்களில் மட்டும் 800 கோடி டாலர் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் 120 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டு, புதிதாக 2 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட் டுள்ளன. கடந்த 2020-2021-ம் நிதி ஆண்டில் தமிழகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி 5.8 சதவீதமாக இருந்தது.

நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் அமைந்தது எஃகு சாலை

  • நாட்டில் முதன்முதலாக குஜராத்தில் எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் உள்ள எஃகு ஆலைகள் ஆண்டொன்றுக்கு 1.9 கோடி டன் எஃகு கழிவுகளை வெளியேற்றுவதாக கூறப்படுகிறது. 
  • இது போன்ற கழிவுகளை நிலத்தில் வீணாக கிடப்பதற்கு பதிலாக சாலை போட பயன்படுத்த முடிவு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து குஜராத்தின் சூரத் நகரில் ஹசிரா தொழிற்பேட்டையில் எஃகு கழிவுகளை கொண்டு சாலை அமைக்கப்பட்டது. 
  • எஃகு துறை அமைச்சகம் மற்றும் கொள்கை ஆணையம் மற்றும் நிதி ஆயோக் ஆகியவற்றின் உதவியுடன் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் (சி.எஸ்.ஐ.ஆர்.) மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் (சி.ஆர்.ஆர்.ஐ.) இதற்கு நிதியுதவி செய்தது. 
  • இந்த முன்னோடி சாலை திட்டம் 1 கிலோ மீட்டர் நீளத்திற்கு, 6 வழி நெடுஞ்சாலையாக அமைக்கப்படுகிறது. வழக்கம்போல் பயன்படுத்தும் பிற பொருட்களுக்கு பதிலாக, 100 சதவீதம் எஃகு பொருட்களை பயன்படுத்தியே இந்த சாலை உருவாக்கப்படுகிறது. 
  • சாலையின் தடிமனும் 30 சதவீதம் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால், பருவ காலங்களில் ஏற்படும் சேதத்தில் இருந்து இந்த புதிய முறையானது சாலைகளை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. 
  • இதுபோன்ற முன்னோடி திட்டத்தின் வெற்றியால், நெடுஞ்சாலை உருவாக்க பணிகளில் இந்த எஃகு கழிவுகளை பயன்படுத்தி வருங்காலத்தில் வலிமையான சாலைகளை அமைப்பதற்கு மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.

உத்தரகாண்டில் முதல் பெண் சபாநாயகராக ரிது கந்தூரி தேர்வு

  • உத்தரகாண்டில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கோத்வார் தொகுதியில் பாஜ சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ரிது காந்தூரி, முன்னாள் முதல்வர் பி.சி.கந்தூரியின் மகள். 
  • இந்நிலையில், இம்மாநில சட்டப்பேரவையில் சபாநாயகரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் எதிர்கட்சியான காங்கிரஸ் வேட்பாளரை நிறுத்தாமல் விலகியது. 
  • இதனை தொடர்ந்து போட்டியின்றி ரிது கந்தூரி சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
  • உத்தரகாண்ட் சட்டப்பேரவையில் பெண் ஒருவர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது இதுவே முதல் முறையாகும். 

தூத்துக்குடி உட்பட 21 இடங்களில் சைனிக் பள்ளி - ஒன்றிய அரசு ஒப்புதல்

  • பிரதமர் மோடியின் தொலைநோக்கு பார்வையில் உருவான இத்திட்டத்தில் முதல்கட்டமாக 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி வழங்கியது. 
  • தனியார் துறையுடன் இணைந்து 21 புதிய சைனிக் பள்ளிகள் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும். 
  • புதிய சைனிக் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 6ம் வகுப்பு முதல் இருக்கும்' என கூறப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளி ஒன்றுடன் இணைந்து சைனிக் பள்ளி அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

LGBTQ மாணவர்களுக்கு பாலின சமத்துவ வளாகம் - தேசிய சட்ட கல்வி நிறுவனம் அறிவிப்பு

  • அனைத்து பாலினத்தவருக்கும் சம உரிமை அளிக்கும் வகையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக NALSAR எனப்படும் தேசிய சட்டக்கல்வி மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது.
  • எங்கள் பல்கலைக் கழக வளாகத்தில் தரைத்தளத்தில் அமைந்துள்ள GH 6 என்ற பகுதி, LGBTQ வகுப்பினருக்கென பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி மற்ற LGBTQ வகுப்பினர் ஒருவரையொருவர் அறிந்து கொள்ளலாம்.
  • அவர்களது கல்விக்கான அட்மிஷனுடன் விடுதியில் சிறப்பு அறைகள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள மற்ற அறைகளும் பாலின சமத்துவத்திற்கு ஏற்பட வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • முன்னதாக மும்பையில் செயல்பட்டு வரும் டாடா இன்ஸ்டிடியூட் ஆஃப் சோசியல் சைன்சஸ் கல்வி நிறுவனம், இந்தியாவிலேயே முதன்முறையாக பாலின சமத்துவத்துடன் விடுதியை கடந்த 2018-ல் அமைத்தது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச புகைப்பட விருதை பெறும் தமிழர் செந்தில்குமரன்

  • பிரபல போட்டோகிராபர் செந்தில்குமரன் மதுரையை சேர்ந்தவர். இவர் போட்டோகிராபி துறையில் பல அசத்தல்களை நிகழ்த்தி வருகிறார். 
  • இவர் பெற்ற விருதுகளின் வரிசையில் முக்கியமான விருதுகளின் வரிசையில், 2007ம் ஆண்டு, லண்டன் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படக் கலைஞருக்கான விருது கிடைத்தது. 
  • மேலும், மற்றொரு ஐகானிக் புகைப்படமான கங்கை ஆற்றின் கரையோரம் காயப் போடப்பட்டிருந்த சேலைகளின் புகைப்படமானது வைலானது. அதை அவர் ராயல் ஜியாகிரபிகல் சொசைட்டியின் சிறந்த புகைப்படத்திற்கான போட்டிக்கு அனுப்பி வைத்தார். 
  • இந்நிலையில், வனவிலங்கு சார்பாக அவர் எடுத்த புகைப்படத்திற்கு தற்போது ஒரு விருது கிடைந்துள்ளது. வேர்ல்டு பிரஸ் போட்டோ என்ற அமைப்பின் பத்திரிகை புகைப்பட கலைஞருக்கான விருதை இவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச விருதை தமிழர் ஒருவர் வெல்வது இதுவே முதல் முறை ஆகும்.
உலக பாரம்பரிய மருத்துவ மையம் அமைப்பதற்கான உடன்படிக்கையில் மத்திய ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு கையெழுத்து
  • குஜராத்தின் ஜாம்நகரில் உலக சுகாதார அமைப்பின் உலகப்  பாரம்பரிய மருத்துவ மையம் அமைப்பதற்கான ஒப்பந்தத்தில் உலக சுகாதார அமைப்புடன் மையத்தின் தாயகமான இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 
  • இதன் இடைக்கால அலுவலகம் குஜராத்தின் ஆயுர்வேத ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில்  இயங்கும். மத்திய அரசின் 250 மில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டுடன் இந்த மையம் செயல்படும். 
  • உலக மக்களின் ஒட்டுமொத்த சுகாதாரத்தை முன்னேற்றுவதற்கான, உலகம் முழுவதும் உள்ள பாரம்பரிய மருத்துவ வளத்தை நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலமாக மேம்படுத்துவதே இதன் நோக்கமாகும்.
  • ஜெனிவாவில் மார்ச் 25-ம்தேதி மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் செயலர் வைத்யா ராஜேஷ் கொட்டேச்சா, உலக சுகாதார அமைப்பின் தலைமை இயக்குநர் டாக்டர் டெட்ரோஸ் அதானம் கெப்ரியேசஸ் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்த மையத்தை நிறுவுவதற்கு கடந்த மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்திருந்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel