Type Here to Get Search Results !

நரசிங்கம்பேட்டை நாதஸ்வரம் கிடைத்தது புவிசார் குறியீடு / GI TAG FOR NARASINGAM PETTAI NATHASWARAM

 

TAMIL
  • தென்னிந்தியாவின் கலாசாரம் மற்றும் சங்கீத கோட்டையாக திகழும், தஞ்சாவூர் மாவட்டத்தில், 17ம் நுாற்றாண்டு முதல், நாதஸ்வர இசைக் கருவி பயன்பாட்டில் இருந்து வருகிறது. 
  • 1955ம் ஆண்டுக்கு முன், 'பிரதி மத்தியமம் ஸ்வரம்' கொண்டு தான் நாதஸ்வரத்தில் தாய் ராகங்கள் வாசிக்கப்பட்டன. பின், 1955ம் ஆண்டு, தஞ்சாவூர் மாவட்டம், நரசிங்கம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ரங்கநாத ஆச்சாரி என்ற கைவினை கலைஞர், நாதஸ்வரத்தில் 'சுத்த மத்தியமம் ஸ்வரம்' கண்டுபிடித்து, அதை நாதஸ்வர கருவியாக உருவாக்கினார்.
  • இதை எளிதாக இசைக்க முடிந்ததால், நாதஸ்வர இசை வளர்ச்சிக்கு இக்கருவி பெரிதும் உதவியது. இந்த நாதஸ்வர கருவிக்கு, 158 நாடுகளில் அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது.
  • ராஜரத்தினம் பிள்ளை, காருக்குறிச்சி அருணாசலம் உட்பட புகழ் பெற்ற நாதஸ்வர வித்வான்களும், நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை வாசித்து பெரும் புகழ் பெற்றனர். தற்போது, 15 குடும்பத்தினர் மட்டுமே நாதஸ்வரம் வடிவமைத்து வருகின்றனர்.
  • நரசிங்கம்பேட்டையில் ஆச்சா மரங்களை, 2.5 அடி நீளத்தில் வெட்டி, அதை கடைந்து, உள் துவாரம் இட்டு, 12 துளைகள் மிகவும் கவனமாக உருவாக்கப்படுகின்றன.
  • நாதஸ்வரத்துக்கு 2014ம் ஆண்டு ஜன., 31ல், புவிசார் குறியீடு கேட்டு, தஞ்சாவூர் இசைக் கருவிகள் உற்பத்தி மற்றும் குடிசைத் தொழில் கூட்டுறவு சங்கத்துக்காக விண்ணப்பிக்கப்பட்டது. 
  • தொடர்ந்து எட்டு ஆண்டுகள் போராட்டத்துக்கு பின், தற்போது, புவிசார் குறியீடுக்கான சான்றிதழ் கிடைத்துள்ளது. நரசிங்கம்பேட்டை நாதஸ்வரத்தை சேர்த்து, தஞ்சை மாவட்டத்தில் இதுவரை 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
ENGLISH
  • Nataswara musical instrument has been in use since the 17th century in Thanjavur district, the cultural and musical stronghold of South India.
  • Prior to 1955, Thai ragas were recited in Nathaswaram with 'Prati Madhyam Swaram'. Then, in 1955, Ranganatha Achari, a craftsman from Narasingampettai village in Thanjavur district, invented the 'Sutta Madhyamam Swaram' in Nathaswaram and made it into a Nathaswara instrument.
  • The instrument greatly aided the development of Nataswara music as it was easily played. This Nataswara instrument is recognized in 158 countries.
  • Famous Nathaswara scholars including Rajaratnam Pillai and Karukurichi Arunachalam also became famous for reading Nathaswara in Narasingampet. Currently, only 15 families are designing Nataswaram.
  • At Narasingampettai the acacia trees are cut to a length of 2.5 feet, cut into it, and made into an inner hole, with 12 holes made very carefully.
  • On January 31, 2014, Nathaswaram applied for the Thanjavur Musical Instrument Manufacturing and Cottage Industry Co-operative Society, asking for a geographical code.
  • After eight years of struggle, it is now certified for a geographical code. Geographical code has been obtained for 10 items so far in Tanjore district, including Nathaswaram in Narasingampettai

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel