ஆல் இங்கிலாந்து ஓபன் - மகளிர் ஒற்றையர் பிரிவில் அகனே யமகுச்சி சாம்பியன்
- இங்கிலாந்து நாட்டில் நடைபெற்று வரும் நடப்பு ஆண்டுக்கான ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் தொடருக்கான மகளிர் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார் ஜப்பான் நாட்டு வீராங்கனை அகனே யமகுச்சி.
- 43 நிமிடங்கள் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் தென் கொரிய வீராங்கனை AN Seyoung-யை வீழ்த்தியுள்ளார். 21-15, 21-15 என நேர் செட் கணக்கில் அவர் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
- 24 வயதான யமகுச்சி இதற்கு முன்னதாக 12 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார். கடந்த 2021-இல் அவர் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றிருந்தார்.
ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் லக்ஷயா சென் இறுதிப் போட்டியில் தோல்வி
- பிரிட்டனில் உள்ள பர்மிங்காம் நகரில் நடைபெற்று வந்த ஆல் இங்கிலாந்து ஓபன் பேட்மிண்டன் சாம்பியஷிப் போட்டியில் இன்று இந்திய வீரர் லக்சயா சென்னும் டென்மார்க் வீரர் விக்டோர் அக்செல்செனும் களம் கண்டனர்.
- இதில் இந்திய வீரர் லக்சயா சென்னை விக்டோர் 21 - 10, 21 - 15 என்ற கணக்கில் தோற்கடித்தார். இறுதி போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நுழைந்திருக்கும் நான்காவது இந்தியர் இவர்.
- இவருக்கு முன்னதாக இந்தியாவின் பிரகாஷ் நாத், பிரகாஷ் படுகோன், புல்லேலா கோபிசாந்த் ஆகிய மூவர் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளனர்.
- படுகோன் மற்றும் கோபிசந்த் ஆகிய இருவர் மட்டுமே இந்த தொடரை வென்ற இந்தியர்கள் என்ற சிறப்பை பெற்றுள்ளனர். படுகோன் 1980ஆம் ஆண்டிலும் கோபிசந்த் 2001ஆம் ஆண்டிலும் இந்த வெற்றியைப் பெற்றனர்.
- உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க பாஜ எம்எல்ஏ.க்கள் கூட்டம் இன்று டேராடூனில் நடக்கிறது. ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடக்கும் இதில், புதிய முதல்வர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
- மணிப்பூர் மாநிலம், இம்பாலில் நடைபெற்ற நேற்று நடைபெற்ற பாஜ சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டத்தில் முதல்வராக பைரன் சிங் 2வது முறையாக தேர்வு செய்யப்பட்டார்.