TNPSC 23rd MARCH 2022 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

 

ஐ.நா.வில் ரஷியத் தரப்பில் தீர்மானம் - இந்தியா புறக்கணிப்பு

 • ரஷிய அதிபர் புதினின் உத்தரவை தொடர்ந்து உக்ரைன் நாட்டின் மீது ரஷிய படைகள் தொடர் தாக்குதலை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர்.
 • உக்ரைனின் பல்வேறு முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள ரஷியப் படைகள் தலைநகர் கீவ்வை நோக்கி முன்னேறி வருகின்றனர்.
 • இந்நிலையில், புதன்கிழமை கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில், உக்ரைனில் உள்ள மக்களின் நிலை தொடர்பாக ரஷியத் தரப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
 • இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக ரஷியா மற்றும் சீனா வாக்களித்த நிலையில், இந்தியா உள்பட 13 நாடுகள் வாக்களிக்காமல் புறக்கணித்துள்ளது.
 • முன்னதாக, ரஷியா நடத்தும் தாக்குதலுக்கு எதிராக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல முறை கொண்டு வந்த தீர்மானத்திற்கும் இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

முதன் முறையாக நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் சரக்கு ஏற்றுமதி 400 பில்லியன் டாலராக உயர்வு

 • நடப்பு நிதி ஆண்டில் இந்தியா, சரக்குகள் (400 பில்லியன் டாலர்) மற்றும் சேவைகள் (250 பில்லியன் டாலர்) என மொத்தமாக 650 பில்லியன் டாலர் அளவில் ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்து இருந்தது.
 • இந்நிலையில் நிதி ஆண்டு முடிய இன்னும் 9 தினங்கள் உள்ள நிலையில், சரக்குகள் ஏற்றுமதியில் திட்டமிட்ட இலக்கு எட்டப்பட்டுள்ளது. 2020-21-ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் இது 37 சதவீத உயர்வு ஆகும். 2020-21-ம் நிதி ஆண்டில் 292 பில்லியன் டாலர் அளவில் இந்தியா ஏற்றுமதி செய்தது.
 • அந்த வகையில் நடப்பு நிதி ஆண்டில் ஒவ்வொரு மாதமும் 33 பில்லியன் டாலர் அளவில் சரக்குகள் ஏற்றுமதி ஆகியுள்ளன. பெட்ரோலியம் தயாரிப்புகள், மின்னனு சாதனங்கள், பொறியியல் பொருட்கள், தோல், காஃபி, பிளாஸ்டிக், ஜவுளிகள், இறைச்சி மற்றும் பால் தயாரிப்புகள், புகையிலை உள்ளிட்டவை ஏற்றுமதி வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகித்துள்ளன.

ஜம்மு காஷ்மீருக்கு ரூ.1.42 லட்சம் கோடி ஒதுக்கீடு

 • ஜம்மு காஷ்மீருக்கு பட்ஜெட்டில் ரூ.1.42 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்வதற்கு மக்களவை ஒப்புதல் அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு 2022-23ம் ஆண்டுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட 2 மசோதாக்களை மாநிலங்களவை திருப்பி அனுப்பியது. இந்நிலையில், ஜம்மு காஷ்மீருக்கான ரூ.1.42 லட்சம் கோடி பட்ஜெட்டுக்கு மக்களவை ஒப்புதல் அளித்தது. 

அந்தமான் நிகோபார் தீவில் நடத்தப்பட்ட பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி

 • ஒன்பது மீட்டர் நீளமுள்ள ஏவுகணை ஒலியை விட மூன்று மடங்கு வேகத்தில் பயணிக்கக்கூடியது மற்றும் 300 கிலோ எடையை சுமந்து செல்லும் திறன் வாய்ந்தது. 
 • ஒரு நிலபரப்பிலிருந்து இன்னொரு நிலபரப்புக்கு சென்று தாக்கும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணையை இந்திய பாதுகாப்புத்துறை அந்தமான் நிக்கோபாரில் வெற்றிகரமாக பரிசோதித்தது.

புதுச்சேரி பேராசிரியருக்கு செவாலியே விருது - பிரான்ஸ் அரசு அறிவிப்பு

 • புதுச்சேரியை சேர்ந்த பேராசிரியர் ஒருவருக்கு பிரான்ஸ் அரசு செவாலியே விருது வழங்கி கௌரவித்துள்ளது.
 • 40 ஆண்டுகால பிரென்ச் கற்பித்தல் பணியில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் நல்லதம்பி என்பவருக்கு பிரான்ஸ் அரசின் உயரிய விருதான செவாலியே விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது
 • இதற்கு முன்னர் இந்த விருதை இந்திய அளவில் இயக்குநர் சத்யஜித்ரே, நடிகர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன் ஆகியோர் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

நீச்சல் வீரர்களுக்கு நிதி அளிக்க ஒப்புதல் அளித்த விளையாட்டு அமைச்சகம்

 • மிஷன் ஒலிம்பிக் செல்லின் ஒப்புதலை பெற்ற பிறகு சஜன் பிரகாஷ், ஸ்ரீஹரி நடராஜ், மானா படேல் மற்றும் கெனிஷா குப்தா ஆகிய வீரர்களுக்கு இந்த நிதியுதவி கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 • இதன் மூலம் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ள ஆகும் செலவுகள், பயிற்சி முகாம்களில் பங்கேற்க ஆகும் செலவுகள் மாதிரியானவை கிடைக்கும் எனத் தெரிகிறது.
 • ஐந்து வீரர்களில் சஜன் வரும் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெற உள்ள முக்கியமான சில நீச்சல் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். சஜன் பிரகாஷ் மற்றும் ஸ்ரீஹரி டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 • இந்த நிதி உதவியின் கீழ் வீரர்களுக்கான பயிற்சியாளர் மற்றும் பிஸியோதெரபிஸ்ட் கட்டணமும் அடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஊக்கம் மிக்க 3 பெண்கள் நித்தி ஆயோக்-இன் ‘இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள்’ விருதுகளைப் பெற்றுள்ளனர்
 • ‘வலிமையும், திறமையும் மிக்க இந்தியா’ என மாற்றத்தை ஏற்படுத்துவதில் பெண்கள் தொடர்ந்து முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றனர். 
 • பல்வேறு துறைகளில் இத்தகைய பெண்களின் குறிப்பிடத்தக்க சாதனைகளுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், நித்தி ஆயோக் இந்தியாவின் மாற்றத்திற்கான பெண்கள் விருதுகளை நிறுவியுள்ளது.
 • இந்த ஆண்டு இந்திய சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழாவின் பகுதியாக 75 பெண் சாதனையாளர்களுக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. இவற்றில் 3 தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பெண்கள் விருதுகளைப் பெற்றுள்ளனர்.
 • வித்யா சுப்பிரமணியன், சென்னை, வித்யா சுப்பிரமணியன் கல்வி நிறுவனம்
 • டாக்டர் ரம்யா எஸ்.மூர்த்தி, சென்னை, நிர்மயா இன்னவேஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
 • தேவிபாலா உமாமகேஸ்வரன், சென்னை, பிக்ஃபிக்ஸ் கேட்ஜெட் கேர் எல்எல்பி
ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் தமிழகத்துக்கு ரூ.250 கோடி ஒதுக்கீடு
 • நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டை போக்க, ஊட்டசத்து திட்டம் கடந்த 2018ம் ஆண்டு, மார்ச் 8ம் தேதி தொடங்கப்பட்டது.  6 வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பெண்கள், கர்ப்பினி பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலவரத்தை மேம்படுத்துவதை இத்திட்டம் நோக்கமாக கொண்டுள்ளது.
 • ஊட்டச்சத்து திட்டத்தின் கீழ் 2022 ஜனவரி 1ம் தேதி வரை மாநிலங்களுக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி மற்றும் செலவிடப்பட்ட நிதி விவரங்கள் இணைப்பில் கொடுக்கப்பட்டுள்ளன.
 • தமிழகத்துக்கு ரூ. 250 கோடியே  60 லட்சத்து 44 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது. இதில் ரூ.218 கோடியே 79 லட்சத்து 36 ஆயிரத்தை தமிழகம் பயன்படுத்தியுள்ளது.
கழிவுநீர் மேலாண்மைக்கான சுஜ்லம் 2.0 பிரசாரம் - மத்திய ஜல்சக்தி அமைச்சர் தொடக்கம்
 • கழிவுநீர் மேலாண்மைக்கான சுஜ்லம் 2.0 பிரசாரத்தை மத்திய ஜல்சக்தி அமைச்சர் திரு. கஜேந்திர சிங் செகாவத் காணொலி காட்சி மூலம்  தொடங்கி வைத்தார். உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு குடிநீர் மற்றும் வடிகால் துறை இந்நிகழ்ச்சியை நேற்று நடத்தியது.
 • இந்நிகழ்ச்சியில் கழிவுநீர் மேலாண்மை குறித்து கூட்டு ஆலோசனை ஒப்பந்தத்தில் ஜல்சக்தி அமைச்சகம் உட்பட மத்திய அரசின்  9 அமைச்சகங்கள் கையெழுத்திட்டன.
 • கழிவு நீர் மேலாண்மையில், உலகளவில் மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை, யுனிசெப் அமைப்பின் தண்ணீர் மற்றும் சுகாதாரப் பிரிவு தலைவர் திரு. நிகோலஸ் ஆஸ்பெர்ட் பகிர்ந்து கொண்டார்.

0 Comments