உத்தரகண்ட் முதல்வராக புஷ்கர் சிங் தாமி, கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் தேர்வு
- கோவா மாநில முதல்வரை தேர்ந்தெடுப்பதற்கான எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் பணஜியில் நடந்தது. இதில், பா.ஜ., மத்திய பார்வையாளர்கள் நரேந்திர சிங் தோமர், எல்.முருகன், கோவா தேர்தல் பொறுப்பாளர் தேவேந்திர பட்னவிஸ், மாநில தலைவர் சதானந்த் ஷேத் தனவாடே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- இக்கூட்டத்தில், கோவா முதல்வராக பிரமோத் சாவந்த் இரண்டாவது முறையாக ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- உத்தரகண்ட் முதல்வராக பதவி வகித்து வந்த பா.ஜ.,வை சேர்ந்த புஷ்கர் சிங் தாமி, சமீபத்தில் நடந்த தேர்தலில் தோல்வி அடைந்தார்.
- டேராடூனில் நடந்த எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தில், கட்சியின் மத்திய பார்வையாளரும், ராணுவ அமைச்சருமான ராஜ்நாத் சிங், புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமியின் பெயரை முன் மொழிந்தார்.
- இதற்கு பா.ஜ, - எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக ஆதரவு அளித்தனர். இதையடுத்து புதிய முதல்வராக புஷ்கர் சிங் தாமி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு 20222
- இந்தியா, ஆஸ்திரேலியா இடையேயான உச்சி மாநாடு நேற்று நடந்தது. இதில், 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசினர்.
- இந்தியா – ஆஸ்திரேலியா இடையே 2-ஆவது மெய்நிகர் மாநாட்டில் பிரதமர் திரு நரேந்திர மோடி ஆஸ்திரேலிய பிரதமர் திரு ஸ்காட் மோரிசன் உரையாற்றினார்கள். அப்போது இருநாடுகளுக்கு இடையேயான நட்புறவு மற்றும் பிராந்திய சர்வதேச விவகாரங்கள் குறித்து, இருதலைவர்களும் விவாதித்தனர்.
- நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லேண்டில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக பிரதமர் திரு மோடி கூறினார்.
- 2020 ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற முதலாவது காணொலிக் காட்சி மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்த நடவடிக்கைகளின் செயலாக்கம் குறித்து இருதலைவர்களும் திருப்தி தெரிவித்தனர்.
- இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகம் மற்றும் முதலீடு, ராணுவம் மற்றும் பாதுகாப்பு, கல்வி மற்றும் புதிய கண்டுபிடிப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கனிம வளங்கள், நீர் மேலாண்மை, புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி தொழில்நுட்பம், கோவிட் 19 தொடர்பான ஆராய்ச்சி உள்ளிட்ட துறைகளில் இணைந்து செயல்படுவது குறித்து பிரதமர் திரு மோடி திருப்தி தெரிவித்தார்.
- ஆஸ்திரேலியாவில் இருந்து 29 பழமையான கலைப் பொருட்களை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பியதற்காக திரு ஸ்காட் மோரிசனுக்கு பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார். இது இந்தியாவின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 9-ஆவது மற்றும் 10-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய சிற்பங்கள், ஓவியங்கள் உள்ளிட்டவையாகும்.
- மேலும் 12 ஆம் நூற்றாண்டு சோழர்களின் வெண்கலங்கள், 11, 12 ஆம் நூற்றாண்டின் ராஜஸ்தானைச் சேர்ந்த ஜெயின் சிற்பங்கள், குஜராத்தில் 12, 13 ஆம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மணல் கற்களால் செய்யப்பட்ட மஹிசாசூரமர்த்தினி சாமி சிலைகள், 18, 19 ஆம் நூற்றாண்டின் ஓவியங்கள் ஆகியவையும் அடங்கும்.
- பல்வேறு துறைகளில் விரிவான சிறப்பு கவனம் செலுத்துவது தொடர்பாக கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. அதன்படி, இருநாட்டு பிரதமர்களுக்கு இடையே வருடாந்திர மாநாடுகளை நடத்துவது என்று ஒப்புக் கொள்ளப்பட்டது. இதன்மூலம் இருதரப்பு உறவுகளில் மேலும் சிறப்பு பரிமாணத்தை ஏற்படுத்தும்.
மேகேதாட்டு அணைக்கு நிதி ஒதுக்கிய கர்நாடக அரசை கண்டித்து தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்
- தமிழக சட்டப்பேரவையில், காவிரியின் குறுக்கே மேகேதாட்டு வில் கர்நாடக அரசு அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் கொண்டு வரப் பட்டது. தீர்மானத்தை நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் முன்மொழிந்தார்.
- இந்த தீர்மானத்தை உறுப்பினர் கள் அனைவரும் முழுமனதுடன் ஆதரிக்க வேண்டும் என்று அமைச்சர் துரைமுருகன் கேட்டுக் கொண்டார்.
- இதையடுத்து, அமைச்சர் முன்மொழிந்த தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
தமிழகத்தின் முதல் பெண் துபாஷ் ராஜலட்சுமி
- தமிழக சட்டமன்றத்தில் (Tamilnadu Assembly) துபாஷ் என்ற பதவி ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இருந்து இன்று வரை தொடரும் ஒரு பணியாகும்.
- சட்டமன்ற வளாகத்தில் உள்ள சபாநாயகர் அறையில் இருந்து சட்டமன்றம் வரை சபாநாயகர் செல்லும் போது முன்னே செல்லும் சபாநாயகரின் உதவியாளர், துபாய் என்று அழைக்கப்படுவார்.
- சபாநாயகர் பேரவையில் இருக்கும்போது பேரவைக்கு வெளியில் காத்திருப்பார் மீண்டும் சபாநாயகர் அவர் அறைக்குச் செல்லும்போது உடன் செல்வார்
- 1990 ஆம் ஆண்டு சட்டமன்ற அலுவலகத்தில் உதவியாளராக பணியில் சேர்ந்த ராஜலட்சுமி என்பவர் இந்த பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
- இதற்கு முன் இந்த பொறுப்பில் ஆண்களே இருந்து வந்த நிலையில் பெண் ஒருவர் இந்த பொறுப்புக்கு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ.230 கோடியில் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை - மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
- மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 97-வது பிறந்தநாளை முன்னிட்டு, 2021-ம் ஆண்டு ஜூன் 3-ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில், சென்னை கிண்டியில் உள்ள கிங் நோய் தடுப்பு மற்றும்ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் (கிங் இன்ஸ்டிடியூட்) ரூ.250 கோடிமதிப்பீட்டில் 500 படுக்கைகளுடன் கூடிய பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அமைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
- இதைத்தொடர்ந்து, சுகாதாரத் துறை சார்பில் பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனை கட்டுவதற்காக கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் 4.89 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டது.
- இந்நிலையில், பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- பன்னோக்கு மருத்துவமனை கட்ட ரூ.230 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தரைதளம் மற்றும்6 மேல் தளங்களுடன் 51,429 சதுரமீட்டர் பரப்பளவில் கட்டப்படவுள்ள இந்த மருத்துவமனையில் 1,000 படுக்கைகள் அமையவுள்ளன.
ஐ.நா., உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினராக இந்தியர் நியமனம்
- சர்வதேச பிரச்னைகளில், குறிப்பாக பெண்கள், இளைஞர்கள், வரும் தலைமுறையினரின் நலன் சார்ந்து எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து 'பொது செயல் திட்டம்' என்ற அறிக்கையை ஐ.நா., உயர்மட்டக் குழு உருவாக்கியுள்ளது.
- இதன் அடிப்படையிலான செயல்பாடுகளை நடைமுறைப்படுத்த, சுவீடன் முன்னாள் பிரதமர் ஸ்டீபன் லோப்வன் உள்ளிட்டோர் தலைமையில், 12 பேர் அடங்கிய உயர்மட்டக் குழுவை ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரஸ் அமைத்துள்ளார்.
- இக்குழுவில் இந்தியாவைச் சேர்ந்த பொருளாதார வல்லுனர் ஜெயதி கோஷ் நியமிக்கப்பட்டுஉள்ளார். இவர், ஜவஹர்லால் நேரு பல்கலை.,யில் பொருளாதார கல்வி மற்றும் திட்டப் பிரிவின் தலைவராக பணியாற்றியவர். தற்போது மாசாசூசெட்ஸ் அம்ஹெர்ஸ் பல்கலை பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.
"நன்செய் வரி, புஞ்சை வரி" - மதுரையில் 17ம் நூற்றாண்டு வரி விதிப்பு கல்வெட்டு கண்டுபிடிப்பு
- மருதங்குடி அருகே நாயக்கர் கால சத்திரங்களைப் பற்றி கள ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, அப்பகுதியில் நாயக்கர் கால கல்வெட்டு ஒன்று இருப்பதாக கிடைத்த தகவலின் பேரில் அக்கிராமத்தில் உள்ள சோமிகுளம் கண்மாய் கரையில் இருந்த கல்வெட்டை படியெடுத்து ஆய்வு செய்தனர். அந்த ஆய்வில் இக்கல்வெட்டு 4 அடி உயரமும், ஒரு அடி அகலமும் இருபுறமும் 24 வரிகளைக் கொண்டதாகவும் இருந்தது.
- இந்த கல்வெட்டில் ஊரின் பெயரும், சோமிகுளம் கண்மாய் பெயரும் குறிப்பிடப்பட்டு உள்ளதோடு கண்மாய் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்கு விவசாயம் அதிகமாக நடைபெறும் காலத்தில் நன்செய் வரி, மழைப்பொழிவு குறைந்து வறண்ட காலத்தில் புஞ்சை வரி என ஒரே நிலத்திற்கு இரு வகையான வரிகள் இப்பகுதியில் வசூலிக்கப்பட்டு நாயக்க அரசுக்கு இப்பகுதி வரி வசூலிப்பவர் மூலம் செலுத்தப்பட்டுள்ளது என்ற தகவல் இந்த கல்வெட்டில் கிடைத்து உள்ளதாகவும், இந்த வரியை வசூலிக்க காசடைய குடும்பத்திற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டு இருந்ததாகவும், இந்த கல்வெட்டின் எழுத்தை கொண்டு பார்க்கும்போது இக்கல்வெட்டு 17 ம் நூற்றாண்டை சேர்ந்த நாயக்கர் காலத்துடையது எனவும் தெரிய வந்திருப்பதாக ஆய்வாளர்கள் கூறினர்.